Sunday, January 5, 2020

குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள்


அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்




















விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறையில் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு. குறிப்பாக குழந்தை வளர்ப்பை நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் சக்தி பகதூர். குறைவான பக்கங்களே கொண்டிருந்தாலும் வரிக்கு வரி அடத்தியான செய்திகளை உள்ளடக்கிய வகையில் கனமான புத்தகம் இது. பேச்சு மொழியையே எழுத்து மொழியாக மாற்றி இருப்பதால் உயிர்ப்பான உரையாடலாகவும் இருக்கிறது.

விலங்குகள் பறவைகள் குறித்தும் சுற்றுச்சூழல் குறித்தும் தமிழில் பரவலாக புத்தகங்கள் வந்து கொண்டிருக்கும் நற்காலம் இது. பிற உயிர்களின் வாழ்க்கையுடன் மனித வாழ்க்கையை ஒப்பு நோக்குகிற வகையில் இது தனித்துவமான புத்தகமாகும்.

போப்பு


•

விலை : ரூ. 60/-












சுழலும் சக்கரங்கள்


ரியுனொசுகே அகுதாகவா

தமிழில் : கே. கணேஷ் ராம்

























அகுதாகவாவின் சிறந்த படைப்புகள் என்னை காத்துக்கொண்டிருக்கின்றன. எங்கள் இருவரது காலமும் ஆளமைகளும் வேறு. வெவ்வேறு குரலில் குறிக்கோள்களில் நாங்கள் வார்க்கப்பட்டோம். நான் சொல்ல விரும்புவது என்னவெனில் அகுதாகவாவின் படைப்புகளிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொள்கிறேன். நமது வாழ்வின் பயணத்தினூடே அவர் வாழ்வின் தடத்தின் வெளிச்சத்தினைக் காண்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ரியுனொசுகே அகுதாகவா இன்றும் ஜப்பானிய "தேசிய எழுத்தாளராக" வாழ்ந்தும் இயங்கியும் வருகிறார். ஜப்பானிய இலக்கியத்தில் அசைவற்ற ஒரு தனி நட்சத்திரமாகவும் நமது அறிவுத் தளத்தின் ஒரு பகுதியாகவும் திகழ்கிறார்.

•

ஹாருகி முரகாமி

•


விலை : ரூ. 180/-



















குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்


தொகுப்பு : எஸ்.பி. ஸாக்ஸ்
தமிழில் : எம். பாண்டியராஜன்
























சுண்டெலிகள் அந்தக் காலத்தில் தான் பார்த்தவற்றில் இருந்து  நிறைய கதைகளை உருவாக்கின. கதைகள் தான் அதன் குழந்தைகள். ஒவ்வொரு கதையும் - அதாவது, குழந்தையும் ஒரு சட்டை அணிந்துகொண்டிருந்தது - வெள்ளை, நீலம், சிவப்பு, பச்சை மற்றும் கருப்பு. அந்தக் கதைகள் எல்லாம் அந்தச் சுண்டெலியின் வீட்டில் வசித்தன. சுண்டெலிக்கான வேலைகளை எல்லாம் அவை செய்தன.


ஒரு நாள், சுண்டெலி வசித்த அந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, ஒரு செம்மறி ஆடு ஓடியது. அந்தக் கதவு, மிகவும் பழைய கதவு. எனவே, அது உடைந்துவிட்டது. அதனால், கதைகள் எல்லாம் வெளியே ஓடிவந்துவிட்டன. இப்போது இந்தப் பூமி முழுவதும் மேலும் கீழுமாக அவை ஓடிவிளையாடிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை இந்தப் புத்தகத்தில் கேளுங்கள்.

•

விலை : ரூ. 100/-




















என்ன சாப்பிடலாம்?எப்படி சாப்பிடலாம்?


அக்கு ஹீலர்  இயற்கை குமார்






















எதை சாப்பிட்டால் உடல் ஏற்றுக்கொள்கிறது? எதை சாப்பிட்டால் உடல் நிராகரிக்கிறது என்பதில் மனிதனுக்கு உள்ள பல நுற்றாண்டு கால அனுபவத்திற்கு இணையாக உலகில் எதையும் சொல்லிவிட முடியாது. பல்லாண்டு காலமாக உள்ள உணவைப் பற்றிய அறிவியலை சொல்லும் புத்தகம் இது.

எது உணவாக அமையும்? எப்பொழுது சாப்பிடலாம்? கழிவுத் தேக்கமே நோய், கழிவு நீக்கமே சிகிச்சை, உணவை உடலே தேர்ந்தெடுக்கும் என ஒன்பது தலைப்புகளில் எளிமையாக எழுதப்பட்டுள்ள புத்தகம்.

•

விலை : ரூ. 30/-
















பருவநிலை மாற்றம்


என். ராமதுரை
























உலகெங்கிலும் பருவநிலை மாறிவருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தைவிடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரித்திருக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது. அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.

•

அறிவியல் எழுத்தாளர் என்ற முறையில் தேசிய விருது பெற்றவரான என். ராமதுரை, கடந்த முப்பது ஆண்டுகளாகப் பத்திரிகைகளிலும் வார, மாத இதழ்களிலும் எண்ணற்ற அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி ஆகியவற்றில் அளித்த பேட்டிகளை மூலம் நன்கு அறியப்பட்டவர். இவருடைய புத்தகம் விண்வெளி, அணுசக்தி, சூரிய மண்டலம் எனப் பல தலைப்புகளில் வெளியாகியிருக்கின்றன.

•

விலை : ரூ. 130/-

















Saturday, January 4, 2020

உணவுக்கு முதல் வணக்கம்


போப்பு






உடலை வளர்க்க வேண்டிய உணவு இன்று ஒன்றுமற்றதாகிப் போயிருக்கிறது. உடலுக்கு சிறு நன்மையும் தராத அத்தகைய உணவினால் , உடலுக்கு வரக்கூடிய கேடுகளை எப்படித் தடுக்க முடியும்?

நாம் உண்ணும் உணவே நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு உணவைச் சாப்பிடும் பழக்கத்தை சொல்லிவிட்டுப் போயினர் நம் முன்னோர். இன்று யாரும் அதைக் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கு வருடப்பிறப்புகளில் பருகக் கொடுக்கப்படும் நீராகாரம், அந்த கோடை காலத்திற்கு அரு மருந்து. ஆடி மாதத்தில் பருகும் கூழ் அந்த மாதத்தின் வெப்பநிலையால் நமக்கு நோய் வராமல் தற்காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை மருந்து.

வாழ்வியல் முறைகளோடு ஒட்டிய நம் உணவுப் பழக்கங்கள் இன்று தலைகீழாகிவிட்டன. கார்ப்பரேட் உணவகங்களின் வருகை நம் பாரம்பரியத்தையும் புரட்டிவிட்டது. இத்தகை சூழலில் எழுதப்பட்டிருக்கும் புத்தகம்தான் உணவுக்கு முதல் வணக்கம்.

•

விலை : ரூ. 80/-
























இனி விதைகளே பேராயுதம்


கோ. நம்மாழ்வார்
























புத்தகத்திலிருந்து ...........


வாழ்வாதாரத்தை சிதைத்த "பச்சைப் புரட்சி"க்கு அக்காலத்தில் "தீவிர சாகுபடித்திட்டம்" என்பது பெயர். இந்தியாவில் ஏழு மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்தினார்கள். போர்டு நிறுவனத்தின் உதவியோடு ஆறு பாயும் நிலங்களில் இதை செயல்படுத்தினார்கள். ஜப்பானின் குட்டை நெல் ரகங்களை, புதிய உரவகைகளை அறிமுகம் செய்தார்கள். இதில் பெரிய வெற்றி கிடைத்ததாக அறிவித்து திட்டத்தை இந்தியா முழுவதிலும் செயல்படுத்த விரும்பினார்கள். பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்ட 69ல் அறிமுகமான ஐ.ஆர். 8 நெல்லை மக்கள் வெறுத்து ஒதுக்கினார்கள். காரணம் ருசியில்லை, பூச்சித்தாக்குதலும் அதிகம். அப்போது மணிலாவில் உள்ள IRRI நிறுவனத்திலிருந்து வந்த ஐ.ஆர். 20,  ஐ.ஆர். 50 ரகங்களும் இன்று புழக்கத்தில் இல்லை. 74 ரகங்களை உற்பத்தி செய்தாலும் ஒரு ரகம் கூட வெற்றி பெறவில்லை.

இன்றைய காலகட்டத்தில் இயற்கை உழவாண்மை ஒரு கட்டாயத் தேவை.

•

விலை : 80/-




























கிருமிகள் உலகில் மனிதர்கள்


அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்






















நோய்கள் சூழ் உலகு என்றுதான் இப்போதைய காலகட்டத்தைச் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு சுற்றிலும் நோயாளிகள் மயமாகத்தான் இருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர் இன்று நிரந்தர நோயாளிகளின் பட்டியலில் இருப்பது கண்கூடு. பெரு வணிகங்களில் முதன்மை இடத்தைப் பிடித்த தொழில்கள் மருத்துவமும் ஒன்றாகிப்போனதை என்னவென்று சொல்வது?

நோய்களுக்கான காரணம் என்று மருத்துவ உலகம் கடைசியில் கை காட்டுவது கிருமிகளைத்தான். நம்மைத் தேடி வந்து தாக்கும் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறது. மருத்துவத்துறை எங்கோ போய்க்கொண்டிருக்கும் அதே வேளையில், அதனை அப்படியே நிறுத்தி திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்தப் புத்தகம்.

புத்தக ஆசிரியர் கிருமிகள் குறித்த உண்மைத்தன்மையையும், அதை வைத்துக்கொண்டு கோடிகளில் விளையாடும் பன்னாட்டு மருத்துவ உலகத்தின் மறுபக்கத்தையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.


•


விலை : ரூ. 90/-







ஆசாவின் மண்ணெழுத்துகள்


ஏ.கே. ஷிபுராஜ்

தமிழில் : யூமா வாசுகி
























கடந்த அக்டோபரில் என் மகள் ஆர்த்ராவின் பிறந்தநாள் வந்தது. அன்று அவளது பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்கும் வழக்கத்திலிருந்து மாறுபட்டு வேறு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்தப் பரிசு எதுவாக இருந்தாலும் அது அவர்களது உடலுக்கும் மனதுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்படித்தான் ஒரு சிறு புத்தகம் எழுதி அச்சிட்டுக் கொடுப்பதைப் பற்றி யோசித்தேன்.

ஒரு சிறுமி வெளிநாடு சென்ற தன் அப்பாவுக்கு எழுதும் கடிதங்களின் வழியே எளிமையான பல விசயங்களைப் பேச வேண்டும் என்று நினைத்தேன். அவ்வாறு ஆசா எனும் சிறுமி எழுதும் பத்து கடிதஙகளின் தொகுப்பாக இந்தப் புத்தகத்தை தயாரித்தேன்.

•

ஏ. கே. ஷிபுராஜ்

•

நுகர்வைக் குறைத்தல், விவசாயத்திற்கு திரும்புதல், மண், தொழிற்சாலை, பறவைகள், மழை, வெயில் என சிறுமி ஆசா தனக்கு இயற்கையை ஒட்டி உருவாகும் எண்ணங்களை தன் அப்பாவுக்கு கடிதமாக வெளிப்படுத்தும் கதை. மலையாளத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

•



விலை  : ரூ. 100/-













Wednesday, January 1, 2020

தமிழர் தாவரங்களும் பண்பாடும்


பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி























சூழலியல் ஆர்வம் முன்பைவிட தற்போது அதிகரித்திருந்தாலும், மரக்கன்று நடுவது புதியதொரு அடையாளமாக மாறிவரும் சூழ்நிலையிலும்கூட தாவரங்கள் பற்றிய நமது புரிதல் மிகக் குறைவாகவே இருக்கிறது. மரக்கன்று நடுவது நல்லதொரு செயல்தான். ஆனால் நம் மண்ணுக்கு உகந்த இயல் தாவரத்தைத்தான் வளர்க்கிறோமா என்பதில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை. நீண்ட தாவரவியல் மரபைக் கொண்ட நமது வரலாற்றில் இது மிகப் பெரிய முரண்.

இது போன்ற நமது அறியாமையை போக்கிக் கொள்வதற்கான முதற்படியாக நமது தாவரவியல் சார்ந்த பண்பாடு, வரலாறு, அறிவியல், சூழலியல் பற்றிய நல்லதொரு அறிமுகமாக பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தியின் இந்த நீண்ட நேர்காணல் அமையும். நமது கல்விப்புலத்தில் இவரைப் போன்ற ஆர்வம் கொண்ட பேராசிரியர்கள் சிலரே இருப்பது, நமது துரதிருஷ்டம்.

தாவர சூழலியல் சார்ந்த பண்பாடு, வரலாறு மற்றுமின்றி இன்றைய நவீன பிரச்சினைகளையும் இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கிறார்.


•


விலை : 40/-












தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்


வீரைய்யன்
மயில்வாகனன்























இந்திய ஒன்றியத்தின் தண்ணீர்க் கொள்கையில் இருக்கும் தனியார்மயப்படுத்தல் மற்றும் தண்ணீருக்கு விலை நிர்ணயித்தல் குறித்தும் அதனால் குடிமக்கள் பாதிக்கப்படுவது குறித்தான புத்தகம் இது.

உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வர்த்தக கழகத்தின் கட்டளைகளை தனக்கான சாசனமாக வரித்துக்கொண்டு செயல்படுகிறது இந்திய அரசு. மக்களை குடிமக்களாக இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வோராக மட்டுமே பார்க்கிறது இந்த அரசு. அடிப்படை உரிமையான தண்ணீரையும் தனியார்மயமாக்கி கட்டணம் செலுத்தி வாங்கச் செய்யும் தண்ணீர் கொள்கை மக்கள் விரோத கொள்கை என உரத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

•

விலை : 40/-















  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...