Tuesday, December 25, 2018

கல்வி வியாபாரம்

வாங்க சார் வாங்க....
















கேள்வி கேட்க கற்றுத்தர வேண்டிய கல்வி இன்று கேள்விக்கிடமின்றி மக்களை காயடிக்கப் பயன்படுகிறது. நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தனியார் மயத்தின் கோரக்கரங்களை அழிக்காமல் நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கல்வியையோ எதிர்காலத்தையோ வழங்கிட முடியாது.
•

விலை : ரூ. 20/-



உனக்குப் படிக்கத் தெரியாது
கமலாலயன்



















புத்தகம் ஒன்று ஒரு சிறுபெண்ணுடன் வாழ்க்கை நெடுக பேசிக் கொண்டே வருகிறது. அந்தப் புத்தகம் சிறு வயதில் அவளிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம்.

கறுப்பினத்தோருக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்த அமெரிக்கச் சஊகத்தில் உனக்குப் படிக்கத் தெரியாது என்று தன் நெஞ்சில் அடிவாங்கிய ஒரு பெண் கறுப்பினக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை உருவாக்கியே தீருவது என்று கனவுகளுடன் நடக்கிறாள்.

உலகெங்கும் எங்கெங்கோ மூலைகளில் சிதறிக்கிடக்கும் கல்வி மறுக்கப்பட்டச் சமூகங்களின் குரல் மேரியினுடையது.
•

விலை : ரூ. 70/-





விண்வெளிக்கு ஒரு புறவழிச்சாலை

உலக விஞ்ஞானச் சிறுகதைகள் / தமிழில் : இரா. நடராசன்



















அறிவியல் கதைகள் மற்ற கோள்கள், உலகங்கள் பற்றிப் பேசுகின்றன. சிலவற்றில் மனிதன் அங்கே போகிறான் சிலவற்றில் அங்கிருந்து ஜீவன்கள் இங்கே வருகின்றன. ஆனால் பொதுவில் இவை அனைத்துமே மனிதத் தேடலின் கதைகள்தான். விஞ்ஞானக் கதை உலகம் பலவற்றை சாதித்துள்ளது. இன்றைய செல்போனும், இணைய தளமும் விஞ்ஞானக் கதையாடல்களில் அறுபது வருடங்களுக்கு முன்பே பதிவாகிவிட்டன.
•
விலை : ரூ. 40/-






கல்வியில் நாடகம்

பிரளயன்

















வகுப்பறைச் சூழலில் புதிய எல்லைகளைக் கண்டறிய முயலும் போதனா முறையின் ஒரு பகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன்வைக்கப்படுகிறது. ஒரு பாடத்தை, சமூகவியல் உண்மைகளை பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டறியக்கூடிய வாய்ப்பை இந்த நாடக முயற்சி வழங்குகிறது.
•

விலை : ரூ. 30/-



சிதைவுகள்

சினுவ அச்சிபி  /  தமிழில் : ச. வின்சென்ட்



















1958ல் வெளிவந்த Things Fall Apart (சிதைவுகள்) சினுவ அச்சிபியின் முதல் நாவல். இது உலகின் கவனத்தை ஈர்த்த முதல் ஆப்பிரிக்க நாவல் என்று சொல்லலாம். எனவே தான் அச்சிபி ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை எனறு அழைக்கப்படுகிறார். ஆப்பிரிக்க இனத்திற்கென்று ஒரு பண்பாடு உண்டு. வரலாறு உண்டு. இலக்கியம் உண்டு என்று வெள்ளை உலகிற்கு காட்டுவதைத் தன் முதற் பணியாக கொண்ட அச்சிபி தன் நாட்டில் குடியேறிய வெள்ளையர்களை அவர்கள் மொழியிலேயே எதிர் கொண்டார். இன்றைய ஆப்பிரிக்க நிலத்தில் சரி பாதிக்கும் மேலான மக்கள் கிறிஸ்துவத்திற்குள்ளும், இஸ்லாத்திற்குள்ளும் அடைக்கலம் ஆகி விட அவர்களின் கதைகளும் கடவுள்களும் ஆவிகளும் இடமற்று அலைவதையே சிதைவுகள் ஆக்கியிருக்கிறார் சினுவ அச்சிபி.
•

விலை : ரூ. 150/-





காடுகளுக்காக ஒரு போராட்டம்

சிக்கோ மென்டிஸ் - தமிழில் : ச. வின்சென்ட்


















நில்லுங்கள், போதும். கொலைகள் போதும். அழிவும் துன்பமும் வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள், சுற்றுச்சூழல் நாசங்கள் போதும். நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம். அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். சிக்கோ மென்டிஸின் உயிர்த்தியாகம் வீண்போகக்கூடாது. அமேசானின் மழைக்காடுகளைக் காக்க அவர் போராடினார். எல்லாக் காடுகளையும் காட்டுயிர்களையும் காக்க நாம் போராடுவோம்.
•

விலை : ரூ. 120/-

மண்ணின் மரங்கள்
கா. கார்த்திக் - தமிழ்தாசன்



















படிமலர்ச்சியில் உருவான இயல்தாவரங்களை நம்பிதான் மண்ணில் வாழும் பூச்சி, பறவை, விலங்கு என பல்வேறு உயிரினங்கள் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்து வந்திருக்கிறது. சாலையோரத்தில் இருக்கிற மருதம், இச்சி, நாவல் மரங்களை சாலை விரிவாக்க அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக வெட்டிச்சாயத்துவிட்டு, அதற்கு பதிலாக இங்குள்ள பல்லுயிர்களுக்கு பழக்கப்படாத தூங்குமூஞ்சி வாகை, குல்முகர் போன்ற அயல்தாவர மரவகைகள்தான் நடப்படுகிறது. இதனால் மருதம், இச்சி, நாவல் போன்ற இயல்தாவர மரங்களில் பட்டையை, பூவை, இலையை, காயை, கனியை உண்டு வாழ்ந்து வந்த உயிரினங்கள் உணவற்று அழிந்துபோகிறது. ஆதலால், மண்ணின் மரங்களை நட வேண்டும் என்று சொல்வது இனவாதம் அல்ல, இயற்கை வாதம்.
•

விலை : ரூ. 75/-






நிழல்களின் உரையாடல்

மார்த்தா த்ராபா / தமிழில் : அமரந்த்தா



















அரசு வன்முறையின் வலி நிறைந்த வாழ்வையும் எதிர்ப்பரசியலின் வலிமைமிக்க படிமங்களையும் ஒவ்வொரு பக்கத்திலும் உச்சபட்ச ஆற்றலோடு வெளிப்படுத்தியிருக்கிறார் த்ராபா.


மார்த்தாவை எழுத்தாளர் என்று கூறுவதைவிட அவர் லத்தீன் அமெரிக்க மக்களின் மனசாட்சி என்று கூறுவது பொருத்தமானது.

•

விலை : ரூ.  250/-




கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்

நக்கீரன்


















தங்கமும் எண்ணெயும் சேர்ந்தால் என்ன மதிப்போ அத்தகைய மதிப்பு எதிர்காலத்தில் நீருக்குத்தான். எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு நீருக்கு நாம் உரிமையாளர்களாகிவிட வேண்டும். அது நமக்கும் அதிகாரம் அளிக்கும்.
•
விலை  : ரூ.20/-





முதல் ஆசிரியர்

சிங்கிஸ் ஐத்மாத்தவ்



















ஊருக்கு வெளியே, மலை முகட்டில் கைவிடப்பட்ட ஒரு பழைய குதிரைக் கொட்டியே பள்ளிக் கூடமாகிறது. ஊரே கேலிசெய்து புறக்கணிக்கிறது. ஆரம்பத்தில் கவலையேபடாமல், அல்டினாய் போன்ற சில குழந்தைகளைத் திரட்டி மாணவர்கள் ஆக உட்காரச் செய்கிறான் தூய்சன். அந்த குதிரைக் கொட்டடியில் தூய்சன் தொடங்கி வைக்கிற அப்பள்ளியில், ஒரு புதிய ஆச்சரியமான ஓர் உலக குக்குலெவ் கிராமத்துக் குழந்தைகளுக்கு அறிமுகமாகிறது. அல்டினாயின் ஆர்வம், கற்பதில் காட்டும் வேக முனைப்பு கண்டு அவளைப் பக்கத்து நகருக்கு உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெறுவதற்கென அழைத்துச் செல்கிறான் தூய்சன்.
•

விலை : ரூ. 50/-








விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்

கோ. நம்மாழ்வார் 



















நஞ்சில்லா இயற்கை வேளாண்மையை தமிழகமெங்கும் பரவலாக கவனப்படுத்திய கோ. நம்மாழ்வார் ஐயாவின் நேர்காணல்
•
விலை : ரூ.50/-






எல்லா உயிரும் பசி தீர்க

கோ. நம்மாழ்வார்



















இந்த நாட்டிலுள்ள மக்கள் யாரும் சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காக பல பேரியக்கங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அதைத் தாண்டியும் மக்களை சிந்திக்க வைத்தே தீருவோம் என்று உறுதிகொண்டு மக்களுக்காக வேலை செய்ய, மக்களிலிருந்தே பலர் புறப்பட்டு வருகிறார்கள்.

உலகத்தில் விளைவதை வைத்து உலகிலுள்ள எல்லா மனிதர்களும் பசியாறலாம். இந்தியாவில் விளையும் உணவு இந்தியாவில் உள்ள அனைவரும் பசியாறவும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் போதுமானது. ஆனால் தற்கால தரவுகளின்படி தினமும் 32 கோடி இந்தியர்கள் இரவில் உணவில்லாமல் உறங்கச் செல்கிறார்கள். எனவே வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர்தான், உண்டீர் அல்ல.....
(புத்தகத்திலிருந்து.....)
•

விலை : ரூ. 40/-


இவான்

விளதீமிர் பகமோலவ் / தமிழில் : முகமது செரீப்


















போரைப்பற்றி அறியாத மக்களை இந்தப் புத்தகம் திகைக்க வைக்கும். தனது வீட்டுப்பாடங்களைச் செய்வதும் நண்பர்களுடன் விளையாடுவதுமாக இருந்த பள்ளி செல்லும் சிறுவன் போரின் கடும் சோதனைகளுக்கு ஆளாகி ஒரு போர் வீரனைப்போல மடிகிறான். இதனை மக்கள் உண்மையானது இல்லை என்றே கருதுவார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தின் முக்கிய கதாபாத்திரம் பற்றி, சிறுவன் இவானைப் பற்றி நாம் அறியக்கூடியது எல்லாமே உண்மைதான்.
•

விலை : ரூ. 60/-



என்ன சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்?

இயற்கை குமார் (ஹீலர்)


















பசித்துச் சாப்பிட வேண்டும். ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். உணவில் உள்ள சுவைகள் நாக்கால் ருசிக்கப்பட்டு உணவு சக்கையான பிறகு விழுங்க வேண்டும். இப்படி சாப்பிடும்போது உணவானது வயிற்றிலும், சிறுகுடலிலும் முழுமையாக ஜீரணிக்கப்படும். இத்தகைய ஜீரணத்தின் இறுதியில் கிடைக்கின்ற ஊட்டச்சத்துக்கள் தரமிக்கவையாக அமைகின்றன. இந்த தரமிக்க ஊட்டச்சத்துக்களே நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.
•

விலை : ரூ. 30/-


சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்

தொகுப்பும் மொழியாக்கமும் : அமரந்த்தா



















லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் சிறுகதை இலக்கியம் அதன் பிரதிநிதித்துவத்தை இத்தொகுப்பு வழியாக முழுமையாக எட்டியுள்ளது.
•

விலை : ரூ. 400/-


மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக

சாண்ட்ரா போஸ்டல் / தமிழில் : பூவுலகின் நண்பர்கள்



















இந்தியாவில் நீர்வளமும், நிலவளமும் பண்டைக் காலத்தில் மிகவும் சிளறந்த முறையில் இருந்தன. இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு, சராசரியாகப் பொழியும் மழையின் அளவு 1250 மி.மீ. உலகத்தில் சராசரியாக பொழியும் (900 மிமீ) மழையைவிட இது அதிக அளவாகும். ஆனால், இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நிலவளத்திலும் நீர்வளத்திலும் பாதிக்கும் சற்று அதிகமே தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்றது. எனவே, தமிழர்களாகிய நாம் மற்றவர்களைவிட நிலம் மற்றும் நீரை மிகவும் நல்ல முறையில் - சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.
•

விலை : ரூ. 70/-


உணவென்றும் நஞ்சென்றும் ஒன்று

அருண்குமார் தங்கராஜ்



















வருங்கால சந்ததியினருக்கு அழகான, அமைதியான வாழ்க்கையை விட்டுவிட்டு செல்கிறோமா? அல்லது மிகக் கொடிய, வாழும் சூழலற்ற உலகை பரிசாக தரப்போகிறோமா? என்ற வினாவிற்கு விடையானதே இந்த புத்தகம். சராசரி மனிதர்களுக்குத் தெரியாமலேயே அரசுகள் செய்த தவறுகளுக்கும், பெருநிறுவனம் செய்யக்கூடிய முறைகேடுகளுக்கும் அப்பாவி மனிதர்களே பலியாகிறார்கள். மிக முக்கிய விடயங்களை, நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்துகளை பற்றிய சிறு கட்டுரைகளின் தொகுப்புகளே இந்தப் புத்தகம். அடுத்து வரக்கூடிய தலைமுறையாவது இதை பற்றிய அடிப்படை புரிதல்களை உள்வாங்கக்கூடிய நோக்கத்தில் எழுதப்பட்டவையே இந்த கட்டுரைகள்.
•

விலை : ரூ. 80/-




குழந்தைகள் கதைகள்

வை. கோவிந்தன்



















"அணில்" எனும் குழந்தைப் பத்திரிக்கை நடத்தியும் சிறந்த தமிழ் புத்தகங்கள் வெளியிட்டும் வந்தவர் வை. கோவிந்தன்.

"மரம் பறந்தது", "அணில் அண்ணன் கதைகள்" போன்ற கதை புத்தகங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன.

விஞ்ஞான அறிவும் சிந்தனை வளமும் குழந்தைகளுக்கு வளர எல்லோரும் உதவ வேண்டும் என விரும்பியவர்.

சிறார் இலக்கியத்தின் முன்னோடியான வை. கோவிந்தன் அவர்கள் 1970களில் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.
•

விலை : ரூ.35/-



Sunday, December 23, 2018

அவர்கள் மூன்று பேர்

சீன எழுத்தாளர்களின் சிறந்த சிறார் கதைகள்
தமிழில்  : கௌரி நீலமேகம்



















சீன வளர்இளம் பருவத்தினரைப் பற்றிய சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. மாவோ தலைமையிலான சீனப்புரட்சியும் அதன் பிறகு அவர் முன்னெடுத்த கலாசாரப் புரட்சியும் குழந்தைகளிடம் அரும்பண்புகளை விதைத்தன. இந்தக் கதைகள் அச்சூழலில் உருவான உண்மைக் கதைகள் என்பதால் மனதிற்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. இத்தகு சிறப்புகளால் இக்கதைத் தொகுப்பு சீன சிறுவர் புத்தகங்களில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த சிறார் இலக்கியக் கருவூலம் முதல் முறையாக தமிழில் வெளிவருகிறது.
•

விலை : ரூ. 95/-

இந்தியக் கல்விப் போராளிகள்

ஆயிஷா. இரா. நடராசன்



















மெக்காலே மற்றும் குருகுலக் கல்வியின் சிக்கல்களிலிருந்து விடுபட்டு அனைவருக்குமான கல்வி வடிவத்தைப் பெற இரண்டு நுற்றாண்டுகளாக போராடிய 23 பேரைப் பற்றிய விரிவான  அறிமுகம்.
•
விலை : ரூ. 100/-




பெட்ரண்ட் ரஸல் கல்விச் சிந்தனைகள்

தமிழில் : சுப்பாராவ், சாமி, ரமேஸ்



















குழந்தைப் பருவத்தின் ஆரம்பகாலம் மருத்துவ ரீதியாகவும் மனரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இவை இரண்டும் நெருக்கமாய்ப் பின்னிப் பிணைந்தவை. உதாரமாக அச்சவுணர்வு குழந்தைக்கு மூச்சுத்திணறலை உருவாக்குகிறது. இந்த மூச்சுத்திணறல் உள்ளதால் மருத்துவ ஞானம் சிறிதும் இல்லாமல் குழந்தையின் குணநலன்களை வடிவப்பதோ, அதன் உளவியலை அறியாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோ இயலாத காரியம். இந்த இரு அம்சங்களிலும், நாம் அறிய வேண்டியவை நிறைய உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நாம் காலம்காலமாகப் பேணிவரும் விசயங்களுக்கு எதிரானவை. உதாரணத்திற்கு ஒழுக்கத்தை எடுத்துக்கொள்வோம். இதில் முக்கியமான விதி : விட்டுக்கொடுக்கவும் கூடாது, ஆனால் தண்டிக்கவும் கூடாது. சாதாரணப் பெற்றோர் சில சமயங்களில் பிரச்சினை தீர்ந்தால் சரி என விட்டுக்கொடுப்பதும் சில சமயம் கோபத்தில் தண்டிப்பதும் உண்டு. ஆனால் வெறற் பெற சரியான வழி, பொறுமையையும் எடுத்துக் கூறுவதையும் சரியான விகிதத்தில் செய்யும் கடினமான வழியாகும்.
•

விலை : ரூ.130/-





மௌன வசந்தம்

ரெய்ச்சல் கார்சன் / தமிழில் : ச. வின்சென்ட்


















இந்த சிறப்புமிக்க, சர்ச்சைக்குரிய புத்தகத்தில் ரெய்ச்சல் கார்சன் மனிதனின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மிக முக்கியமான ஆனால் சந்தேகத்திற்குரிய தன்மையை மிக ஆணித்தரமாக உயிரியல் பயிற்சி மற்றும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்தி விளக்கியிருக்கிறார். நச்சுத்தன்மையுள்ள இரசாயனப் பொருள்களை அமெரிக்காவின் கிராமப்புறங்களில் பயன்படுத்துவது மற்றும் பூச்சிக்கொல்லிகள், பூஞ்சக் காளான் கொல்லிகள், களைக்கொல்லிகள் ஆகியவற்றால் வன உயிரினங்கள் அழிக்கப்படுவது ஆகியவற்றைப் பற்றிய கதை இது.
•
விலை : ரூ. 200/-

பால் அரசியல்

தாய்ப்பால் / புட்டிப்பால் /  மாட்டுப்பால்
பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்
நக்கீரன்


















தம் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப்பால் சுரப்பதில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மைநிலை அல்ல. எந்தவொரு தாய்க்கும் அவருடைய குழந்தைக்குத் தேவையான அளவுக்குப் பால் சுரக்கும் என்பதுதான் இயற்கை. ஆனால் ஒரு தாயை அப்படி நினைக்க வைத்ததன் பின்னே மறைந்திருக்கும் அரசியலை அத்தாயே அறியமாட்டார். அதுமட்டுமன்றி தாய்ப்பால் சுரப்பதை உண்மையிலேயே குறைக்கச் செய்வதன் பின்னணியில் பெரும் மருத்துவ அரசியல் மறைந்து இருக்கிறது.
•
விலை : ரூ. 70/-



ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள்

தமிழில் : யூமா வாசுகி



















ஒரே மகனாக எளிய குடும்பத்தில் பிறந்த ஆண்டர்சனுக்கு அவரது தந்தை சொல்லும் நாட்டுப்புறக்கதைகள் மேல் மிகுந்த ஆர்வம். அவரது தந்தை அறிமுகப்படுத்திய அரேபியக்கதைகள் படிப்பதில் நேரத்தை செலவிட்டுவந்தார். அவரது பன்னிரென்டாவது வயதில் தந்தை இறந்தர். பிறகு அவரது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அவரது பாட்டியின் தோட்டத்திற்கு செல்வதும் பாட்டியின் கதைகளைக் கேட்பதும் பொழுதுபோக்காக மாறின. அந்தத் தோட்டத்திலிருந்த பறவைகள், மலர்கள், வாத்துகளிடமிருந்தே தன்னுடைய கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கத் தொடங்கினார் ஆண்டர்சன்.

தேவதைக்கதைகளின் தந்தை என அழைக்கப்படும் ஆண்டர்சனின் கதைகள் 125 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
•

விலை : ரூ. 195/-


தமிழர் நாட்டு விளையாட்டுகள்

இரா. பாலசுப்ரமணியம்




















தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளின் விரிவான தொகுப்பு. விளக்கப் படங்கள், பாடல்களுடன் 300 பக்கங்களுக்குமேல் கொண்ட தொகுப்பு.
•

விலை ரூ. 95/-







சுங்கான்

யூரிய் நகீபின் / தமிழில் : க. சுப்ரமணியம்



















"சுங்கான்" என்பது ஒரு ருஷ்யப் பண்ணைப் பையனின் உண்மை நட்பைப் பெற்றுக்கொண்ட ஜிப்ஸிச் சிறுவனைப் பற்றிய உருக்கமான கதையாகும். கொடுமையால் வாடி, வழித்துணையறியாது தவித்த ஜிப்ஸிகள் சோவியத் மக்களின் சகோதரப் பண்பினது உதவியால், முதல் ஜிப்ஸிக் கூட்டுப் பண்ணையை அமைத்து இன்ப வாழ்வைப் பெற்றனர். யூரிய் நகீபின் எழுதியுள்ள விளையாட்டுத்துறை பற்றிய கதைகளில் ஒன்று "வெற்றியாளன்" என்பது. சோவியத் குழந்தைகளைப் பற்றி யூரிய் நகீபின் எழுதியுள்ள கதைகளில் மிகச்சிறந்தது "அவனது இரகசியம்" என்பதாகும்.
•
விலை : ரூ. 50/-



அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

தமிழில் : ரா. கிருஷ்ணையா, பூ. சோமசுந்தரம்














மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறைத்துக் கொள்ள மனித குலம் தெரிந்து கொண்டுவிடுமாயின், மக்கள் மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டொழித்து விடுவார்களே, இதுகாறும் மக்கள் எவற்றில் தமக்கு எல்லாக்கேடுகளிடமிருந்தும் பாதுகாப்பு தேடிக்கொண்டார்களோ, எவற்றில் பேரின்பம் கிட்டுவதற்கான மார்க்கம் அமைந்திருக்கக் கண்டார்களோ அந்த மதத்தையும் தத்துவஞானத்தையும் விட்டுத் துறந்துவிடுவார்களே.
•

விலை : ரூ. 250/-











கதை சொல்லும் கலை 

முருகபூபதி



















கதை சொல்லல் என்பது போதனையல்ல ; மாறாக நிகழ்த்துதல். குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும். வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாச்சாரம் என பல்துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும், சுயசிந்தனை உள்ளதாகவும் மனதில் எளிதில் பதியக்கூடியதாகவும் இருக்கும்.
•

விலை : ரூ.15/-






உலகக் கல்வியாளர்கள்

இரா. நடராஜன் 



















புத்தகத்திலிருந்து ........

மாண்டிசோரி முறைப்படி நடப்பதாக கூறிக்கொள்ளும் நமது (ஆங்கில) நர்சரி பள்ளிகளுக்கும் மாண்டிசோரி அம்மையாருக்கும் சம்பந்தமே கிடையாது.

குழந்தைகளின் உரிமைகள் குறித்த 1924 பிரகடனத்தை ஆசிரியப் பயிற்சியில் பாடமாக வைக்க நம் கல்வித்துறை இன்றுவரை முன்வரவில்லை.

மாண்டிசோரி, ஜான் ஹோல்ட், ரெனெய் ஸாஸோ, பாவ்லோ ப்ரையிரே, ஸெலென்கோ, சார்லஸ் மைக்கேல் எபி, பாவ்லவ் மற்றும் ஜான் டூவி உள்ளிட்ட உலக அளவில் மாற்றுக்கல்வியை முன் மொழிந்த மாமனிதர்களை அறிமுகம் செய்கிறது இந்தப் புத்தகம்.
•

விலை : ரூ. 40/- 

குட்டி இளவரசன்

அந்த்வான் து செந்த் - எக்சுபெரி
தமிழில் : வெ. ஸ்ரீராம் - ச.மதனகல்யாணி



















அறிவாற்றலைப் புலப்படுத்த விரும்பும்போது சிறிது பொய் சொல்ல நேர்கிறது.  மனிதர்கள் பூமியில் சிறிது இடத்தில் மட்டுமே குடிபுகுந்திருக்கிறார்கள். பூமியில் இருக்கும் இருநுறு கோடி மக்களும் கூட்டத்தில் இருப்பதுபோல் கொஞ்சம் நெருக்கமாக நின்றார்களானால், அவர்கள் எல்லோரும் இருபது மைல் நீளம், இருபது மைல் அகலம் உள்ள மைதானத்தில் அடங்கிவிடுவார்கள். பெரியவர்கள் நிச்சயமாக இதை நம்பமாட்டார்கள். நிறைய இடத்தை அவர்கள் எடுத்துக்கொள்வதாக நினைத்துக்கொள்கிறார்கள். பவோபாப் மரங்களைப் போல் தங்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களை கணக்கிடச் சொல்லிப்பாருங்கள். அவர்கள் எண்களை ஆராதிப்பார்கள். ஆனால் இதை உங்கள் மீது சுமத்திக்கொண்டு நேரத்தைச் செலவளிக்காதீர்கள். அது வீண். என்னை நம்புங்கள்.

புத்தகத்திலிருந்து........
•

விலை : ரூ. 110/-







மகிழ்ச்சியான இளவரசன்

உலகப் புகழ் பெற்ற சிறார் கதைகள்
ஆஸ்கார் வைல்ட் / தமிழில் : யூமா வாசுகி



















இயற்கையின் விருட்சங்களிலிருந்து புனைவுருக்கொள்ளும் விநோத உலகின் சிருஷ்டிகள் குழந்தைகளின் மொழியில் உறவாடுவதே இத்தொகுப்பிலுள்ள சிறுவர் கதைகளாக வடிவங்கொண்டுள்ளன.

நிலத்தில் முளைத்த புல்லுடன் காதல் கொள்ளும் பேசும் குருவி, தங்கமும் வைரமும் பதிக்கப்பெற்ற இளவரசனின் சிலை, பாடும் புள்ளினங்கள், மாய உருக்கொள்ளும் மனிதர்களென குழந்தைகளை குதூகலப்படுத்தும் அநேக பாத்திரங்கள் இதில் உலவுகின்றன. குழந்தைகளின் மனவெளியில் இயல்பாய் சிநேகங்கொள்ளும் இக்கதையுருக்கள் அவர்களின் மனதிலும் உடலிலும் சிறகுகளைக் கூட்டிப் பறக்கச் செய்யும் அற்புதத்தை நிகழ்த்தும் திறன்கொண்டவை.
•

விலை : ரூ. 70/-





அழகான அம்மா

ரஷ்ய சிறார் கதைகள் /  தமிழில் : யூமா வாசுகி



















சிறாரின் மீது நேசக்கனிவும் அவர்களின் நல்லிதயம் வாழ்வில் பெருமலர்ச்சியாய்த் திகழ வேண்டுமென்ற ஆழ்ந்த மோகமும் கொண்ட ரஷ்ய எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். இந்தக் கதைகளுடன் கலக்கும் ஒவ்வொரு வாசகரும் இதை மனமார்ந்து உணர்வார்கள். ஏற்றப்பட்டு எத்தனையோ காலம் கடந்த பின்பும் இன்றும் மங்காத சுடர்களாக ஒளி பரப்பும் கதைகள். வாசிப்பின் வழியில் நாம், கதை பயிலும் மனம் வாய்த்தது எவ்வளவு அதிர்ஷ்டகரமானதென்று நினைத்துப்போவோம். நல்ல கதைகள் நம் உற்ற உறவுகள்தானே. நம் பயணப் பாதையைச் செப்பனிடுபவைதானே.
•

விலை : ரூ. 290/-












பினாச்சியோ

கார்லோ கொலோடி / தமிழில் : யூமா வாசுகி


















உலக இலக்கியத்தின் சிறந்த நாவல்களில் ஒன்று. சாரமும் கற்பனை சௌந்தர்யமும் பின்னிப் பிணைந்ததொரு இலக்கியப் படைப்பு. சிறாரையும் பெரியோர்களையும் வாழ்வின் புது வெளிகளுக்கு இட்டுச்செல்லும் படைப்பு.
•

விலை : ரூ. 125/-



தமிழ்க்குழந்தை இலக்கியம்

சுகுமாரன் - கட்டுரைகள்


















மாறிவரும் கலாசார சூழலில் குழந்தை இலக்கியத்தின் அவசியத் தேவையை அதன் பண்பு ரீதியான முக்கியத்துவத்தோடு அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

50 ஆண்டுகளுக்கு முன்பாக சிறுவர் இலக்கியத்தில் நிகழ்ந்த சாதனைகள், வெளிவந்த படைப்புகள், சிறுவர் இதழ்கள் என்பவற்றை முன்வைத்து இன்றைய படைப்பு நிலைமைகளோடு ஒப்பிட்டு விவாதிக்கின்றன இக்கட்டுரைகள். குழந்தை புத்தகங்களில் மேலதிகமான படைப்பாளிகளின் பங்களிப்பை கோருவதோடு சில படைப்புகளின் மீதான விரிவான பார்வைகளும் இந்தப் புத்தகத்தில் முன்வைக்கப்படுகிறது.
•

விலை : ரூ. 115/-






குழந்தைகளும் குட்டிகளும்

ஓல்கா பெரோவ்ஸ்கயா  /  தமிழில் : ருக்மணி


















தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிரான்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்புப் பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு புகட்டுகின்றனர். அவற்றை தங்களோடு விளையாடப் பழக்குகின்றனர். அவை நோயுறும்போது கவலை கொள்கின்றனர். மாற்றாக அந்த விலங்குகளும் சிறுமிகளோடும் அவர்கள்தம் தாய தந்தையரோடும் தங்களது விசுவாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தி குதூகலித்துக் கொள்கின்றன.

இவற்றை வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் எல்லா விலங்குகளோடும் இதுவரையிருந்திராத அன்பும் தோழமை உணர்வும் பொங்கிப் பிரவாகிப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
•

விலை : ரூ. 180/-









குழந்தைகளைக் கொண்டாடுவோம்

அமனஷ்வீலி / தமிழில் : இரா. பாஸ்கரன்



















குழந்தைகளின் குறும்புகளுக்கு நாம் ஏன் எதிர்ப்பாய் இருக்கிறோம்? குறும்பு என்றால் என்ன? இந்தக் குறும்புக்காரர்கள் யார் என்று நமக்கு நன்றாகத் தெரியாதது தான் இதற்குக் காரணமென்று எனக்குத் தோன்றுகிறது.


குறும்புக்காரக் குழந்தைகள் உற்சாகமானவர்கள், ஒளிவுமறைவற்றவர்கள், இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. மற்றவர்கள் உற்சாகமாக ஓடியாட, தற்காப்பில் ஈடுபட குறும்புக்காரக் குழந்தைகள் உதவுகின்றனர்.

குறும்புக்காரக் குழந்தைகள் நுண்ணறிவு வாய்ந்தவர்கள். குறும்புக்காரக் குழந்தைகளிடம் சுய வளர்ச்சி, சுய இயக்க உணர்வுகள் அதிகமாக இருக்கும். குறும்புக்காரக் குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். 

குழந்தைகளின் குறும்புகள் வாழ்க்கையின் மீது அவர்களுக்குள்ள நேயத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் பாலுள்ள நாட்டம், அவர்களுடைய மூளைத்திறமைகள் மற்றும் உடல் பலத்தின் இணைப்பு.

(புத்தகத்திலிருந்து......)
•

விலை : ரூ. 120/-


அம்பேத்கர் கல்விச் சிந்தனைகள்

தொகுப்பு : ரவிக்குமார்



















1813ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த கல்விக் கொள்கையை அம்பேத்கர் விரிவாக இதில் ஆராய்ந்திருக்கிறார். கல்வி நிலையை அறிவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஹண்டர் கமிஷன் அறிக்கையில் தரப்பட்டிருந்த புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துக்காட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக அரசு செய்ய வேண்டியவற்றை அந்த மனுவில் அவர் விவரித்துள்ளார்.

சைனம் கமிஷன் முன்பு அம்பேத்கர் சமர்ப்பித்துள்ள மனுவின் இறுதியில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் சமச்சீர் கல்வி குறித்து விவாதங்கள் நடக்கும் சூழலோடு முக்கியத்துவம் பெறுபவை.
•

விலை : ரூ. 60/-




உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பது

சிமாமண்டா என்கோஜி அடிச்சீ / தமிழில் : வடகரை ரவிச்சந்திரன்
























ஊதா நிறச்செம்பருத்தி, ஒரு மஞ்சள் சூரியனின் பாதி ஆகிய பெருவெற்றி பெற்ற நாவல்கள் எழுதிய பல சர்வதேசப் பரிசுகளைப் பெற்ற நைஜீரிய எழுத்தாளர். இது முதல்முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்படும் சிமாமண்டா என்கோஜி அடிச்சீயின் சிறுகதைத் தொகுப்பு. அவர் கதை சொல்லல் ஒரு பறவை பாடுதலைப் போன்ற எளிய செயல் எனத் தோன்றச் செய்துவிடுகிறார். புத்தகம் முழுவதும் எழுத்தில் உள்ள உயிர்த்துடிப்பு, உங்களை புத்தகத்தைக் கீழே வைக்கவிடாது பக்கங்களைப் புரட்டச் செய்கின்றது. பக்கங்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் மெல்லிய எள்ளல் தொனியுடன் கூடிய மதிநுட்பம் புத்தகத்துக்கு உயிரோட்டத்தை அளிக்கின்றது.
•

விலை : ரூ. 250/-


யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால் .....

கமலா பாசின் / தமிழில் : சாலை செல்வம்


















குழந்தைகள். பட்டாம்பூச்சிகள் போல அக, புற மென்மையும் துடிப்பும் அடுத்தடுத்த விசயங்களுக்குப் பயணிக்கும் ஆர்வமும் உடையவர்கள். சிறிய மனிதர்கள் என்றாலும் அவர்களுக்கு அவர்களது உடல் மனம் குறித்த அடிப்படை உரிமையுண்டு. அவர்களைக் கசக்கும், அடிக்கும் கண்ணியமற்ற உறவுக்கு உள்ளாக்கும், ஏன், அவர்களுக்கு விருப்பமில்லாதபட்சத்தில் உறுத்துப் பார்ப்பதும், தொடுவதும்கூட வன்முறைதான். குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்போடிருக்க, செயல்பட, பேச, தன் உடல் தனக்குரியது என்றுணர, எச்சரிக்கையோடு இருக்க ஊக்குவிக்கிறது "யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்...." என்ற இக்கையேடு.
•

விலை : ரூ.25/-







குழந்தை அவள் செய்த முதல் தப்பு ....

(உலகச் சிறுகதைகளும் கவிதைகளும்)



















குழந்தைகள் யாரையும் கரைக்கும் யாரோடும் கரைந்து கொள்ளும் இசையாகவும், தர்க்கங்களுக்குள் நிற்காத இயல்பு கொண்ட புதிரான கவிதையாகவும் இருக்கிறார்கள். நிறைய வரையறைகளை மனதிற்குள் நிரப்பிக்கொண்ட நமக்குக் குழந்தைகளின் நெகிழ்வும் கதகதப்பும் கொண்ட மன இயல்பை ஏற்றுக்கொள்வது கடினமாகவும் நிராகரிப்பது எளிதாகவும் இருக்கிறது. இது அப்படியே இருக்கும் நிலையிலேயே நமக்குக் குழந்தைகளை வடிவமைக்கவும் அவர்களது அகச்சிக்கல்களுக்கு தீர்வு சொல்லவும் தோன்றுகிறது. குழந்தைகளோடு பிணைந்துகொள்ளும் மனம் கிடைப்பது என்பது நாம் அவர்களது மனஅசைவுகளை இயல்பான மௌனத்தோடு கவனிப்பவர்களாகவதில் இருக்கிறது. குழந்தைகளின் மனஅசைவுகள் நிறைந்த இந்த படைப்புகள் நமக்குள் இருக்கும் குழந்தைகளுக்கான ஒருவரை நிறம்பெறச்செய்யும்.
•

விலை : ரூ.50/-







Tuesday, December 18, 2018

சிவப்பு மழைக்கோட் 

கிரண் கஸ்தூரியா /  தமிழில் : சாலை செல்வம்



















மணிக்கு புது மழைக்கோட் கிடைத்தது. அதை அப்பொழுதே போட்டுக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் மழை அவனைக் காத்திருக்க வைத்துவிட்டது. காத்திருந்தான்.... காத்திருந்தான்..... காத்துக்காத்துக் கிடந்தான்....
•
விலை : ரூ. 40/-





குட்டி யானை வீட்டுக்குப்போகுது

(லீ குய்மெய் / தமிழில் : சாலை செல்வம்)



















மழலையர் பள்ளிக்குச் செல்லத்துவங்கிய பானு அங்குள்ள யானைக்குட்டி பொம்மையோடு என்ன செய்தாள்? வீட்டுக்கு வந்தபின் குட்டி யானை பொம்மை ஏன் அழுதது? அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்? கடைசியில் குட்டி யானைக்கு தான் கேட்டது கிடைத்தா இல்லையா.......
•

விலை : ரூ. 30/-






குட்டி ஆகாயம் சிறார் இதழ்






குழந்தைகள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான இடம் குட்டி ஆகாயம் சிறார் இதழ். கதைகள், ஓவியங்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் தாங்கள் சிந்திக்கும் பகிர்ந்துகொள்ள விரும்பும் ஒவ்வொன்றையும் எழுதிப்பார்ப்பதற்கான தளம். குழந்தைகளின் படைப்புகளும் குழந்தைகளுக்கான பெரியவர்களின் படைப்புகளும் இணைந்து இடம் பெறுகின்றன. குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் அறிந்துகொள்வதற்கான சூழலையும் இதழ் உருவாக்குகிறது.

•

தனி இதழ் : ரூ. 40/-
சந்தா : ரூ. 400/-
(பத்து இதழ்கள்)


உலகப்புகழ் பெற்ற சிறார் சித்திரக்கதைகள்


(24 கதைப்புத்தகங்களின் தொகுப்பு)
(தமிழில் / கொ.ம.கோ. இளங்கோ)



குழந்தைகளுக்கான உலகின் சிறந்த கதைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு. புத்துணர்வையும் உற்சாகத்தையும் கொடுக்கும் இந்தப் படக்கதைகள் குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல பெரியவர்களுக்குமானது என்பதை வாசிக்கும்பொழுது உணரலாம். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளையும் இணைத்து பதிப்பிக்கப்பட்டுள்ள கதைகள்.
•

(தனிப்புத்தகம் : ரூ. 30/-)
(முழுத்தொகுப்பு : ரூ. 720/-)


Monday, December 17, 2018

தொலைக்காட்சி 

நம் குழந்தைகளின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும்?



















தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்ப்பது, நமது குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்ச்சியைக் குறைக்கிறது ; சிந்தனையை மந்தமாக்குகிறது ; படைப்பாக்கத்தின் குரல்வளையை நெரிக்கிறது ; நேரத்தைத் திருடிக்கொள்கிறது ; தூக்கத்தைக் கெடுக்கிறது ; விளையாட்டு நேரத்தைக் கொள்ளையடிக்கிறது  ..... இப்படி நிபுணர்களின் ஆய்வுக் கருத்துகளின் வாயிலாக பெற்றோர்களை எச்சரிக்கை செய்கிறது இந்தப் புத்தகம்.
•

விலை : ரூ. 40/-




அப்பா சிறுவனாக இருந்தபோது.....

அலெக்சாந்தர் ரஸ்கின்  /  தமிழில் : ந. முகமது செரீப்




















சாஷா, அப்பா சிறுபையனாக இருந்தபோது நடந்த கதைகளை அறிய ஆசைப்பட்டாள். அப்பா சிறுவனாக இருந்தபோது நடந்த கதைகளையும் அவரது அப்பா அவருக்கு கூறிய கதைகளையும் சாஷாவுக்கு கூறுகின்றார். சாஷாவுக்குக் கூறிய கதைகள் சிறுமி, சிறுவர்கள் எல்லோருக்கும்தான். சாஷாவின் அப்பாவின் கதைகள் எல்லா அப்பாக்களின் எல்லா அம்மாக்களின் கதையும்தான். சாஷா போல கதை கேட்க ஆசைப்படும் குழந்தைகளே கதை கேளுங்கள். கதை கூற அசைப்படும் அம்மா அப்பாக்களே கதை கூறுங்கள்.
•

விலை : ரூ. 110/-






மயிலு

(கோவை சதாசிவம்)


இன்று காடுகள் சுருங்கிவிட்டன, விளைநிலங்கள் சுருங்கிவிட்டன. மீதப்பட்ட குன்றுகளும், குறுங்காடுகளும் அழிக்கப்பட்டதன் விளைவு வேளாண் நிலத்தில் மயில்கள்.

யாருக்காக குன்றுகள் பள்ளங்கள் ஆயின? யாருக்காக குறுங்காடுகள் கட்டங்களாக விளைந்தன? இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் உள்ள அரசியலைப் பேசும் நுல்.

வகுப்பறையில் எழுந்த 100 கேள்விகளும் சமூகத்தில் கிடைத்த பதில்களும்....
•

விலை : ரூ. 60/-




ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

(ஜேனஸ் கோர்ச்சாக் / தமிழில் : தி.தனபால்)



• உங்கள் குழந்தைகளை அறிய முயலும் முன்பு உங்களை அறிந்துகொள்ளுங்கள். முதலாகவும் முக்கியமாகவும் நீங்கள் கட்டாயம் உணர வேண்டியது நீங்களும் குழந்தையே. உங்களை முதலில் அறிந்து வளர்ந்து கற்பித்துக்கொள்ளுங்கள்.

•  குழந்தைகள் பொய் சொல்ல விரும்பமாட்டார்கள். உண்மையையும் சொல்ல இயலாத சில நேரங்களில் நேர்மையை உரக்க உரைப்பது அவர்களின் மௌனமே.

• வளர்தல் என்னும் சிக்கலான விசயத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களை, அதன் மர்மங்களை மதிக்க வேண்டும். எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டுமா என்றால் முடியாது. குழந்தைகளுக்கு சுயகட்டுப்பாடு உருவாகும் வண்ணம் நெகிழ்வுறப்பேசி சிலவற்றைத் தடை செய்ய வேண்டும். குழந்தை மெதுவாகத் தன்னையறியட்டும். தன்னலமின்மையையும் அதன் அழகையும் இனிமையையும் உணரட்டும்.

(புத்தகத்தின் சில பகுதிகள் ......)
•

விலை  :  ரூ. 50/-

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...