Monday, February 11, 2019

அக்குபங்சர் அறிவோம்

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்















பிற மருத்துவ முறைகள் போன்று, அக்குபங்சர் மருத்துவத்தில் மருந்துகளோ மாத்திரைகளோ கிடையாது. உடலில் தோன்றும் எந்தவிதமான நோயாக இருந்தாலும்சரி, ஒரே ஒரு ஊசியையோ அல்லது கைவிரலைக்கொண்டோ தொடுவதுதான் இதன் சிகிச்சை முறையாகும்.

மருத்துவ ஆய்வுக்கூடங்களும், நவீன பரிசோதனைக் கருவிகளும், உயிர் காக்கும் என நம்பப்படுகிற மருந்துகளும் இல்லாத மருத்துவமுறையான அக்குபங்சரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.

•

விலை :  ரூ. 25/-







பிற உயிர்களின் சுய மருத்துவம்

அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்






















வணிகச் சந்தையை பின்னொற்றிச் செல்லும் மனிதனின் இன்றைய வாழ்க்கை முறை, அவனை மிக விரைவாக இயற்கையினின்று விலக்கி வைத்துக்கொண்டிருக்கிறது. மேலும் நுட்ப அறிவை அவனுள் திணித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவனது நுண்ணுணர்வுகளை நாளுக்கு நாள் மரத்துப்போகச் செய்கிறது. தன்னுணர்வை இழந்த மனிதன் தன்னைச் சார்ந்துள்ள பிற உயிர்களைப் பற்றிய எண்ணங்களை கிட்டத்தட்ட முற்றாக கைவிட்டுக்கொண்டிருக்கிறான். அதைத்தான் சக்தி பகதூர் தன் அனுபவம் வாயிலாக இந்தப் புத்தகத்தில் பேசியுள்ளார். நாம் காணத் தவறுகிற பல்வேறு அம்சங்களை நினைவூட்டுகிறார். இதுவரை நாம் கொண்டிருந்த பார்வைக்கு புதிய நிறம் ஊட்டுகிறார்.

போப்பு

•

விலை : ரூ. 70/-









பால் ஏன் சாப்பிடக்கூடாது?

அக்கு ஹீலர் உமர் பாரூக்

















மிகவும் தாமதமாகத்தான் பால் பற்றிய பல கேள்விகள்  எனக்கு உருவாயின. ஆங்கில மருத்துவத்தில் ஆய்வுக்கூடத்தில் பணி புரிந்தபோது அறிமுகமான இயற்கை மருத்துவர்கள், இயற்கை மருத்துவ புத்தகங்கள் எனக்குள் பால் பற்றிய கேள்விகளை உருவாக்கியிருந்தன. 2002 இறுதியில் ஹீலர் போஸின் அறிமுகம் கிடைத்தபோது அவர் அங்கு சிகிச்சைக்குவரும் அனைத்து நோயாளிகளுக்கும் பால் பயன்படுத்த தடைவிதிப்பார். பால் குடிக்கும் நபர்களின் உடல்நிலையைவிட பாலை நிறுத்திவிட்ட பிறகு ஏற்படும் உடல்நலம் தனித்த தன்மையோடு இருப்பதைப் பார்க்க முடிந்தது. என் உடலின் அடிப்படை நோய்களுக்கான காரணங்கள் பாலில் துவங்கியிருப்பதை மிகத் தாமதமாகப் புரிந்துகொண்டு பால் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தினேன். உடல் மிக வேகமாக இயல்புக்குத் திரும்புவதை உணர முடிந்தது.
•

விலை :  ரூ. 30/-







Saturday, February 9, 2019

மக்கள் தெய்வங்கள்

கோ. பழனி























நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு நிலங்களெங்கும் திரிபுகளடைந்து காற்றில் மிதந்துகொண்டிருக்கும் இத்தெய்வக் கதைகள். மக்களுள் மக்களாக வாழ்ந்து மறைந்த எளியவர்களின் கதைகள். வழிபாட்டுக்குரிய மனிதர்களின் கதைகள். மனிதர்கள் தெய்வமாக்கப்பட்டதன் கதைகள். இக்கதைகள் எளிய மக்களின் நிலவெளியில் நிகழ்ந்தவை. காலங்களைக் கடந்தும் அந்நியப்படாமல் அவர்களின் வாழ்வோடு பிணைந்துகிடப்பவை.

வெவ்வேறு சாதியைச் சார்ந்த ஆணும் பெண்ணும் காதல் செய்வதை எதிர்ப்பது, அவர்களைப் பிரிப்பது, முடியவில்லை என்றால் கொலை செய்து, அவ்வாறு இறந்தவர்களைத் தெய்வங்களாக்கிவிடுவது என்கிற போக்கில் பல தெய்வங்கள் உருப்பெற்றுள்ளன.

•


விலை : ரூ.140/-








என் கதை

கமலாதாஸ்
தமிழில் : நிர்மால்யா






















கமலாதாஸின் என் கதையைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அகவாழ்க்கையை அதன் சோகத்தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை.

சச்சிதானந்தன் (மலையாளக் கவிஞர்)

•

விலை :  ரூ. 190/-






பறவையின் வாசனை

கமலாதாஸ்
தமிழில் : நிர்மால்யா























கமலாதாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றியபோது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மீகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து அவரது குரல் இந்திய இலக்கியத்திலும் கவனத்தைப் பெற்றது.

பெண்மையின் அகப்படாத ரகசிய வியப்புகளை வெளிப்படுத்தும் பலவித முகங்கள் அவரது கதைகளில் துளித்துளியாக நிறைந்துள்ளன. அதிலொன்று பணிவு அடுத்தது கருணை, வேறொன்று துயரம், மற்றது விலைமகளுக்கானது. இசை, காதல், அன்பு ஆகியவற்றை ஸ்பரிசிக்கப்படாத அனுபவமாக வழங்கும் இக்கதைகள் வாசகமனதைக் களங்கமின்மையால் நிர்வாணப்படுத்துகின்றன. நவீன காலகட்டத்தின் ஆண் பெண் உறவில் கலந்த முரண்களின் விவரிப்புகளே இவரின் கதைகள்.

கலை, தத்துவ உலகில் சுற்றிப் பிணைக்கப்பட்ட மரபுகளுக்கு அறைகூவல் விடுத்தன கமலாதாஸின் கதைகள். 1953 முதல் 1984 வரை அவர் எழுதிய 140 கதைகளிலிருந்து படைப்பெழுச்சியின்  உச்சத்தைத் தொட்ட தேர்ந்தெடுத்த பதினாறு சிறுகதைகளின் தொகுப்பு இது.

•

விலை : ரூ. 150/-







அன்னா கரினினா

லியோ டால்ஸ்டாய்





















ஒரு ஜோடிக்காதலர்களின் வாழ்க்கையே வீணாகிப்போனதையும் வேறு ஒரு ஜோடி காதலர்கள் வாழ்க்கையைப் பூர்ணமாக வாழ்ந்து வந்ததையும் மிகவும் சிறப்பாக இந்த நாவலில் டால்ஸ்டாய் எழுதியுள்ளார். அன்னாவை ஒரு லட்சிய காதலியாக சித்தரிப்பது ஒரு சிரமமான காரியம். அதேபோல கரினீன்மேல் அனுதாபம் உண்டாகும்படி சித்தரிப்பது மிகவும் சிரமமானது. இரண்டையும் இரண்டு காதல்களையும் கலைநுட்ப தெளிவோடு செய்திருப்பது டால்ஸ்டாயின் லாவகம்.

உலகில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படித்த காதல் நவீனம் அன்னா கரினீனா. பல பேருக்கு உலகில் நல்ல நாவல் என்றதும் நினைவுக்கு வருவது அன்னா கரினீனாதான்.

க.நா. சுப்ரமணியம்.

•

விலை :  ரூ. 350/-




தஸ்தயேவ்ஸ்கியின்வாழ்வும் கலையும்

ஜி.என். பணிக்கர்



















தஸ்தயெவ்ஸ்கியை முதன்முதலாக படிக்க அமர்ந்த அந்த இரவு என் வாழ்வின் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. என் முதல் காதலைவிடவும் மிகுந்த முக்கியத்தும் வாய்ந்தது. அதுதான் விரிவான பிரக்ஞை பூர்வமான என் முதற்செயல். ஒரு ஆழமான நீண்ட முதலாவது வாசிப்புக்குப்பின் நான் நிமிர்ந்து பார்த்த அந்தத் தருணத்தில் காலமுள் நின்றுவிட்டதென்பது உண்மையா இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவும் சரிவரத் தெரியவில்லை. அந்த கணத்தில் உலகம் இறந்துவிட்டிருந்தது என்பது எனக்குத் தெரியும். ஒரு மனிதனின் ஆத்மாவிற்குள் முதன்முறையாக என் பார்வை விழுந்தது அப்போதுதான். அல்லது இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், தன் ஆத்மாவை என்னிடம் வெளிப்படுத்திய முதல் மனிதன் தஸ்தயெவ்ஸ்கிதான்.

சி. மோகன்

•

விலை : ரூ. 100/-







தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்

வீரைய்யன் / மயில்வாகனன்




















தண்ணீர் மானுட வரலாற்றில் ஒருபோதும் விலைக்கு விற்கப்பட்டதில்லை. அதற்குக் காரணம் தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்லாது எல்லா உயிர்களின் வாழ்வுக்கும் அடிப்படைத் தேவை. அந்த அடிப்படைத் தேவையைப் பெறுவது என்பது இயற்கையாய் அமைந்த அடிப்படை மனித உரிமை. இது மனிதனுக்கும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். அந்த உரிமையைப் பறிக்கவோ, நீருக்கு விலை நிர்ணயிப்பதையோ நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே கூடாது. இந்த தனியார்மயம் குறித்தும் நீருக்கு விலை நிர்ணயிப்பது குறித்தும் அதனை விவசாயத்திற்கு விரிவுபடுத்துவது குறித்தும் பாராளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எந்தவித விவாதத்தையும் நிகழ்த்தாமலிருப்பது பெரும் ஆபத்தாகவே அமையும்.

•

விலை :  ரூ.40/-








WTO உலக வர்த்தக கழகத்தில் அடகு வைக்கப்பட்ட நமது உரிமைகள்

நிமிர் கட்டுரைத் தொகுப்பு






















பணக்கார நாடுகள் வளரும் நாடுகளின் வளங்களை, மனித உழைப்பை, நிலங்களை, அரசியலை அந்தந்த நாட்டின் அரசியல்வாதிகளோடும், பெருமுதலாளிகளோடும் கைகோர்த்துக் கொண்டு இந்த உலக வர்த்தகக் கழகம் மூலம் சுரண்டிக்கொண்டு இருப்பது வாடிக்கை.

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய ஒன்றியத்தின் பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை உலக வர்த்தகக் கழகத்திடம் அடகுவைத்து நமது தற்சார்பு கொள்கைக்கு எதிராக மக்களை பிச்சைக்காரர்களாக தெருவில் அலையவிட்டது. விவசாயிகளுக்கான மானியத்தை நிறுத்தியது. நமது கல்வியை பணக்காரர்களுக்கான கல்வியாக மாற்றி சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது. இவைகளை எல்லாம் கேள்வி கேட்டால் நாட்டில் மதச்சண்டையை உருவாக்குவது என காவிகளின் செயல்பாட்டை ஆதாரத்தோடு அம்பலப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.

•


விலை : ரூ. 50/-










மெட்ராஸ் பஞ்சம்அன்று முதல் இன்று வரை

(மதியருவி / கரிகாலன்)























"பஞ்சத்தில் சாகும் மக்களுக்கு உணவு உதவியளித்தால், அதுவே பழக்கமாகி ஏழைகள் பிற காலங்களிலும் உரிமையாய் கோருவர். இந்திய உயிர்களுக்காக பிரிட்டன் வர்த்தகத்தின் பின்னடைவை ஏற்க முடியாது" என்ற லார்ட் லிட்டனின் வாதத்தை அப்போதைய பஞ்ச ஆணையகம் ஏற்றுக்கொண்டது.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன்பும் பின்பும் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருந்தது, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்னவாக இருந்தது, தற்போது WTOவில் இந்தியா போடும் ஒப்பந்தங்கள் வரை அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

•


விலை :  ரூ. 45/-






கானகத்தின் குரல்

ஜாக் லண்டன்
தமிழில் : பெ. தூரன்




தங்கம் தேடி பலபேர் அந்தப் பகுதிக்குச் சென்றதால் அவர்களுக்குத்  தேவையான பொருள்களை அங்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் அவர்களுடைய கடிதப்போக்குவரத்துக்கு வேண்டிய வசதிகளை கனடா அரசாங்கம் மேற்கொண்டது. தபால் வண்டிகளை இழுக்கவும் தங்கம் தேடிச்செல்பவர்கள் வண்டிகளில் செல்லவும் ஏராளமான நாய்கள் வேண்டியிருந்தன. அதனால் நாய் வணிகம் ஓங்கிற்று. நாய்களை திருடிக்கொண்டுவந்து விற்பதும் பணம் சம்பாதிக்கும் வழிகளில் ஒன்றாயிற்று. அந்த வழியிலே பனிப்பிரதேசத்திற்கு வந்ததுதான் கதையின் நாயகனான இந்த நாய். ஜாக் லண்டன் கதை சொல்வதிலே இணையற்றவர். இந்தக் கதையை வாசிப்பவர்கள் அவருடைய மற்ற கதைகளையும் தேடிச்செல்வர் என்பதில் சந்தேகமில்லை.

•


விலை : ரூ.110/-












அன்பு வழி  (பாரபாஸ்)பேர் லாகர்க்விஸ்ட்

தமிழில் : க.நா. சுப்ரமணியம்






















"கிறிஸ்து என்கிற பிரச்சினையை இன்றைய தேவைக்குத் தக்கபடி சித்தரித்திருப்பவர்களிலே இந்த நாவலாசிரியரை முதன்மையாகச் சொல்ல வேண்டும். குருட்டு நம்பிக்கைக்கும் நாஸ்திகத்துக்கும் இடையே உள்ள போராட்டத்தை அதி அற்புதமாக கலை உணர்ச்சியுடன் சித்தரிக்கிறார் ஆசிரியர். உண்மை உலகுக்கும் நம்பிக்கை சிருஸ்டிக்கக்கூடிய உலகத்துக்கும் இடையில்  உள்ள கயிற்றில் வெகுலாவகமாக நடந்து வித்தைகள் பல புரிந்திருக்கிறார் ஆசிரியர்.

நாவல் பற்றி ஆண்ட்ரே ழீடூ.

•

விலை : ரூ. 75/-









மரியா மாண்டிசோரியின்குடும்பத்தில் குழந்தை

தமிழில் : மீனாட்சி சிவராமகிருஸ்ணன்























இந்தக் காலத்தில் நாம் குழந்தைக்கு தூய காற்று மற்றும் வெப்பம் கிட்ட வேண்டும் என்பதிலேயே நம் எண்ணங்கள் நிறைந்துள்ளன. இரண்டும் வெகு முக்கியமானவை. ஆனால் உடலுக்கு மாத்திரம் சூரியவெளிச்சம் இன்றியமையாதது என்றால் மனதின் நிலையில் சூரியனுக்கு இடமில்லையா? ஒவ்வொரு குழந்தைக்கும் உள்மனது உருவாகுவது வேறுபட்டது. வெகு நிதானமானது மிக முக்கியமானது மற்றும் மிக சூட்சுமமானது. வயது வந்தவர் தங்கள் திறனாலும் குருட்டுத்தனத்தாலும் அதனை நாசம் செய்கிறார்கள்.

வயது  வந்தவர்கள் குழந்தைகளின் தேவைகளை அறிந்துகொள்வதற்கு வேண்டிய கூருணர்வுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

•

விலை : ரூ. 90/-









Thursday, February 7, 2019

தஞ்சை நாடோடிக் கதைகள்

தொகுப்பு : தஞ்சை ப்ரகாஷ்






















தேர்ந்த கதைசொல்லியான தஞ்சை ப்ரகாஷ் தொகுத்த இக்கதைகள் தொகுக்கப்பட்ட காலத்தில் தாமரை இதழில் தொடர்ந்து வெளிவந்தவை. இக்கதைகள் தஞ்சையின் புராணகால கற்பனை மட்டுமல்லாது, சில நுறு ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சையின் கலாச்சாரத்தின் எதார்த்தத்தையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. பெரும் வியப்புகளும், மாய உலகங்களுமாக விரிந்து, வெறும் நீதிக்கதைகளாக மட்டுமே நின்றுவிடும் பொதுவான கதைமரபிலிருந்து, வேறுபட்டு, அம்மாய உலகங்களில் நமது வரலாற்றையும் இணைத்துக்கொண்டு தலைமுறைகள் கடந்து பயணிப்பதுதான் நாட்டுப்புற கதைகளின் தனிச்சிறப்பு. இக்கதைகளும் அத்தகைய சிறப்புக்குரியதே.

•

விலை : ரூ.100/-









Wednesday, February 6, 2019

நான் நடிகன் ஆன கதை

சார்லி சாப்ளின் / தமிழில் : சுரா





















எனக்கு சொந்தமாக ஒரு தந்தை இருக்கிறார் என்று எந்தச் சமயத்திலும் நான் நினைத்ததில்லை. அவர் எங்களுடன் தங்கியிருந்தது எனக்கு ஞாபகத்தில் இல்லை. அவரும் ஒரு நாடக நடிகர்தான். என் தந்தை பார்ப்பதற்கு நெப்போலியனைப் போல இருப்பார் என்று என் தாய் கூறுவார். கம்பீரமான குரலையும் நடிப்புத் திறமையையும் கொண்ட ஒரு நல்ல நடிகராக அவர் இருந்திருக்கிறார். அதனால் அந்தக் காலத்தில் அவருக்கு ஒரு வாரத்திற்கு நாற்பது டாலர் வருமானமாக கிடைத்திருக்கிறது. ஆனால், என் தந்தையின் அளவுக்கு மீறிய குடிப்பழக்கம் அவரை பலவிதப்பட்ட பிரச்னைகளிலும் சிக்க வைத்துவிட்டது. என் தாயும் தந்தையும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்ததற்கு முக்கிய காரணமே அதுவாகத்தான் இருந்திருக்கிறது. நகைச்சுவையும் வருத்தமும் கலந்துதான் என் தந்தையைப் பற்றிய கதைகளை என் தாய் கூறுவார்.

•

விலை : ரூ. 150/-



  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...