சிட்டு(குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்)
ஆதி. வள்ளியப்பன்10 ஆண்டுகளுக்கு முன்புவரை நகரங்களில் பார்க்கும் இடங்களிலெல்லாம் படபடவென்று பறந்துகொண்டிருந்த சிட்டுக்குருவிகளை இன்று பார்க்க முடிகிறதா என்று கேட்டால், "இல்லை" என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகள் கடைசியாக எப்போது கூடு வைத்தன? நம் தெருவில் சிட்டுக்குருவிகளைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு? என்ற கேள்விகளுக்கு இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியுள்ளது.
சிட்டுக்குருவிகள் இனம் அழியும் ஆபத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியாவிலும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்று ஒரு தரப்பும், இல்லை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று உயிரியல் விஞ்ஞானிகள் தரப்பும் மோதிக்கொண்டிருக்கின்றன. சிட்டுக்குருவிகள் அருகி வருவதற்கான அறிவியல் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
பிரிட்டனில் சிட்டுக்குருவிகள் அழிவிற்கான காரணங்கள் ஆராயப்பட்டு அதற்கான காரணங்கள் ஓரளவுக்குக் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் அப்படிப்பட்ட விரிவான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
(புத்தகத்திலிருந்து....)
•
விலை : ரூ. 80/-

No comments:
Post a Comment