Tuesday, September 24, 2019

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி


தமிழ் - தமிழ் - ஆங்கிலம்


(விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு

























க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிவந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்திய இந்த புதிய பதிப்பு வெளியாகிறது. அகராதி என்ற மொழிக்கருவி என்றைக்கும் முடிந்த முற்றான நிலையை அடைவதில்லை. ஏனென்றால் மொழி தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிறது.

அகராதி தயாரிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தரவுகள் அளவிலும் தன்மையிலும் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன. அகராதித் தொகுப்பில் ஈடுபட்டிருப்பவர்களுடைய அனுபவமும் கூடிக்கொண்டே இருக்கிறது.  இவையே க்ரியாவின் அகராதியை விரிவாக்கி வெளியிடுவதற்கான காரணங்களாக அமைந்தன.

•

From the Book review in the
Journal of Asian Studies, August 2009

by Sascha Ebeling, University of Chicago

For more than a decade, this book has been the most reliable, detailed, and useful dictionary of contemporary Tamil of the market. The new edition of Cre-A's Dictionary of Contemporary Tamil is without any doubt an excellent reference work, setting new standards in Tamil lexicography.


•

விலை : ரூ. 695/-











Sunday, September 22, 2019

யாருக்கானது பூமி?


சூழலியல் - கானுயிர்க்காப்பு  -  பறவையியல் கட்டுரைகள்


பா. சதீஸ் முத்து கோபால்























பன்னாட்டு அமைப்பான IUCN வருடம் தோறும் பறவைகளின் இன்றைய நிலையை ஓர் அறிக்கை மூலம் வெளியிடுகிறது. அதில் சிட்டுக்குருவிகளை லிசி (Least concern) என்ற நிலையில் வைத்து உள்ளன. அதனால் சிட்டுக்குருவிகள் அழியவில்லை என்ற பொருளில் எடுத்துக்கொள்ளலாம்.

பாறு கழுகுகள் (Vulture) தமிழகத்தில் 99% அழிவு நிலைக்கு சென்றுவிட்டது. கால்நடைகளுக்கு, வலி நிவாரண மருந்தான டைக்ளோபினாக் கொடுப்பதால் அந்த மருந்து அதன் உடலிலேயே தங்கிவிடுகிறது. அவை இறந்தபின் பாறு கழுகுகள் உண்பதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவை இறக்க நேரிடுகிறது.

மனிதர்கள் குரல் உயர்ந்து பறவைகள் குரல் தாழ்ந்து காணப்படும் இந்தக் காலத்தில் சதீஸ் முத்து கோபால் பறவைகளையும் விலங்குகளையும் தேடிச்சென்று அவற்றின் குரல்களை கேட்டு வருகிறார்.

காடு, சரணாலயம், மலைகளுக்குச் சென்று அங்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதிச் செல்கிறார். பலவித பறவைகளை அறிமுகப்படுத்தி அவற்றின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை கொடுத்திருப்பது சிறப்பு. காடு அழிப்பு, புலிகள் கணக்கெடுப்பு, பறவைகள் பார்த்தம், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்று பல தளங்களில் இவரின் எழுத்து செல்வதால் இயற்கையை அறிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகமாக இது இருக்கிறது.

•

விலை : ரூ. 170/-










அலையாத்தி காடுகள்


முனைவர். மா. மாசிலாமணி செல்வம்




அலையாத்தி காடுகள் அலைகளுக்கு இடையே உள்ள சதுப்பு நிலங்களிலும் கழிமுகத் துவாரங்களிலும் வளர்கின்றன. அலையாத்தி காடுகள் உலகின் மிகச் செழிப்பான காடுகளில் ஒன்றாகும். இவைகள் கடல்நீலை வளமாக்குவதன் மூலம், கடல் வாழ் மீனினிங்களை உற்பத்தி செய்யும் இடமாக விளங்குகிறது. மேலும் கடல் சார்ந்த மதிப்புக் கூட்டு பொருள்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்குகிறது.

•

விலை : ரூ. 70/-















இறகுதிர் காலம்


(நீர்வாழ் பறவைகளின் சலனம்)


கோவை சதாசிவம்




















சமீப காலமாகவே சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் தமிழில் கவனம் பெற்று வருகின்றன. தோழர் சதாசிவத்தின் "இறகுதிர்காலம்" பவழப் பாறைகள், பளிங்குப் பாறைகள், நீர் நிலைகள், மனிதன், சமூகம் போன்ற சகல பரிணாமத்தோடும் தொலைநோக்குப் பார்வையோடும் உள்ளது. பறவைகள் குறித்த தகவல்களை அறிவியல்பூர்வமாகத் தருகின்றது. இயற்கைப் பாதுகாப்பை வலியுறுத்தும் இந்தப் புத்தகம் இளைய தலைமுறையினரை மையமிட்டு உணவுச் சங்கிலியில் முதன்மை பங்காற்றும் காட்டுயிர்களை வாழவிடுவது காலத்தின் கட்டாயம் என்று உணர்த்துகிறது.

தோழர் நல்லகண்ணு

•

விலை : 110/-














கண்ணாடிக் கல்லறை


ஆல்பிரட் ஹிட்ச்காக்


தமிழில் : யூமா வாசுகி





















உலகத் திரைப்பட ரசிகர்களால் "மாஸ்டர் ஆப் சஸ்பென்ஸ்" என்று கொண்டாடப்பட்டவர் சர் ஆல்பிரட் ஹிட்ச்காக். கலையிலும் வாழ்க்கையிலும் இணையற்ற ஆளுமை.

அவர் திரைப்படங்களாகத் தயாரித்து இயக்கிய இந்தக் கதைகள் குற்றங்களும் மர்மங்களும் நிறைந்த மனித மனப் புதிரின் திகைப்பூட்டும் பக்கங்கள். சாதாரண மனிதர்களிடம் இருக்கும் குற்ற இயல்பும் அதன் பரிணாம விளைவுகளும் இந்தக் கதைகளின் பொதுத்தளங்கள். அவற்றில் வீட்டுச் சூழலில் நடக்கும் குற்றங்கள், அவை ஏற்படுத்தும் திகில், எதிர்பாராத முடிவு ஆகியவை நிகழ்ச்சிப் போக்குகளாக அமைந்திருக்கின்றன. குற்றங்கள் ஏதுமற்ற விறுவிறுப்பான கதைகளும் உண்டு.

•

விலை : ரூ. 190/-









பதினான்காவது அறை


(ஹிட்ச்காக் தொகுத்த மர்மக் கதைகள்)


தமிழில் : யூமா வாசுகி






















மர்மக்கதை வாசகர்களுக்கு ஹிட்ச்காக் வழங்கும் கொடை இது. திகில் திரைப்பட மேதையென உலகம் கொண்டாடும் ஹிட்ச்காக், மிகச் சிறந்த மர்மக் கதைகளை தேர்ந்தெடுத்துத் தொகுப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அப்படி அவர் கொட் ஏழு கதைகள் இந்த புத்தகத்தினுள் வாழ்கின்றன. விதி விளையாட்டாகவும் மனவிசித்திரமாகவும் அமானுடமாகவும் நித்தியப் புதுமையாகவும் இந்தக் கதைகள் வாசிப்புச் சுவையனுபவத்தின் உத்தரவாதமும்கூட.


•

விலை : ரூ. 115/-














தென்னிந்திய கிராம தெய்வங்கள்


மாமறைத்திரு. ஹென்றி ஒயிர்ஹெட்


தமிழில் : வேட்டை எஸ். கண்ணன்






















தென்னிந்திய கிராமங்களைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் எனது சுயமான கிரகிப்பு மற்றும் விசாரணையால் சேகரிக்கப்பட்டவை. புத்தகங்களில் இருந்து சிறிதளவே என்னால் பெற முடிந்த நிலையில், இதுதான் இந்திய மதம் பற்றி இத்தகைய அம்சத்தில், முறையாகச் செய்யப்பட்ட முதல் முயற்சி என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் கிராம தெய்வங்களுக்கான பல்வேறு சடங்குகள் அனைத்தையும் களைத்துப் போகும் அளவு திரட்டிவிட்டது போல பாவனை எதையும் இது செய்யவில்லை. தென்னிந்தியாவின் வெவ்வேறு மாவட்டங்களில், உள்ள வகை வகையான சடங்குகளுக்கு முடிவே இல்லை என்ற சூழலில், எனது சொந்த அறிவுக்கு இந்த அனைத்து வகை சடங்குகளுமே கணக்கில் கொள்ளப்பட்டு விட்டன என்று காட்ட நான் முயற்சிக்கவில்லை. ஆகவே "தென்னிந்திய கிராமக் கடவுள்கள் பற்றிய ஆய்வுக்கான ஓர் அறிமுகம்" என்று இந்த புத்தகத்தைக் கூறுவது ஒரு வேளை இன்னும் சரியாக இருக்கலாம்.

•

விலை : ரூ. 160/-













உப்பிட்டவரை


ஆ. சிவசுப்ரமணியன்























சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம்வரை, கிறித்துவிற்கு முந்தைய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் தொடங்கி ஆங்கில அரசின் ஆவணங்கள் வரை உப்பு குறித்த பதிவுகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. உப்பை மையமாகக் கொண்டு வழக்காறுகள் பலவும் உருவாகியுள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்து, வகைப்படுத்தி, ஒரு சமூக ஆவணமாக ஆக்கும் முயற்சியின் வெளிப்பாடு இந்தப் புத்தகம்.

•

விலை : ரூ. 175/-










Saturday, September 21, 2019

எனக்குரிய இடம் எங்கே?


வகுப்பறை உறவுகளும் உரையாடல்களும்


ச. மாடசாமி























ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வகுப்பறை, தொழிற்சங்கம், அறிவொளி இயக்கம், மனித உரிமைக் கல்வி - எனப் பல தளங்களில் ஈடுபட்டு உழைத்தவர். வகுப்பறை அனுபவங்களை இலக்கியம் ஆக்கும் முயற்சி - எனக்குரிய இடம் எங்கே. 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது. காண்பதற்கு கண்கள் வேண்டும்.

இந்தப் புத்தகம்.....
கல்விக்கூட அனுபவப் பகிர்வு. கனவுகள், சந்தோசங்களின் பதிவு. மேகங்களைத் தள்ளிவிட்டுச் சின்னச் சின்ன நட்சத்திரங்களைக் காணும் முயற்சி.


•

விலை : ரூ. 100/-









ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு


சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை


ஸ்லெட்டா பிலிப்போவிக்

தமிழில் : அனிதா பொன்னீலன்






















சராஜீவோவின் ஆனி ப்ராங்க் என அழைக்கப்பட்ட ஒரு சிறுமியைப் பற்றி ஒரு போஸ்னிய நண்பர் எனக்கு 1993 கோடைகாலத்தில் சொன்னபோதுதான், நான் முதன்முதலாக ஸ்லெட்டா பிலிப்போவிக் பற்றிக் கேள்விப்பட்டேன். அவள் பெற்றோருடன் வாழ்ந்து வரும் 13 வயது சிறுமி எனக் கண்டேன்.

முதல் படைகள் நகரில் நுழைவதற்கு முன்பாக, தீவிரமான குண்டுவீச்சு ஆரம்பிக்கச் சில மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 1991ல் இருந்து ஒரு நாட்குறிப்பை அவள் எழுதிக்கொண்டு இருந்தாள். போர் வெடிக்கும் முன்பு, அவள் மிகவும் சந்தோசமான, இயல்பான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாள். இன்னும் 6 மாதங்களுக்குள் அவள் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவள் நாட்குறிப்பை எழுத ஆரம்பித்தபோது, அதை அவள் மிம்மி என்று அழைத்தாள். சராஜீவோவிற்கு வெளியில் உள்ள, வார விடுமுறைக்கு குடும்பத்துடன் செல்லும் வீடு அழிக்கப்படும் என்றோ, அவளது நெருங்கிய தோழிகள் பூங்காவில் விளையாடும்பொழுது கொல்லப்படுவார்கள் என்றோ அவள் சற்றும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டாள். அவளது எண்ணங்கள் யாவும் ஒரு 13 வயது சிறுமியின் எண்ணங்கள். பாப் இசை, சினிமாக்கள், சிறுவர்கள், லிண்டா, க்ளாடியா, சராஜீவோவிற்கு வெளியில் உள்ள மலைகளில் பனிச்சறுக்கு, அவளது அடுத்த விடுமுறை இத்தாலியில் அல்லது கடற்கரையில் ........... இப்படித்தான்...

•



விலை : ரூ. 170/-


 





பெனி எனும் சிறுவன்


கிகோ புளுஷி


தமிழில் : யூமா வாசுகி























மலையின் உச்சிக்குச் சென்றால் ஆகாயத்தைக் கையால் தொடலாம் என்று எப்போதும் நான் நினைத்திருந்தேன். சன்னல் வழியாகப் பார்க்கும்போது, மலையின் மேல்பாகம் ஆகாயத்தை முட்டி நிற்பதாக உங்களுக்குத் தோன்றும் தானே. இப்போது நாங்கள் மலையின் உச்சியில் இருக்கிறோம். எங்களுக்குக் கீழ் கோர்க்கா நகரம் மிகவும் சிறியதாகத் தென்படுகிறது. என் கணக்குப் புத்தகத்தின் ஒரு ஏடு அளவே தெரிகிறது அது.  ஐந்து மாடிகள் உள்ள, மிக உயரமானது என நான் நினைத்திருந்த என் வீட்டைக்கூட காண முடியவில்லை. என்னால் ஆகாயத்தை தொடவும் முடியவில்லை. ஒருக்கால், பறவைகளுக்கு அந்த நீல நிற விதானத்தைத் தங்கள் அலகால் கொத்த முடியும் போலிருக்கிறது....

(நாவலிலிருந்து....)


நகரச்சூழலில் அம்மாவின் அதீத அன்பால் (நெருக்கடியால்) தன் விருப்பங்களை ஒவ்வொன்றாக இழந்து தனிமைப்படும் சிறுவன் பெனி. அவனது மலை கிராமத்து மாமா குழந்தைகள் வியப்போடு பார்க்கும் ஒரு குதிரையில் அவனைப் பார்க்க வருகிறார். பெனியின் பள்ளி விடுமுறை நாட்களில் மலை கிராமத்திற்கு அவனை குதிரையில் அழைத்துச் செல்கிறார்.  கோழை என மாமாவால் எப்போதும் கிண்டலுக்கு உள்ளாகும் பெனிக்கு அந்த மலை கிராமம் உணர்வால் புதுப்புது அனுபவங்களை பரிசளித்துக்கொண்டே இருக்கிறது. கிராமத்து சிறுவர்களின் இயல்பும், காட்டோடு அவர்கள் பழகும் தன்மையும் தன் மாமாவின் அருகாமையும் பெனிக்கு ஒரு புதிய பெனியை உருவாக்கித் தருகிறது. குழந்தைகள் இயல்பாக தங்களைத் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் கதையைச் சொல்லும் அல்பேனிய நாவல் பெனி எனும் சிறுவன்.


•

விலை : ரூ. 150/-













திருடப்பட்ட தேசம்


நக்கீரன்
























மழைக்காடுகளில் திரியும் மருந்துக்கொள்ளையர்கள், பிஞ்சு வௌவாலுடன் ஓர் இரவு, சோதனைக் குழாய்க்குள் மேயாத ஒட்டகச்சிவிங்கிகள், குழந்தைகளின் மீது மருத்துவம் நிகழ்த்தும் வன்முறைகள் உட்பட 10 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

•

விலை : ரூ. 90/-







Thursday, September 19, 2019

வாழத் தகுதியற்றவனா மனிதன்?


(உடல் நலம் X மருந்துகள்)

இல. சண்முகசுந்தரம்





















தான் படித்த ஒரு துறையை, தான் செய்துவரும் ஒரு தொழிலை கடுமையாய் விமர்சிப்போர் மற்றும் எதிர்ப்போர் உலகிலேயே ஒரே ஒரு துறையில்தான் இருக்கிறார்கள் என்றால், அது அலோபதியே ஆகும். ஆம், உலகெங்கும் அலோபதியை விமர்சிப்போர் அல்லது எதிர்ப்போரைப் பட்டியலெடுத்துப் பார்த்தால் அதில் அதிகம் பேர் அலோபதி படித்த மருத்துவர்களே ஆவர்.

மரபு வழி மருத்துவ முறைகள் உலகெங்கும் எல்லா நாட்டிலும் உண்டெனினும், அம்மரபு மருத்துவர்களின் ஒரு சிலர்தான் ஆங்கில மருத்துவத்தை விமர்சிக்கிறார்களே தவிர, பெரும்பாலோர் ஏதும் பேசுவதில்லை என்பதே உண்மையாகும். அப்படியிருக்கையில், அலோபதி பயின்றோரில் மட்டும் அதிகம் பேர் ஏன் எதிர்க்கிறார்கள்?

பதிலை வாசிப்போர் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன். 

இந்தப் புத்தகத்தில் உள்ள 23 கட்டுரைகளில் சிலவற்றின் தலைப்புகள் ....

குடிநீரா, தடுப்பூசியா? எது அடிப்படைத் தேவை?
தமிழ் இலக்கியங்களில் மரபுவழி மருத்துவம்
நோய்களை உற்பத்தி செய்வது யார்?
தடுப்பூசி அறிவியல்பூர்வமானதா?
கிருமிகள் உற்பத்தியாவது தொலைக்காட்சியில் மட்டுமே....
உலகவங்கியின் பிடியில் உங்கள் குடும்பத்தின் சுகாதாரம்
ஆங்கில மருத்துவம் மொத்தமும் தவறானதா?

•


விலை : ரூ. 230/-
















வீட்டுக்கு ஒரு மருத்துவர்


அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்























நமது நாட்டு செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு செல்ல வந்த வெள்ளையர்கள் வெளியேறிவிட்டார்கள். அவர்களது கொள்ளை இன்னமும் தொடர்கிறது. அந்நியர்களது வணிக மருத்துவம் நம் நாட்டு அரசாங்கங்களின் செல்லப்பிள்ளையாகிப் போனது. பளபள விளம்பரங்கள், அலோபதி மருத்துவம் என்ற எரியும் நெருப்பில் விட்டில் பூச்சியாய் மக்கள் கவரப்பட்டு பொசுங்கிப் போகிறார்கள்.

புற்றுநோயும் மதுமோகமும் அதிகரித்த வண்ணம் உள்ளது என்று புள்ளிவிவரம் சொல்லுகிறது. புற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே வந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். ஆனால், நோய் முற்றிய பின்பே வருகிறார்கள் என்று மூத்த மருத்துவர்கள் தங்கள் ஏலாமையை மூடிமறைக்கிறார்கள். மற்றுமொரு தகவல் புற்றுநோயால் இறப்பவர்களைவிடவும், புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையால் இறப்பவர்களே அதிகம் என்று சொல்கிறது.

பல ஆண்டுகளாக சுயமரியாதையை இழந்து தமிழ்ச் சமுதாயம் தனது உடல் கூறும் மொழியைக்கூட மறந்துபோனது. அது பற்றித் தெளிவுபடுத்துகிறது "உடலின் மொழி", உண்ணும் உணவை வகைப்படுத்துகிறது  "உணவோடு உரையாடு" நோயுற்றவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி பேசுகிறது "உடல் நலம் உங்களை கையில்",

"வீட்டுக்கு ஒரு மருத்துவர்" முதல் பதிப்பு வெளியானபோதே நான் இப்படி குறிப்பிட்டேன். "வீட்டுக்கு ஒரு மருத்துவர்" என்று இருப்பதைவிட "ஒவ்வொருவரும் மருத்துவரே" என்று இருப்பதே மிகப்பொருத்தம் என்று. தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும், பிறர் படிக்க கேட்கத் தெரிந்த எவரும் மருத்துவராக மாறுவதற்கு உரிய வழிகாட்டிகளாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.


கோ. நம்மாழ்வார்

•

விலை : ரூ. 250/-


































Wednesday, September 18, 2019

கடற்கோள் காலம்


வறீதையா கான்ஸ்தந்தின்























சுனாமி, ஒக்கி, கஜா....

கடல் பழங்குடிகள் முன்னெப்போதும் சந்தித்திராத நடுக்கத்தை ஒக்கிப் பேரிடரின்போது எதிர்கொண்டனர். இப்பீதி கடல் விளைவித்ததல்ல, கரை திட்டமிட்டு நிகழ்த்திய ஒன்று. அபாயமணி ஒலிக்க வேண்டிய அரசு அவர்களைக் கைவிட்டது. மீட்க வர வேண்டிய படைகள் சடலங்களைச் சேகரிக்கக்கூட வரவில்லை. இயற்கைப் பேரிடர்களை அடித்தள மக்கள் மீதான உளவியல் போராக முன்னெடுக்கும் குரூர மனநிலை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அடித்தள மக்களுக்குப் போக்கிடமேது?

•

விலை : 140/-












நோய்க்கு அஞ்சேல்


(இயற்கை மருத்துவக் கோட்பாடு)


ஹென்றி லிண்ட்லர்

தமிழில் : போப்பு
























மனித உடலானது இயந்திரக் கட்டுமானம் அல்ல. அதில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. ஒன்றிலிருந்து ஒன்று தாக்கம் பெறுபவை. உடல் அங்கங்களை தனித்தனியாக பிரித்து அறிய முயல்வதும், தனித்த சிகிச்சை அளிக்க முற்படுவதும் அறிவீனம் என்று நிறுவுகிறார் லிண்ட்லர்.

இன்று நம்மால் பரவலாக நம்பப்படுகிற மருத்துவக் கோட்பாட்டை தீவிரமான கேள்விக்கு உட்படுத்துகிறார். பல லட்சங்களையும் சொத்துகளையும் இழந்து உடலை பெரும் உபாதைகளுக்கு உட்படுத்தி இறுதியாக எளிய மருத்துவத்தின் மூலம் எளிய சிகிச்சைகள் மூலம் நம்பமுடியாத விரைவில் நிவாரணம் பெறுகிறவர்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில் இந்தப் புத்தகம் அதி முக்கியத்துவம் பெறும் ஒன்றாக இருக்கிறது.

புத்த தத்துவத்தின் பால் ஈடுபாடு கொண்டிருந்த அமெரிக்க மருத்துவர் லிண்ட்லர் எம்டி பட்டம் பெற்று தன்னுடைய தத்துவத்திற்கு உகந்த இயற்கை சிகிச்சை முறையே உடலுக்கு ஏற்றது என்பதை தொடர் ஆய்வின் மூலமாகவும் தனது இயற்கை சிகிச்சை பயில் முறையில் பெற்ற அனுபவத்தின் வாயிலாகவும் இயற்கை சிகிச்சை கோட்பாடே சிறந்தது என்ற முடிவிற்கு வருகிறார்.

1920ல் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் வெறும் தத்துவ தரிசனமாகவும், கோட்பாட்டு வாதமாகவும் இல்லாமல் ஒரு அனுபவப் பகிர்வாக இருப்பதால் எளிதில் தன்வயப்படுத்திக்கொள்ளும் தன்மையில் அமைந்திருப்பது நம் அதிர்ஷ்டமே.

முதல் வாசிப்பிலேயே உடல் பற்றிய நம் புரிதலை புரட்டிப்போடுவதோடு கூடுதலாக ஒவ்வொரு வாசிப்பிலும் பல உண்மைகளை ஆழமாக உணர்த்தக்கூடியது.


நோய் என்பது விபத்தோ, தண்டனையோ அல்ல. மனத்தடுமாற்றத்தால் நிகழ்ந்த தவறும் அல்ல. அது இயற்கை விதிமீறலின் தவிர்க்க முடியாத விளைவாகும். நாம் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டும் என்பதை அறிவுறுத்தி நெறிப்படுத்தும் லிண்ட்லர், மூச்சுப் பயிற்சி, பட்டினி கிடத்தல், சூரியக் குளியல், பழச்சாறுகள் ஆகியவற்றின் மூலம் நோயைக் குணப்படுத்துவதில் சிறந்த நிபுணராக விளங்கினார்.

•

விலை : ரூ. 210/-













Tuesday, September 17, 2019

புக்குஷிமாஒரு பேரழிவின் கதை


மிக்காயேல் பெரியே


பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில் : 
சு. ஆ. வெங்கட் சுப்புராய நாயகர்





நிலநடுக்கம், சுனாமி, புக்குஷிமா அணுஉலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்காயேல் பெரியே, தன் அனுபவங்களையும், அங்கு திரட்டிய தரவுகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் புத்தகம் இது. மூன்று பகுதிகளாகப் பிரிந்து விரியும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் அரசியலும் அழகியலும் இணைந்து அசாத்தியத் துணிவுடன் நிகழ்வுகளை விவரிக்கிறார்.

இயற்கை பேரிடர்களை மனிதர்களே தருவித்துக்கொள்ளும் பேராபத்துக்களையும் சமூகக் கடமையோடும் இலக்கிய ரசனையோடும் அணுகும் பனுவல் இது.

நிலநடுக்கத்தால், சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்து அவர்களுடைய அனுபவங்களைச் சேகரித்துத் தருகிறார். துயரமும் அச்சமும் நெகிழ்ச்சியும் நிறைந்துள்ள அம்மக்களின் வாழ்நிலை நம்மை உலுக்கி விடுகிறது.

அச்சுறுத்தும் அணு உலைகளை அனுமதித்தால் மக்களின் நிம்மதி எவ்வாறு அணுஅணுவாக அவர்களுடைய அரைகுறை வாழ்வில் சூறையாடப்படுகிறது என்பதை பாதிப்புக்குள்ளானவர்களின் மொழியிலேயே பதிவு செய்கிறார். வருங்கால சமூகத்தின்பால் அக்கறை கொண்ட எவரும் தவிர்க்க இயலா விவாதப் பொருட்களை தனித்துவமானதொரு மொழியில் அலசும் இலக்கிய ஆவணம் இது.

•

விலை : ரூ. 200/-







































Sunday, September 15, 2019

இதுவே சனநாயகம் 


தொ. பரமசிவன்























அறிஞர் தொ. பரமசிவன் ஒரு பண்பாட்டுத் தொல்லியளாலர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து காட்டும்போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன. அந்த முறையியல் கொண்டு தொன்மைகளை மட்டுமின்றி அண்மைப் போக்குகளையும்கூட அகழ்ந்து காட்ட அவரால் முடிகிறது. இத்தொகுப்பு "சமயமும் வழிபாடும்", "உறவும் முறையும்", "ஆளுமைகள்", "மதிப்புரைகள்", "ஆய்வுப்பார்வை" போன்ற அவரது கட்டுரைகளை வகைக்குள் அடக்க முயன்றிருக்கிறது.

•

விலை : ரூ. 140/-













தொ. பரமசிவன் 


நேர்காணல்கள்























முன்னர் செவ்வி என்ற பெயரில் வெளிவந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்த நேர்காணல்களுடன் விகடன் தடம், தீராநதி, தமிழ் ஒப்புரவு, கூட்டாஞ்சோறு, பிள்ளைத் தமிழ் இதழ்களில் வெளியானவற்றையும் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட தொகுப்பு இது.

•

விலை : ரூ. 175/-











தாவோ தே ஜிங்


லாவோட்சு


தமிழில் : சி. மணி























பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் விவிலியத்துக்கு அடுத்த நிலையில் இருக்கும் தாவோ தே ஜிங், சீன மொழியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் லாவோட்சு என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

தாவோயிசச் சிந்தனையை வெளிப்படுத்தும் அடிப்படை புத்தகம் தாவோ தே ஜிங். இன்றைய உலகுக்கு மிகவும் பொருத்தமான புத்தகம்.

ஆக்கிரமிப்புக்கான போரையும் மரண தண்டனையையும் தவிர்ப்பது, முற்றிலும் எளிமையாக வாழ்வது, தீவிர அதிகாரத்தை வற்புறுத்த மறுப்பது என்று மூன்று வழிகளில் நடைமுறைக்கும் அரசியலுக்கும் உரிய பரிமாணத்தை வகுக்கும் தாவோயிசம், தனிமனித நலம், சமூக இணக்கம், பிரக்ஞையின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றி வலியுறுத்துகிறது.

தாவோ தே ஜிங் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை.

•

விலை : ரூ. 125/-













சிவப்புச் சந்தை


ஸ்காட் கார்னி

(கட்டுரைகள்)
தமிழில் : செ. பாபு ராஜேந்திரன்


(உலகிலுள்ள உடலுறுப்புத் தரகர்கள், எலும்புத் திருடர்கள், இரத்தப் பண்ணை நடத்துவோர், குழந்தைகளைக் கடத்துவோர் போன்றோரின் செல்தடத்தில் ....)
























இந்தப் புத்தகம் உலகெங்கும் பரவியுள்ள கொடூரமிக்க, பாதாள உலகத்தின் வழியே அதிர்ச்சியூட்டும் சுற்றுலாவுக்கு வாசகர்களை அழைத்துச் செல்லும் ஒரு விரிவான விவரணை. அங்கு சிவப்புச் சந்தையில் உடலுறுப்புகள், எலும்புகள், உயிரோடிருக்கும் மனிதர்கள் முதலியவை வாங்கி விற்கப்படுகின்றன.

மனித உடல்களையும் உடல் பகுதிகளையும் கொண்டு நடக்கும் அதிக லாபம் ஈட்டித்தரும் தீவிரமிக்க, இரகசியமான வணிகம். இதைத் தொடர்ந்து செல்வதில் ஐந்து ஆண்டு காலம் களப்பணி செய்திருக்கிறார் புலனாய்வு பத்திரிகையாளரான ஸ்காட் கார்னி. அது "சிவப்புச் சந்தை" என்று அறியப்படும் பரந்தகன்ற இரகசியப் பொருளாதாரம். அங்கு திடுக்கிட வைப்பதிலிருந்து ஏளனத்துக்குரியதுவரை, அதன் பலவித வடிவங்களை அவர் கண்டறிகிறார்.

•

விலை : ரூ. 250/-













என் கதை


சார்லி சாப்ளின்


தமிழில் : யூமா வாசுகி























பெருங்கலைஞர்கள் இந்தப் புவியில் அதிசயங்களை ஸ்தாபிப்பவர்கள் என்பதற்கான காலாதீத உதாரணங்களில் ஒருவர் சார்லி சாப்ளின். உலக முழுதுமுள்ள எண்ணற்ற ரசிகர்களைத் தன் கலா வல்லமையால் ஈர்த்ததொரு பேராளுமை. அமெரிக்கத் திரைப்படக் கல்லூரி 1999ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பு, உலகத் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நடிகர்களில் சாப்ளினும் ஒருவர் என்று கூறுகிறது. ஒரு முறை பெர்னாட்ஷா "திரைப்படத் துறையில் தோன்றிய ஓர் உண்மையான மேதை சாப்ளின்" என்று சொன்னார். கற்பனையிலும் தோற்றத்திலும் நடிப்பிலும் உள்ள தனித்துவம், பிற கலைஞர் எவருக்கும் சித்திக்காத ஒன்று. தமது அழுத்தத்தால் நமது அனுபவங்களை விரித்தளிக்கும் இவரது படங்கள் திரை ரசனையின் கலங்கரை விளக்கங்களாகியிருக்கின்றன. சாப்ளின், ஓர் எளிய மனிதனும் படைப்பின் தேவதையுமாவார். மனங்கொள்ளாத் துயரமும் களங்கமற்ற மகிழ்ச்சியும் இவர்தான். தற்குறி வேடமும் தத்துவ தரிசனமும் .........

சிரிப்பும் கண்ணீருமான இந்தப் பேரன்பை உங்கள் இதயத்தோடு இணைக்கும் எளிய முயற்சியே இந்தப் பதிப்பு.

•

விலை : ரூ. 190/-










தமிழர் அறிவியல் மரபு


(கட்டுரைகள்)

























தமிழ் மொழியின் அறிவியல் கூறையும், தமிழினத்தின் அறிவியல் மரபையும் திட்டமிட்டுத் தாழ்த்தி புறக்கணித்தது தமிழினத்தின் மீதான அயலார் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்பட்டது. "தமிழால் ஒன்றும் ஆகாது. தமிழினத்திற்கு ஒன்றும் தெரியாது" என்ற எண்ணம் கணிசமானத் தமிழகர்களிடையே கூட ஏற்பு பெற்றது.

இந்நிலையில், தமிழர் மரபு மருத்துவம், மரபு வேளாண்மை, மரபுக் கட்டிடக்கலை, மரபு இசை, ஓவியம், அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் தமிழர் மரபு அறிவை ஆதாரங்களோடு பறைசாற்றும் புத்தகங்கள் பல அண்மைக் காலமாக வந்த வண்ணம் உள்ளன.

அறிவியல் - தொழில் நுட்பத்தில் மட்டுமின்றி, பண்டைக் காலத்திலும் நவீன காலத்திலும் இந்த மண்ணின் மரபோடு இணைந்த பகுத்தறிவுக் கொள்கைகள் முனைப்பாக வெளிப்பட்டதை இந்தப் புத்தகத்தின் பல கட்டுரைகள் விளக்குகின்றன.

பாமயன், ஓவியர் வீரசந்தானம், கி. வெட்கட்ராமன், பேராசிரியர் த. ஜெயராமன் என பல ஆளுமைகளால் எழுதப்பட்ட 13 கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

•

விலை : ரூ. 120/-













தமிழ்மொழிக் கல்வி


(கட்டுரைகள்)


பதிப்பாசிரியர் : சு. இராசாராம்






















பொதுக்கல்வி, சமச்சீர் கல்வி, தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி, மொழிப் பாடத்திட்டமும் பாடபுத்தகங்களும் அயலகத் தமிழ்க் கல்வியும் ஆய்வும் என விசிறி வாழையாய் விரியும் தலைப்புகளின்கீழ்த் தமிழகத்தின் பத்தொன்பது கல்வி ஆளுமைகள் திறக்கும் கருத்துப் பெட்டகம் இத்தொகுப்பு. கடந்த இரு பத்தாண்டு காலத் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சியை உலக வாசகர்களுக்குக் கவனப்படுத்தும் காலச்சுவடின் இத்தொகுப்பில் மொழிக்கல்வியாளர்கள் விவாதிக்க மறுக்கின்ற மறுபக்கங்கள் நுணுக்கமாகச் சாடப்படுகின்றன.

•

விலை : 190/-












Wednesday, September 11, 2019

தாஸ்தாயெவ்ஸ்கிஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு


தமிழில் : சா. தேவதாஸ்





















ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு என்னும் இந்தப் புத்தகம். தாஸ்தோயெவ்ஸ்கி தினசரி எழுதி வைத்த அவரது நாட்குறிப்பின் புத்தக வடிவமில்லை. இப்பெயரில் 1873லிருந்து 1881 ஜனவரி வரையில் - அவர் இறக்கும் வரையில் - அவர் வெளியிட்டு வந்த மாத இதழ்களின் தொகுப்பே. ஒவ்வொரு மாத இதழிலும் தான் பார்த்தவை, படித்தவை, கேள்விப்பட்டவற்றைப் பதிவு செய்து, தான் முரண்படும் / பேச நின்ககும் கருத்தியல் விசயங்களை விவாதிப்பது, சில கதைகளைச் சேர்த்துக்கொள்வது என அவர் இயங்கியுள்ளர். ஆனால் எல்லாப் பத்திரிக்கையாளர்களையும் போல அவர் எழுதவில்லை. ஒரு குற்ற நிகழ்வு, முன்பின் அறியாத ஆளுமை என எதுவாயினும் நுணுகி ஆராய்கிறார். உளவியல்வாதி போல பகுப்பாய்வு செய்கிறார். ஒரு பத்திரிக்கையாளர் உளவியல்வாதியாகி பின் இலக்கியவாதியாக இயங்கியதன் சாட்சியமே இந்நாட்குறிப்பு.

தன் காலத்தில் நடந்த வதைகள், கொலைகள், தற்கொலைகள், குடியானவர் பிரச்சினைஇ ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான முரண்பாடு பற்றியெல்லாம் விவாதிக்கிறார்.

"தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள், கதைகளை விடவும் நாட்குறிப்பில் அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படுகிறது. நாட்குறிப்பில் தன் வாசகருடன் பேசுகின்றார், கடிதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலளிப்பதுடன் எதிர்வினையை எதிர்பார்த்தும் விளக்கம் அளிக்கிறார்" என்கிறார் கென்னத் லாண்ட்ஸ்.

•

விலை : ரூ. 700/-


















Sunday, September 8, 2019

சுண்டெலி முதலைக் கதைகள்


ச. மாடசாமி






















இந்தக் கதைகளில் சுண்டெலியும் முதலையும் பேசுகின்றன. குறும்பு செய்கின்றன. சாகசங்களில் குதிக்கின்றன. சுண்டெலி எளிய மனிதர்களின் அடையாளம். வெற்றி பெறுவதற்காக சில நேரங்களில் எலிகள் ஏமாற்றுவது போலத் தெரியும். அச்சுறுத்தல், கண்காணித்தல், கட்டாயப்படுத்துதல், திணித்தல், அதிகாரம் செலுத்தல், பலத்தைக் காட்டுதல் போன்றவை இருக்கும் வரை ஏமாற்றுதலும் இருக்கும். இருக்க வேண்டும்.  நம்முடைய அறிவுலகத்தில் முதலை ஒரு வஞ்சகமான முரட்டுத்தனமான ஆபத்தை விளவிக்கக்கூடிய விலங்கு. ஆனால், ஆதிவாசி மக்களின் கற்பனைக்கதைக் களத்தில், முதலை அப்பாவியாய் அசடாய் பொறுப்புள்ள குடும்பத்தலைவனாய் உலா வருவதைக் காண்கிறோம்.

மனிதர்களையும் பிற உயிர்களையும் நல்லது கெட்டது என்று பாகுபடுத்தியே குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோம். நல்லது கெட்டது என்று பிரித்துப் பிரித்து வைத்து விட்டால் எதைப் புரிந்துகொள்வது? யாரைப் புரிந்துகொள்வது?

•

ரூ. 70/-















நாய் வால்(சங்கிலிக் கதைகளும் ஓசைக் கதைகளும்)


ச. மாடசாமி






















3 முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாய்மொழியாக நாம் சொல்லத் தகுந்த கதைகள் இவை. குழந்தைகளுக்குக் கல்வியில் ஆர்வத்தையும் புத்தகத்தின் மீது ஈடுபாட்டையும் உண்டாக்குவதற்குத் தொடங்கப்பட்ட முயற்சி இது.

•


விலை : ரூ. 80/-











வயல்காட்டு இசக்கி


அ.கா. பெருமாள்




















நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ள வகை செய்வது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. இந்தப் புத்தகத்தில் அனுபவம், ஆய்வு, சந்திப்பு என்னும் மூன்று தலைப்புகளில் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளே முனைப்புடன் பதிவாகியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளாக இத்துறையில் தொடர்ந்து செயலாற்றி வருகிற அ.கா. பெருமாள் பல்வேறு இதழ்களில் எழுதியவற்றின் தொகுப்பு இந்தப் புத்தகம். கதைசொல்லிகளுக்குரிய நடையில் அறியப்படாத செய்திகளைக் கூறுவது இதன் சிறப்பு.

•

விலை : ரூ. 260/-













சித்தார்த்தன் 


ஹெர்மன் ஹெஸ்ஸெ


தமிழில் : திருலோக சீதாராம்




















பிறருக்கு விடுதலை வழியைக் காட்டும் மிகக் கடினமான காரியத்தை ஹெஸ்ஸே எடுத்துக் கொண்டு, அதில் பெரும்பாலும் வெற்றியும் பெற்றிருக்கிறார். சிக்கலான கேள்விகளைக் கிளப்பி நம்மைச் சிந்திக்கச் செய்கிறார். அந்தண குமாரன் ஏன் பார்ப்பனீயத்தில் அதிருப்தி கொள்கிறான்? ஏன் புத்தரைக் கூட குருவாக ஏற்க மறுக்கிறான்? உதறித் தள்ளி விட்டு சமணருடன் சென்றவன் மீண்டும் ஏன் சம்சாரத்திலே சிக்கி உழலுகிறான்? இதனின்றும் மறுமுறை தப்பிப் பிழைத்த பின்னும், தன் மகன் மட்டும் தனது ஆதிக்கத்திற்குள் இருக்க வேண்டும் என்று விரும்புவது மாயையின் மயக்கம் அன்றோ? அகத்தை அழிந்த பின்னும் மமதை ஆட்டுவிக்கிறதே! அதையும் போக்க வாசுதேவன் உதவுகிறான். பார்ப்பன பண்டிதன், ஓடும் நதியைக் குருவாய்க் கொண்ட ஓடக்காரனைத் தனது குருவாய்க் கொண்டு, சாந்தி பெறுகிறான்.

•

ரூ. 115/-
















கடவுள், சபலம், பாவம் இன்னபிற ............


டால்ஸ்டாய்




















தனது கடைசி நிமிடம் வரை தான் சார்ந்திருந்த சமூகத்திற்கு பயனுள்ள ஏதேனுமொன்றைச் சொல்ல வேண்டியது தனது கடமை என்று நினைத்த அந்த வயோதிக மனிதனின் அற்புதமான வார்த்தைகள் இவை. இறப்பு நம் அருகிலிருப்பதை அறியும் நேரத்தில் நாம் நிறைவு செய்யாத செயல்களை செய்து முடித்துவிட வேண்டும். நிறைவுற்ற செயலென்று ஒன்றுதான் உள்ளது. மற்றவர்களிடம் நாம் செலுத்தும் அன்புதான் அது. டால்ஸ்டாயின் இறுதிநாட்களில் அவரிடமிருந்து இப்படிப்பட்ட கருத்துகளை நம்மால் கேட்க முடிகிறது. 1906 முதல் 1909 வரை ஏறக்குறைய அவர் இறப்பதற்கு (1910) ஓராண்டு முன்புவரை தினமும் இத்தகைய கருத்துகளை அவர் பழைய ஏற்பாட்டில் வருகின்ற நீதிமொழிகளைப் போன்று பதிவு செய்திருக்கிறார். இப்பொழுது அவை தொகுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. டால்ஸ்டாய் இன்னும் முழுமையாக வாசிக்கப்படாத ஆளுமை.

•

ரூ. 210/-
















தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்கீழடி வரை


சி. இளங்கோ





















மண்ணுக்குக் கீழே மற்றொன்றும் இருக்கிறது. பண்டைக்கால மனிதகுல நாகரிகம். அவர்கள் பயன்படுத்திய பொருள்கள். பழக்க வழக்கங்களைக் காட்டும் குறியீடுகள். செத்த பிறகும் மனிதர்களைப் பாதுகாப்பதுபோல் புதைக்கப்பட்ட தாழிகள். பழைய கற்காலம், புதிய கற்காலம், நுண்கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக் காலம் எனப் பகுத்துப் பார்க்கும் அளவுக்குப் பூமிக்கு உள்ளே புதைந்துகிடக்கும் பொருள்கள், கட்டுமானங்கள், அவற்றின் வடிவமைப்புகள் என நாம் அறிந்துகொள்ள வேண்டிய அற்புதங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. அவற்றைக் காண வேண்டும் என்ற முனைப்போ பாதுகாக்க வேண்டும் என்ற முயற்சியோ அரசுகளுக்கு எவ்வளவு இருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.

•

விலை : ரூ. 80/-
















பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்

(விளிம்புநிலைக் குழந்தைகள் சினிமா)

யமுனா ராஜேந்திரன்





















ஒரு திரைப்படம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது? என்ன அறிவுக்கு இட்டுச் செல்கிறது? குழந்தைகளின் முதிர்ச்சி நிலைக்கேற்ற உணர்வுகளை, அறிவைத் தூண்டுகிறதா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளே குழந்தைகளுக்கான படம் எது என்பதைத் தீர்மானிக்கும்.

தமிழ் இலக்கியத்தில் அழ. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள், பாரதியின் பாப்பாப் பாட்டு, சண்முக சுப்பையாவின் குழந்தைக் கவிதைகள் சாகா வரம் பெற்ற சிருஷ்டிகள். குழந்தைகள் இலக்கியம் செய்வது சாதாரண காரியம் இல்லை. அவர்களின் உலகம் பட்டாம்பூச்சியின் இறக்கையைப் போல் மெலிதானது. பெரியவர்களின் கவனக் குறைவில் அது உதிர்ந்துவிடும். பிரபஞ்சத்தின் ஆழமும் விடுகதையின் பூடகமும் தொல்பொருள் ஆய்வுக்கு எட்டாத மனக்குகை ஓவியங்களும் நிறைந்தது அவர்களின் மனம்.

குழந்தைகள் சினிமா இரு வகைகளில் செயல்படுகிறது. முதலாவது, பெரியவர்கள் தமது இழந்துவிட்ட பழிபாவமற்ற மனநிலையைப் பின்னாட்களில் திரும்பிப் பார்த்து சுயவிசாரணையில் ஈடுபட இவை தூண்டுகின்றன. இரண்டாவது வகை, குற்றமற்ற குழந்தைகளின் பால்யத்தை, பேதை மனநிலையை கொன்றுவிடாதிருக்கக் கூடிய பொறுப்புணர்ச்சியைப் பெரியவர்களிடம் இவை கோருகின்றன. குழந்தைகளைப் பற்றிய பொறுப்புணர்ச்சி என்பது நம்மைப் பொறுப்புள்ள மனிதர்களாக ஆக்கிக் கொள்வதிலும் தங்கியிருக்கிறது.


•

ரூ. 150/-
























ESCAPE FROM CHILDHOOD

The Needs and Rights of Children

JOHN HOLT






















ESCAPE FROM CHILDHOOD is about freedom ......... Everybody's Freedom!

How often, under the guise of protection, are children kept in the "walled garden" of childhood, outside the world of human experience?

How many of today's nuclear families have become a prison for both parents and children alike?

What if children had the right to equal treatment under the law ..... the right to be legally responsible for their lives and acts .... the right to work for money .... the right to travel, live away from home, choose or make their own homes .... the right to do, in general, what any adult may legally do?

The reader who dares to confront these questions will discover new family relationships, not based on parental control ........ but on the joy of shared experience and responsibilities.

*

Rs. 210/-












Saturday, September 7, 2019

மண்ணின் கதைகள்மக்களின் கதைகள்


கழனியூரன்





















நாட்டாரியம் என்ற கடலில் இருந்து எத்தனை வளங்களை நாம் அள்ளிக் கொண்டு வந்தாலும் அத்துறை வற்றாமல் தரவுகளைத் தந்து கொண்டேதான் இருக்கின்றது.

உளவியல், குடும்பவியல், அரசியல், சமுகவியல் என்று பல்வேறுபட்ட நிலைகளில் உள்ளன இக்கதைகள். நகைச்சுவை, அழுகை, மருள்க்கை, அச்சம், பெருமிதம், உவகை என்பன போன்ற பல்வேறு சுவைகளின் கலவையாக இக்கதைகள் திகழ்கின்றன.

111 கதைகள் கொண்ட இப்பெரும் தொகுதி மக்கள் மொழியில் உறைந்து கிடக்கும் மண்ணின் கதைகளின் அரிய களஞ்சியமாக கழனியூரனின் கடும் உழைப்பில் உருவாகியிருக்கிறது.


•


விலை : ரூ. 175/-












ஹாஜி முராத்(நாவல்)லியோ டால்ஸ்டாய்


தமிழில் : மெஹர் ப.யூ. அய்யூப்






















ரஷ்யப் படைப்பிலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய் எழுதிய, சிறிய அகலப்புனைக்கதை "ஹாஜி முராத்" ஆகும். 1896க்கும் 1904க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இக்குறுநவீனம், அவருடைய மரணத்துக்குப் பின்னரே வெளியிடப்பட்டது. இதுவே டால்ஸ்டாயின் இறுதிப்படைப்பாகும். ஹாஜி முராத் பெயருடைய, அவார் இனப் புரட்சிக்காரன், தனது சொந்தப் பழிவாங்கலுக்காகத் தான் இதுவரை எதிர்த்துப் போராடிவந்த ரஷ்யர்களோடு, ஓர் இக்கட்டான சூழ்நிலையில் செய்துகொண்ட உடன்பாட்டைக் கருவாக வைத்துப் படைக்கப்பட்டதே இக்குறு நவீனம்.

உலகின் மிகச்சிறந்த அகலப்புனைக்கதையாளருள், ஒருவராய் மதித்துப் போற்றப்படுபவர் லியோ டால்ஸ்டாய். போரும் அமைதியும், அன்னா கரீனினா போன்ற அவரது உன்னதமான படைப்புகள், தம்முடைய உள்ளடகத்திலும் வீச்சிலும் 19ம் நுற்றாண்டின் ரஷ்ய வாழ்க்கையை, ஒழுகலாறுகளைப் பற்றிய, மிகத் தெளிவான படப்பிடிப்பினால், உயிரோட்டம் மிகுந்த புனைகதைப் படைப்பின் உச்சகட்ட உருமாதிரிகளாய்த் திகழ்கின்றன.

•

விலை : ரூ. 180/-




















நிலவறைக் குறிப்புகள்பியோதர் தஸ்தயேவ்ஸ்கி

(நாவல்)
தமிழில் : எம்.ஏ. சுசீலா























ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், "இது மனித இயல்புகளைப் பற்றிய ஓர் அரிதான ஆவணம்" என்றே கூற வேண்டும்.

•

விலை : ரூ. 250/-








வெண்ணிற இரவுகள்பியோதர் தஸ்தயேவ்ஸ்கி


தமிழில் : ரா. கிருஷ்ணையா























எனது அருமை நாஸ்தென்கா.... தெய்வமேதான் உன்னை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறது. இதை எனக்கு எடுத்துரைத்து என்னைத் தெளிவு பெறச் செய்வதற்காக அனுப்பி வைத்திருக்கிறது. இப்பொழுது இங்கு உன் பக்கத்தில் அமர்ந்து உன்னுடன் பேசும் பாக்கியம் பெற்றுள்ளபடியால் நான் வருங்காலம் குறித்து நினைக்கவே அஞ்சுகிறேன். ஏனெனில் மீண்டும் தனிமையைத் தவிர, நாற்றமெடுக்கும் அந்த அர்த்தமற்ற வாழ்க்கையைத் தவிர வருங்காலம் எனக்குத் தரக்கூடியது எதுவும் இல்லை. கனவல்லாமல் நனவிலே உன் அருகே இருந்து இத்தனை இன்பம் பெற்றுள்ளேன்.


•


விலை : ரூ. 60/-















இரட்டையர்பியோதர் தஸ்தயேவ்ஸ்கி


தமிழில் : எம்.ஏ. சுசீலா






















இரட்டை மனிதன் உட்பட நாவலில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களில் உண்மை எது, கற்பிதம் எது என்று எதையுமே தெளிவபுட வரையறுத்துச் சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கிய தொனியில் மட்டுமே இந்த நாவலின் தொனியை அமைத்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.

முடிவுகளை வாசகர்களின் ஊகத்துக்கும் முடிவுக்கும் விடுவதற்கென்றே நுணுக்கமான மறை பொருளாக அவற்றைச் சொல்லியும் சொல்லாமலும் விட்டிருக்கிறார்.

இரட்டையர் நாவல், நம் முன் வைக்கும் சவால் அது என்பதோடு அதுவே இந்நாவலின் வெற்றியும் ஆகிறது.

•

விலை : ரூ. 250/-










கரமசோவ் சகோதரர்கள் (நாவல்)


பியோதர் தஸ்தயேவ்ஸ்கி
தமிழில் : கவிஞர் புவியரசு






















இதன் முதல் வாசிப்பில் என் புத்தி பேதலித்துவிட்டது. நான் பைத்தியக்கார விடுதியில் சேர்க்கப்பட்டேன். அடுத்த வாசிப்பில் புத்தி தெளிந்துவிட்டது. நான் வெளியே வந்துவிட்டேன். இப்போது இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். நுறு முறை படித்தாலும் புதிதாக ஏதாவதொன்று கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இந்த கேடுகெட்ட காலத்தில் மனிதராக வாழ இந்தப் புதினத்தின் மூலம் வழிகாட்டுகிறார் தஸ்தயேவ்ஸ்கி.

•

நாத்திகன், ஆத்திகன், ஊசலாட்டக்காரன், மகாஞானி, கேடுகெட்ட கயவன், துறவிகள்,க ற்பரசி, விலைமகள், காதலி, சிறுமி, பணிப்பெண், பள்ளி சிறுவர்கள், ஏழை, பணக்காரன், உழவன், வியாபாரி, தளபதி, காவல் அதிகாரிகள், மருத்துவர்கள், வீட்டுப்பணியாட்கள், கொலைகாரர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதி ..... என சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் சாத்தானும் இங்கே முழுசாக மனம் திறக்கிறார்கள். இந்த மனம் திறப்புகளின் வழியாக நாம் காணும் பச்சை மனிதர்களின் உண்மை இயல்புகள் அதிர்ச்சி தரும் அனுபவமாகவும், பலரும் குறிப்பிடுவது போலத் தரிசனமாகவும் அமைந்துள்ளது.

•

உலக உளவியல் மேதைகளாலும் மனநோய் மருத்துவர்களாலும் அதிகமாக சான்று காட்டப்பட்ட ஒரே எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி தான். இவரது கற்பனை பாத்திரங்களின் மனநிலைகளும் செயல்பாடுகளும் உண்மையான மனிதரின் நோய் - வரலாற்று பதிவுகள் என்றே அவர்கள் எடுத்தாள்கின்றனர்.

•

விலை : ரூ. 1,500/-
(இரண்டு தொகுதிகள்)


































புத்துயிர்ப்பு (நாவல்)


லியோ டால்ஸ்டாய் 























மனிதனின் அடிப்படை உணர்வுகளையும் அவன் வாழ்க்கையின் நோக்கத்தையும் அவனது ஆன்மா புத்துயிர்ப்பு பெற்று மறுமலர்ச்சி அடைவதையும் இந்நாவல் விவரிக்கிறது. மாறுபட்ட வாழ்வனுபவங்ளும் மனிதகுல மேம்பாடுகளுக்கான மாண்புகளையும் கொண்டிருந்த ரஷ்ய வாழ்க்கையின் மனசாட்சியை இதில் கண்டுணரலாம்.

வறண்ட நிலம் மழை கண்டு புத்துயிர்ப்பு பெறுவதைப் போல இந்நாவலை வாசிப்பவர் மனங்களில் நற்சிந்தனைகள் உருவாகி உன்னதமானதொரு புத்துயிர்ப்பை அளிக்கும் என்பது நிதர்சனம்.

•

விலை : ரூ. 550/-




















  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...