Saturday, January 12, 2019

பெண் எனும் பொருள்விற்பனைக்கு : பெண்கள், குழந்தைகள்

லடியா காச்சோ / தமிழில் : விஜயசாய்






















நான் இந்த புத்தகத்தை எழுதி முடிப்பதற்குள், இடையிடையே நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்து உரையாடி அவர்களின் கதைகளைக் கேட்டபோது அவர்கள் எனக்கு ஆசையாய் கொடுத்த நினைவுப் பரிசுகளையும், வரைந்து கொடுத்த சித்திரங்களையும், அவர்களின் புகைப்படங்களையும் பார்த்து நெகிழ்ந்திருப்பேன். குவாதமலாவில் நான சந்தித்த ஒரு சிறுமி எனக்காக சன்னமான கம்பியில் மரச்சக்கைகளைக் கொண்டு செய்து கொடுத்த ஒரு ஜோடிச் சின்ன காதணிகள் - அரிசோனாவில் குழந்தை வழி ஆபாசப் படைப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சிறுவன் டானி எனக்கு வரைந்து கொடுத்த ஓவியம் .... இப்படி நிறைய ......

சில சமயங்களில், நான் ஏராளமாக எடுத்திருந்த பேட்டிகளை குறிப்பேடுகளில் இருந்தும், ஒலிநாடாவில் இருந்தும் பார்த்தும் கேட்டும் எழுதிக் கொண்டிருக்கையில் உணர்ச்சிகள் மேலோங்க சற்று எழுதுவதை நிறுத்தியதும் உண்டு. குளிர் நடுக்கம், பசி, களைப்பு, தாகம், சில சமயங்களில் பசியார்வமின்மை, அதே போல் தூக்கமின்மையும், சில சமயங்களில் கனவுகளின் தொல்லைகளுமாக பலதரப்பட்ட தாக்குதல்களுக்கு ஆளாகினேன். இத்தருணத்தில் என் மனதில் குளிரிரவு ஒன்றில் உசுபெஸ்தானியச் சிறுமிகள் என்னை வாஞ்சையுடன் தொட்டுத் தடவிய அந்த இதமும் ஆப்கான் படையில் இருந்த சிறுமிகளுக்கு நான் பிஸ்கோத்துகளை அள்ளிக் கொடுத்தபோது அவற்றை ஏதோ தங்கக்கட்டிகளையே நான் கொடுத்ததைப் போல் வாங்கிய அவர்களின் முகத்தில் ஒளிர்ந்த அந்த புன்னகையும் களிப்பும் என் மனதை நிரப்புகின்றன.

(புத்தகத்திலிருந்து......)

•

விலை : ரூ. 350/-











No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...