சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்
சாதத் ஹசன் மண்ட்டோதமிழில் : உதயசங்கர்
உருது இலக்கியத்தின் உன்னதமான படைப்பாளியான மண்ட்டோ தன்னை அழித்து தன் படைப்புகளை உருவாக்கியவர். மேட்டுக்குடி மக்களின் வியர்வைப்புழுக்கத்தையே இலக்கியமாகக் கருதியிருந்த நிலையில் மண்ட்டோ அவருடைய படைப்புகளில் சாதாரண அடித்தட்டு மக்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள் என்று சாமானியர்களின் வாழ்வை, அவர்கள படும் அவலங்களை வலுவாக வாசகமனம் அதிரும்படி சொன்னவர். சமன்குலைந்த சமூத்தில் சமன் குலையச்செய்யும் எழுத்தே உண்மையான எழுத்து. அப்படிப்பட்ட சமன் குலையச் செய்யும் எழுத்துகளே வாசகனைத் தொந்தரவு செய்து இந்த நிலை மாற ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டுகிறது. மண்ட்டோ தன் வாழ்நாள் முழுவதும் எல்லா அதிகாரங்களையும் எதிர்த்தவன். நிறுவனங்களுக்கு எதிரானவன். நிறுவப்பட்ட எல்லா கருத்துகளுக்கும் எதிராகக் கலகம் செய்தவன். எப்போதும் சாதாரண அடித்தட்டு மக்களின் பக்கமே நின்று குரல் கொடுத்தவன்.
•
விலை : ரூ. 145/-

No comments:
Post a Comment