Monday, April 29, 2019

பூச்சிகள்ஓர் அறிமுகம்

ஏ. சண்முகானந்தம்






















வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பொன்வண்டுகளை அழகியலாகவும், கரப்பான்கள், பூரான், புழுக்களை அருவருப்புடனும் பார்க்கும் சிந்தனைப்போக்கு நம் அனைவர் மனத்தில் ஏதேனும் ஒரு மூலையில் படிந்துள்ளது. இதற்கான காரணங்கள் அல்லது அச்சம் எப்போது தோற்றம் கொள்ள ஆரம்பித்தது என்பது தனித்த ஆய்விற்குரியது. கரப்பான் அல்லது வண்ணத்துப்பூச்சியாக இருப்பினும், அதன் சூழல் பங்களிப்பை சரியாகவே செலுத்துகின்றன. அந்த விதத்தில், அருவருப்பும், அழகும் நம் பார்வைக்குத்தான். பூச்சிகளை அறிவியல் பார்வையுடனும், அதன் சூழல் முக்கியத்துவம், மனித-பூச்சிகளுக்கான உறவுகள், தமிழ்ப்பெயர்கள், வட்டார வழக்குகள் குறித்த உரையாடலை ஒளிப்படங்களின் துணையுடனும் பார்க்கத் துவக்க வேண்டியுள்ளது.

•

விலை : ரூ. 60/-

















எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

ஜான் ஹோல்ட்
தமிழில் : அப்பணசாமி






















ஜான் ஹோல்ட்டை முதன்முதலாக வாசித்தபோது எனக்கு குழந்தைகள் குறித்து பெரிதாக ஒன்றும் தெரியவில்லை என்ற புரிதலைக்கொடுத்தது. இப்போதைய இரண்டாவது வாசிப்பில் வீடும் பள்ளியும் குழந்தைகள் குறித்த உணர்வில் மிகுந்த பிற்போக்குத்தனமானவை என்று தோன்றுகிறது. குழந்தைகள் குறித்த தனித்த கற்றலை நாம் எப்போது துவங்கப்போகிறோம்? என்பது இந்தப் புத்தகத்தின் வழியாக எழும் வலுவான கேள்வி. குழந்தைகளின் இயல்பை, சுயமான கற்றலை, குழந்தைகள் சுதந்திரமாக இயங்க வேண்டியதன் அவசியத்தை அதன் அர்த்த அடத்தியோடு பல அத்தியாங்களில் தன் சொந்த அனுபவங்களில் இருந்து எழுதி இருக்கிறார் ஜான் ஹோல்ட்.

பில் ஹல்லின் பின்வரும் மேற்கோளை ஜான் குறிப்பிடுகிறார் : 
"எவ்வாறு பேசுவது என்பதைக் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தந்தால், அவர்கள் ஒருபோதும் அதைக் கற்கமாட்டார்கள்." இந்த வியப்பான மேற்கோள் ஜானுக்கு முதலில் நகைச்சுவையாகப்பட்டது. ஜான் இந்தப் புத்தகத்தில் பேசும் பல பகுதிகள் நமக்கும் அப்படித் தோன்றும்படி இருக்கலாம். நாம்கூட குழந்தைகளுக்கு நாம்தான் பேசக் கற்றுக்கொடுத்ததாக நம்பிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவு வார்த்தைகளை நாம் சொல்லிக்கொடுத்திருப்போம்? எவ்வளவு வார்த்தைகளை அவர்களாகவே கற்றுக்கொண்டார்கள் என்பதை நாம் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.

இரவில் புத்தகம் வாசிக்க அமர்ந்தபொழுது அந்த 4 வயது சிறுமியும் குட்டிப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு என்னருகில் அமர்ந்தாள். இன்னும் வாசிக்கப்பழகாத அவள் திடீரென கையிலிருந்த புத்தகத்திலிருந்து "சப்பாத்தி" என்றாள். புத்தகத்தில் எட்டிப்பார்த்தால் "சபர்மதி" என்று எழுதியிருந்தது. எழுத்துக்கூட்டி வாசிக்க சொல்லித்தராத நிலையில் அவளாகவே வாசித்தது இது.

ஒவ்வொரு குழந்தையாலும் இயல்பாகவே தன் சூழலிலிருந்து பெரும்பாலானவைகளை கற்றுக்கொள்ள முடிகிறது. நாம்தான் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முழுமையற்ற புரிதலிலிருந்து குழந்தைகளின் இயல்பை நாம் குலைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஜான் ஹோல்ட் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் கிடைத்த மதிப்பு நிறைந்த புதையல். அதிகம் வாசிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்படாத இந்தப் புத்தகம் நம் சூழலில் மீண்டும் மீண்டும் வாசிப்புக்குத் தேவையானதாக இருக்கிறது. குழந்தைகளின் உள்உலகம் தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டு வரும் நம் சூழலில் குழந்தைகள் மீதான அனுகுமுறையில் நிதானத்தையும் நம்பிக்கையையும் உருவாக்க நம்மோடு பேசுகிறது இந்தப் புத்தகம். 

குழந்தைகள் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்ள விரும்புவதாக அவரே சொல்வது : 
"குழந்தைகளை நம்புங்கள். அதைவிட மேலானது அல்லது கடினமானது எதுவும் இல்லை. குழந்தைகளை நாம் நம்ப வேண்டுமென்றால் முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்"


•

விலை : ரூ. 220/-



















Sunday, April 28, 2019




வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்புரேமண்ட் கார்வர்

தேர்வும் தொகுப்பும் : செங்கதிர்























ரேமண்ட் கார்வர் அமெரிக்கச் சிறுகதையாளர். நசிந்துபோயிருந்த யதார்த்தவாத சிறுகதை மரபைப் பெரும் வீச்சுடன் மீண்டும் உயிர்ப்பித்தவர். எளிமையான சித்தரிப்பும் அலட்டலில்லாத மொழிநடையும் வாசிப்பில் எவ்வளவு ஆழங்களையும் சாத்தியங்களையும் உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர். உலக சிறுகதை வரலாற்றில் தவிர்க்க முடியாத, ஆளுமையான கார்வரின் கதைகள் தமிழில் இப்போதுதான் முதன்முறையாகத் தொகுப்பாக வெளிவருகிறது. நேரடியாகச் சொல்லும் யதார்த்தவாதக் கதை மரபின் மீதிருக்கும் கோணல் பார்வையையும் எள்ளலையும் வெகு சாதாரணமாகத் துடைத்தெறியும் இக்கதைகள் தமிழுக்கு மிக முக்கியமான வரவாகும்.

•

விலை : ரூ. 250/-










சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

ஆர். பாலகிருஷ்ணன்

















சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு , கீழ் - கிழக்கு என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு. சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு.

இவை, இந்த ஆய்வுப் புத்தகம் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.

•

விலை : 150/-










உணவோடு உரையாடு

அக்கு ஹீலர் உமர் பாருக்




















உடல் நலமும் உணவு முறையும் பின்னிப்பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியானதோ அதே அளவு அவசியமானது உணவைப் பற்றி நாம் அறிவதும். நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதைப் புரிந்து கொள்வதே உணவு முறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது? என்பதை விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

•

விலை : ரூ. 50/-













டோட்டோ சான்

ஜன்னலில் ஒரு சிறுமி

டெட்சுகோ குரோயாநாகி






















நான் டோமாயியைப் பற்றி எழுத இன்னும் ஏராளமாகச் செய்திகள் உள்ளன. ஆனால் டோட்டோ-சானைப் போன்ற ஒரு சிறுமி பெரியவர்களின் மிகச் சரியான வழிகாட்டுதலுடன் மற்றவர்களுடன் கூடிப்பழகும் வகையில் நல்ல பெண்ணாக எப்படி வளர்ந்தாள் என்பதை மற்றவர்களை உணரச் செய்தால் அதுவே போதுமானது என நினைக்கிறேன்.

குழந்தைகளைப் பலவந்தப்படுத்துதல் குறைவாகவும், பள்ளி இடைவிலகல் அதிகமில்லாமலும் டோமோயியைப் போல் உள்ள பள்ளிகள் இப்பொழுதுகூட இருக்கலாம். ஆனால் டோமோயியில் பள்ளி நேரம் முடிந்தபின் கூட குழந்தைகள் வீட்டிற்குப் போக விரும்பியதில்லை. அதே போல் காலையிலும் மாணவர்கள் பள்ளிக்கு வர அதிக நேரம் காத்திருப்பதில்லை. டோமோயி பள்ளி அப்படிப்பட்டதாகும்.

வியக்கத்தக்க இது போன்ற பள்ளியை அமைத்த நெடுநோக்கமும் உற்சாக ஊற்றும் கொண்ட திரு, கோபயாஷி 1893ல் டோக்கியோவிற்கு வடமேற்கில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.

குழந்தைகளின் சுயமதியாதையையும் தனித்தன்மையையும் வளர்க்கப்போதிய அளவிற்கு சுதநதிரமான பாடத்திட்டமும் குறைந்த அளவு மாணவர்களைக் கொண்ட வகுப்பும் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். கற்பது காலைவேளையில் நடைபெற்றது. மாலையில் உலாவச் செல்லுதல், தாவரங்களை சேகரித்தல், படம் வரைதல், பாடுதல், தலைமையாசிரியரின் உரையைக் கேட்டல் ஆகியவற்றில் செலவிடப்பட்டது. திரு. கோபயாஷி அவரது சிறப்பு முறையின் மீது அளவிட முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். பின்னாளில் அது போன்ற பாடத்திட்டத்தை உடைய டோமோயி பள்ளியை உருவாக்கினார்.

டோமோயி தற்போது இல்லை. ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்தபின் உங்கள் நினைவில் டோமோயி நிற்குமானால் அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சியாகும்.

இந்தப் புத்தகம் ஜப்பானில் வெளியாகியபின் ஆங்கிலத்தில் வெளியவதற்கு முன் குறிப்பிடத்தக்க பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. முதலில் இந்தப் புத்தகம் எதிர்பாராத அளவிற்கு விற்பனை ஆன புத்தகமாக ஆகியிருந்தது. ஜப்பானின் புத்தக வெளியீட்டில் ஒரே ஆண்டில் 45,00,000 பிரதிகள் விற்பனையாகி சிறிய டோட்டோசான் வரலாறு படைத்தது.

•

விலை : ரூ. 105/-























Thursday, April 25, 2019

அந்தமான் தீவின் ஓர் ஆதிக்கதை

கதைசொல்லி :  அன்விதா அப்பி
தமிழாக்கம் : புதுவை ரா. ரஜினி
சித்திரங்கள் : பார்த்தா சென்குப்தா
















காட்டுவாசிகள் இந்த வாழ்க்கையை எப்படி இயல்பாகப் பார்க்கிறார்கள் என்பதை எப்படி குழந்தைகளுக்குச் சொல்வது?

காடு மட்டுமே எல்லாவற்றையும் நமக்குக் கொடுத்துவிட முடியும் என்பதை....?

இறப்பைப் பற்றி குழந்தைகளிடம் பேச நமக்கு தயக்கம் உண்டு தானே?

கொடிகளைத் திரித்து கயிறாக்கி வானத்தில் எறிந்து மேலே செல்வதைப் பற்றி இந்தக் கதை நாம் இதுவரை கேட்காத குரலில் பேசுகிறது.

நாம் புரிந்துகொள்ள கடினமாக உணர்வதை இந்தக் கதை விளையாட்டாகச் சொல்கிறது.

கதைகள் ஏன் வேண்டும் என்பதற்கு அர்த்தமாக இந்தக் கதை இருக்கிறது.

இக்கதை அந்தமான் பழங்குடிகளின் முதல் நாட்டுப்புறக் கதை.

அந்தமானியர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு புலம் பெயர்ந்து அந்தமான் சென்றடைந்ததாகக் கருதப்படுகிறது. அவர்களுடைய பண்டைய மொழிகளில் பொதிந்து கிடக்கும் பண்பாட்டுக் குறிப்புகள், பழங்குடி இனவாழ்க்கை பற்றிய தகவல்கள் போன்றவை அந்த இனத்தின் முதியவர்கள் மறைய மறைய அருகிக்கொண்டே வருகின்றன. இந்தக் கதை, 2006 ஜனவரி 21ம் தேதி, நாவ் ஜூனியர் என்னும் அந்தமானியரால் அன்விதா அப்பிக்கு கூறப்பட்டது. 2009இல் மறைந்த நாவ் ஜூனியருக்கு இந்தக் கதையை எத்தனை முறை கூறவும் அலுத்ததே இல்லை.


•

விலை :  ரூ. 30/-
(25 வண்ணப் படக்கதைகள் ரூ. 700/-)























Monday, April 15, 2019

அதோ அந்தப் பறவை போல

ச. முகமது அலி





















பேரற்புதங்களில் ஒன்றான பறவைகள் இயற்கையின் நுட்பமான சங்கிலிப் பின்னலின் பிரிக்க முடியாததொரு கண்ணி.

இப்புவியில் பறவைகளுக்கும் மரங்களுக்கும் தொடர்பிருக்கிறது. பறவைகளுக்கும் மலர்களுக்கும் தொடர்பிருக்கிறது. பறவைகளுக்கும் பயிர் விளைச்சலுக்கும், பறவைகளுக்கும் காடு பெருக்கத்திற்கும் கூட சம்பந்தம் இருக்கிறது.

பறவைகள் ஒரு நாளை எவ்வளவோ அழகாகத் துவக்குகின்றன. பறவைகளை ரசிக்கத் துவங்குவதே பறவையியலை அறிந்து கொள்வதற்கான முதல் எட்டு. இயல்பூக்கமான கூருணர்வுகளை இழந்துவிட்ட நமக்கு, பறவைகளின் உலகினை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்யும்போது அந்த இழப்பு ஒரு ஏக்கமாக மாறுகிறது.

பேராச்சரியங்களும் புதிர்களும் நிறைந்த பறவையியல், முகமது அலி அவர்களின் எழுத்தின் வழியாக முதல்முறையாக நமக்குக் கிடைக்கிறது. "அதோ அந்தப் பறவை போல"  பறவையியலைப் பயில ஒரு ஒளிரும் மாணிக்கம். பொருளற்ற கூப்பாடுகளிலிருந்து விலகிய அறிவார்ந்த முயற்சிகளின் வெளிச்சம்.

பறவை என்றால் என்ன?, வலசை, பறவை நோக்கல், பறவையியல் முன்னோடிகள், பறவைகளின் வகைப்பாடுகள்,  உடலமைப்பு இயங்கியல் என பறவைகளைப் பற்றி அறிய ஒரு விரிவான புத்தகம். ஓவியம் மற்றும் படவிளக்கங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள்.

•

விலை : ரூ. 160/-
















Saturday, April 13, 2019

பல்லுயிரியம் 

ச. முகமது அலி






















மலை, சிறுபுதர், காடு, புல்வெளி, பறவை, மீனினம், கடல், விலங்கு, ஓடை, பூச்சி இவற்றில் எதுவொன்றை தொந்தரவு செய்தாலும் இன்னொன்று சரிந்துவிடும்படி பிணைக்கப்பட்டுள்ள பல்லுயிரிய வலைப்பின்னலை நாம் புரிந்துகொள்ள வேண்டிய காலம் இது. தவறினால் ஒரு கணப்பொழுதுகூட சகித்துக் கொள்ள முடியாத வாழ்க்கையை அது நமக்குப் பரிசாகத் தரும்.

காட்டுயிர்களுக்கும், இயற்கையின் இயல்பான நிகழ்வுகளுக்கும் உலகை அழிக்கும் தீய சக்திகள் என்று நாம் சூட்டியுள்ள பட்டங்கள் எவ்வளவு மலினமான பொய் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

திரும்பிய திசையெல்லாம் நிலவளத்தைக் கொல்லும் பாலிதீன் பைகள் காற்றில் படபடக்கும் இக்காலத்தில், Operation Green Hunt என்று மக்களைத் துரத்திவிட்டு நிலங்களையும் வளங்களையும் விற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இப்புத்தகம் இயற்கையை, வளங்களை, விலங்குகளை அறிவியலாக புரிந்துகொள்ள ஒரு அகல் விளக்கு.

பல்லுயிரியர் -  இயற்கையியலாளர் முகமது அலி அவர்களின் உணர்வுப்பூர்வமான அக்கறையிலிருந்து உருவாகியிருக்கும் புத்தகம்.

கேள்வி பதில் வடிவத்திலான இப்புத்தகம் பட்டறிவின் துல்லியமும் ஆராய்ச்சிகளில் உருவான ஞானமும் இயைந்து பல்லுயிரியம் - இயற்கை, காட்டுயிர் பற்றி உணர்வுப்பூர்வமாக உருவாகியிருக்கிறது.

•

விலை : ரூ. 140/-  








Friday, April 12, 2019

குழந்தைகளின் 100 மொழிகள்மொழி, பண்பாடு, கல்வி குறித்த கட்டுரைகள்

ச. மாடசாமி























அண்மையில் அமெரிக்காவில் ஒரு பொதுப்பள்ளியில் மழலையருக்கான ஒரு வகுப்பறையைப் பார்த்தேன். வகுப்புக்குள் நுழைந்ததும் குழந்தைகள் தங்கள் இருக்கையை நோக்கி ஆர்வமாக விரைந்தார்கள். நான்கு சிறார்க்கு ஒரு மேசை. மேசையில் செயல்பாட்டுக்கான எளிய உபகரணங்கள். போய் உட்கார்ந்தது ஒரு குழந்தை படம் வரைகிறது. ஒரு குழந்தை வர்ணம் தீட்டுகிறது. சும்மா கிறுக்குகிறது ஒரு குழந்தை. புதிர் விளையாட்டில் ஒரு குழந்தை. ஆசிரியரைப் பார்க்கவுமில்லை, தேடவுமில்லை. ஆசிரியையும் இருந்தார். தள்ளி நின்று கவனித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது குழந்தைகளை நெருங்கினார், பாராட்டினார், யோசனைகள் சொன்னார், சட்டென்று விலகிக்கொண்டார்.

சும்மா நிற்க முடியாதே, ஏதாவது பேச வேண்டுமே! ”குழந்தைகளுக்கு எழுத்து எப்பொழுது கற்றுத்தருவீர்கள்” என்று கேட்டேன். குழந்தைகளின் சித்திர மொழிகளுக்குத்தான் முன்னுரிமை. எழுத்து பின்னர்தான். இது ரெக்கியோ எமிலியா அனுகுமுறை என்றார் ஆசிரியர்.

ரெக்கியோ எமிலியா - குழந்தைக் கல்விக்கான சிந்தனை வடிவம். ஐரோப்பிய வகுப்பறைகள் வற்புறுத்திய சுதந்திரம், சோசலிச நாட்டு வகுப்பறைகள் முன்னுரிமை தந்த சமூக சிந்தனை - இரண்டின் இணைப்பு என ரெக்கியோ எமிலியோவைச் சொல்லலாம்.

கனவுகள் நிறைந்த சுதந்திரப் பள்ளிகள் பல தாக்குப்பிடித்து நிற்பதில் தோல்வி கண்டிருக்கின்றன. இன்று இத்தாலி முழுவதும் ரெக்கியோ பள்ளிகள் பெருகி இருப்பதும், உலகம் முழுவதும் ரெக்கியோ அணுகுமுறை சிறகடிப்பதும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவோர்க்கு புது நம்பிக்கை.


(புத்தகத்திலிருந்து.....)

(கல்வி-குழந்தைகள் குறித்த 14 கட்டுரைகளின் தொகுப்பு)

•


விலை : ரூ. 80/-















Thursday, April 11, 2019

வான்காரி மாத்தாய்

தமிழில் : பேரா. ச.வின்சென்ட்






















இந்தப் புத்தகம் விளக்குவதுபோல் என்னுடைய வாழ்க்கைப் பணி மரங்களை நடுவதற்கும் மேலாக விரிந்தது. நான் நிறுவிய பசுமைப்பகுதி இயக்கமும் பன்னாட்டுப் பசுமைப் பகுதி இயக்கமும் இந்த வளர்ச்சியைக் காட்டுகின்றன. மரங்களை நட்டு நானும் எனது உடன் உழைப்போரும் கருத்துக்களை நட்டோம். அந்தக் கருத்துக்களும் மரங்களைப் போலவே வளர்ந்தன. கல்வி, தண்ணீர், சமூகநீதியைத் தந்து இந்த இயக்கம் மக்களுக்குச் சக்தியைத் தருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் மற்றும் பெண்கள். இவர்களுடைய செயல்பாடு தனிமனிதனுடைய, குடும்பங்களுடைய வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுகிறது. இந்த மாற்றம் கென்யாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டும் ஏற்படவில்லை. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அழிவு ஆப்பிரிக்காவில் மட்டும் இல்லை. அது உலகம் முழுவதையும் பாதிக்கிறது. எனவேதான் பன்னாட்டுப் பசுமைப் பகுதி இயக்கம் தொடங்கப்பட்டது. அனைவரும் சேர்ந்து உழைத்தால்தான் இந்த விலை மதிப்பற்ற உலகின் சில சிக்கல்களையாவது தீர்க்க முடியும்.

வான்காரி மாத்தாய்

வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940ஆம் ஆண்டு பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். அவருக்கு 2004ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

•

விலை : ரூ. 275/- 









Wednesday, April 10, 2019

ஏழு நிறப்பூ
(ரஷ்ய சிறார் கதைகள்)
தமிழில் : யூமா வாசுகி




















சிறாரின் மீது நேசக்கனிவும் அவர்களின் நல்லிதயம் வாழ்வில் பெருமகிழ்ச்சியாய்த் திகழ வேண்டும் என்கிற ஆழ்ந்த விருப்பமும் கொண்ட ரஷ்ய எழுத்தார்களால் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். இந்தக் கதைகளுடன் கலக்கும் ஒவ்வொரு வாசகரும் இதை மனமார்ந்து உணர்வார்கள். எழுதப்பட்டு எத்தனையோ காலம் கடந்த பின்பும் இன்றும் மங்காத சுடர்களாக ஒளி பரப்பும் கதைகள். வாசிப்பின் வழியில் நாம், கதை பயிலும் மனம் வாய்த்தது எவ்வளவு அதிர்ஷ்டகரமானது என்று நினைத்துப்போவோம். நல்ல கதைகள் நம் உற்ற உறவுகள்தானே. காலத்தின் மீதான நம் பயணப்பாதையை செப்பனிடுபவைதானே.

லியோ டால்ஸ்டாய், ஆன்டன் செக்காவ், வஸீலி சுகம்ன்லீன்ஸ்கி, ஒய். அக்கிம் உள்ளிட்ட பல ரஷ்ய எழுத்தாளர்கள் எழுதிய 13 கதைகளின் தொகுப்பு.

•

விலை : ரூ. 95/-











Thursday, April 4, 2019

ஒரே உலகம்

தொகுப்பு : ராதிகாமேனன் - சந்தியா ராவ்
தமிழில் : அ. குமரேசன்





















ஒரே உலகம் என்ற ஒரே உண்மையை எடுத்துச் சொல்லிடும் ஒரு எளிய, ஆனால்வலிய முயற்சிதான் இந்தப் புத்தகம். இதில் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு வகையில் தமக்கே உரிய நடையில் எல்லோருக்கும் உரிய இந்த உலகம் பற்றிப் பேசுகிறார்கள். கதை. கட்டுரை. கவிதை என்ற வடிவங்களில் அவர்கள் எழுதியிருப்பதைக் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் படிக்க வேண்டும்.

•

விலை : ரூ. 40/-








நதிநீர் இணைப்பு ஒரு சூழலியல் வன்முறை

(பூவுலகின் நண்பர்கள்)






















தண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்னையாக எழும்போது நதிகள் இணைப்பை மாயவார்த்தையாக சில மேலோட்டவாதிகளும், அரசியல்வாதிகளும் பேசுவதை பார்த்திருப்போம். நதிநீர் இணைப்பு ஒன்றே தண்ணீர் பஞ்சத்துக்கான தீர்வு என்று சமூக வலைதளங்களில்கூட எந்தவித அடிப்படை ஆராய்ச்சியும் இல்லாமல் சிலர் தகவல்களை பகிர்வதையும் நாம் கடந்து வந்திருப்போம். உண்மையில் நதிநீர் இணைப்பு இந்திய தேசத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்குமா? உண்மையில் அதற்கான தேவை இருக்கிறதா?

நதிநீர் இணைப்பு என்பது செலவீனமிக்க திட்டமாகவே கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நிலம், காடு, பல்லுயிர்த்தன்மை, ஆறுகள், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, கோடிக்கணக்கான மக்களை அவர்களுடைய வாழிடங்களிலிருந்து வெளியேற வைக்கும் திட்டமாகும்.

நதிநீர் இணைப்பு பருவநிலையில் மாற்றத்தை மட்டும் ஏற்படுத்துவதில்லை. பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை தாங்கும் திறனையும் நம்மிடையே குறைத்துவிடுகிறது.

•

விலை :  ரூ. 40/-













தவளைநெரிக்கப்பட்ட குரல்

கோவை சதாசிவம்


















தமிழ்ச்சூழலில் புழு பூச்சிகள் குறித்து ஒரு மெல்லிய சொல்லாடல்கள் கிளம்பியுள்ள இத்தருணத்தில் இருவாழ்வியாக அறியப்பட்டுள்ள தவளைகள் குறித்தான இந்தப் புத்தகம் ஒரு அறிமுகப் புத்தகமாகவும் முழுமையான அறிவியல் தளத்தில் அல்லாமல் குழந்தைகளுக்கான கதை சொல்லல் என்ற எளிய தளத்திலிருந்தே இந்தச் சிறிய புத்தகம் பேசப்பட்டுள்ளது. இம்முயற்சியானது, தவளைகள் உள்ளிட்ட இருவாழ்விகள், ஊர்வன வகைகளுக்கான ஒரு முழுமையான வழிகாட்டி கையேடுகள் மற்றும் பல தளங்களில் வெளிவரக் கூடிய புத்தகங்களுக்கான ஒரு முன்னெடுப்பாக அமையும் என்பதை நம்புகிறோம்.

•

விலை : ரூ. 30/-












Wednesday, April 3, 2019

தமிழகப் பறவைகள்

(பறவைகளின் வண்ணப்படங்கள் நிறைந்த சிறு கையேடு)























தமிழகத்தில் தென்படும் 138 பொதுப்பறவைகளை அடையாளம் காண இந்தக் குறுங்கையேடு உதவும். இவற்றை எளிதில் இணங்கான 5 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நீர்ப்பறவைகள், இரைகொல்லிப் பறவைகள், தரைவாழ் பறவைகள், வான்வெளிப் பறவைகள், மரம்வாழ் பறவைகள் என வகை பிரிக்கப்பட்டு பறவைகளின் வண்ணப்படங்கள் நிறைந்த கையடக்க அட்டையாக உருவாக்கப்பட்டுள்ளது.

•

விலை : ரூ. 30/-








  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...