Wednesday, May 29, 2019


நீராதிபத்தியம்


சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் 
தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக
எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும்

மாட் விக்டோரியா பார்லோ
தமிழில் : சா. சுரேஷ்







இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன? அவை எவ்வாறு இருந்தன? அவற்றின் தற்போதைய நிலை என்ன? இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும்? இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங்களில் செய்ய வேண்டியது என்ன என்று ஒரு பரந்த வெளியில் இருந்து இந்த புத்தகத்தை நமக்கு வழங்கியுள்ளார் பார்லோ.

இந்தப் புத்தகத்தின் வாயிலாக பார்லோ கோருவது ஒன்றே ஒன்றுதான், இந்த புவியின் தண்ணீரைக் காப்பாற்ற சர்வதேச அளவில் அனைவரையும் பொறுப்பேற்கச் செய்கின்ற ஐ.நா. மட்டத்தில் நிலைவேற்றத்தக்க ஒரு சர்வதேச உடன்படிக்கைதான்.

•

விலை : ரூ. 230/-












உங்களுக்குள் ஒரு மருத்துவர்

அக்கு ஹீலர் அ. உமர் பாருக்




















எனக்குள் ஒரு மருத்துவரா? அப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மருத்துவர் இருந்தால் நாம் ஏன் நோய்வாய்ப்படுகிறோம்? உலகம் முழுதும் இவ்வளவு நோய்கள் ஏன் பெருகியிருக்கின்றன?

இப்படி எல்லாம் உங்களுக்குள் கேள்விகள் கிளம்புவது நியாயமானதுதான்.

நம்முடைய ஆரோக்கியத்திற்காக இன்னொரு நபரை இன்னொரு மருத்துவத்தை நாம் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பதால்தான் நமக்குள் இருக்கும் இயற்கையின் மருத்துவரை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அது பற்றி இந்தப் புத்தகம் 3 பகுதிகளாக விளக்குகிறது.

•


விலை : ரூ. 60/-












ஊர்ப்புறத்துப் பறவைகள்

கோவை சதாசிவம்






















தமிழில் சூழலியலை எளிமையோடும் உயிர்ப்போடும் எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோவை சதாசிவம். கோவையில் பிறந்து திருப்பூரில் வசிக்கிறார். 2009ல் வெளிவந்த உயிர்ப்புதையல் கட்டுரைத் தொகுதி  வாசிப்போரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளை தோற்றுவித்தது. "மயிலு", "சிட்டு" ஆகிய கானுயிர் ஆவணப் படங்களை இயக்கி, பள்ளிகள் தொடங்கி பல்கலைக் கழகம் வரை திரையிட்டு பறவைகள், பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கமென உரையாடுபவர். "பறவைகள் பலவிதம்" கட்டுரையை மாணவர்களுக்கு பாடமாக்கி பறவைகளின் இருத்தலை உணர்த்தியவர். அண்மைக்காலமாய் இவரின் எழுத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் ஓர் உன்னத நிலையை நோக்கிப் பயணிக்கிறது.

•

விலை ரூ. 80/-










ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்

தமிழில் : உஷா தரன்























இரண்டாவது உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படைகள் நிகழ்த்திய அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் நேருக்குநேர் பார்த்த ஒரு யூதச் சிறுமி எழுதி வைத்துவீட்டுப் போன நாட்குறிப்புகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகம் இப்போது முதன்முறையாக தமிழில் வருகிறது.

பதிமூன்று வயதான யூதச்சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனி பிராங்க் டச்சு மொழியில் இந்த டயரியை எழுதியிருக்கிறாள்.

ஜூன் 14 1942ல் டயரி துவங்குகிறது, முதல் 22 நாட்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை விவரிக்கும் இந்த நாட்குறிப்பு அதன் பிறகு 1944 வரையான அவர்களின் ஒளிந்துவாழும் காலத்தைப் பதிவு செய்துள்ளது.

காகிதம் மனிதர்களை விடவும் பொறுமையானது, அந்தப் பொறுமையை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு இடத்தில் ஆனி குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

•

விலை ரூ. 300/-






நிலமெனும் நல்லாள் நகும்

தொகுப்பும் மொழியாக்கமும் : வெ. ஜீவானந்தம்






















கோடீஸ்வரர்கள் எங்கே குவிந்துகிடக்கிறார்கள் என்பதைக் கூந்து கவனியுங்கள். அவர்கள் கணினித் துறையில் இல்லை. நிலம், நிலவணிகம், இயற்கை வளங்கள், லைசன்ஸ் தேவைப்படும் தொழில்கள், குறைந்த போட்டியுள்ள துறைகள், அரசின் நெருக்கம் தேவைப்படும் இடங்கள் இவற்றிலேயே பெரிதும் உள்ளனர்.

இது கவலையளிக்கக்கூடியது. ஆபத்தானது. நம் அரசியல்வாதிகளுக்கும் வியாபாரிகளுக்குமிடையேயான உறவு வளரவளர ஆபத்து அதிகரிக்கும்.

(ரகுராம் ராஜன், RBI ஆளுநர்)

•

விலை : ரூ. 80/-













உயிர் இனிது

கோவை சதாசிவம்


















கற்பதுக்கைகள் என்பது மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையான புதைகுழிகளாகும். தமிழர்களின் பிரமிடுகள் என்றாலும் பிழையில்லை. இதை ஆங்கிலத்தில் (Dol Men) என்கிறார்கள். பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் புதைகுழியில் நிற்கையில் உடல் சிலிர்க்கிறது. கற்பதுக்கைகளை பழங்குடிகள் முனிஅறைகள் என்கிறார்கள். காடுகளும், மலைகளும் நமது மூதாதைகள் வாழும் தலைமுறைக்கு விட்டுச்சென்ற வரலாற்றுச் சின்னங்கள். இவற்றை கிரானைட் கொள்ளையர்கள் அழிக்கும்முன் பாதுகாத்து, பத்திரப்படுத்தி இன்னும் பிறக்காத தலைமுறைக்கு வழங்குவோம்.

•


விலை : ரூ. 140/-












வான்வெளியின் புலிகள்


பேராசிரியர். த. முருகவேள்























நகரத்தில் வாழும் உயிரினங்களின் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. இந்த காட்டுயிர்கள், இயற்கை எவ்வாறு நகரத்தின் தாக்கங்களையும் தாண்டி வாழ்கின்றது என்பதற்கான ஒரு சாட்சியாகவே உள்ளன. "சென்னையின் வேட்டைக்கார ஆந்தைகள்" , "வான் வெளியின் புலிகள்" இரு கட்டுரைகளும் இதற்கு எடுத்துக் காட்டுகள்.  அதே சமயம் ஆந்திர மாநிலத்தின் ரோலபாடுவில் வாழும் கானமயில்கள், மனிதர்களின் பயன்பாட்டிற்காக நிலம் மாற்றப்படுவதினால் காணாமல் போகின்றன என்பதை "இந்திய ஓநாய்களும் காணாமல் போகும் கானமயில்களும்" என்ற கட்டுரை உணர்த்தும். "ரந்தம்போரின் புலிகள்" கட்டுரை புலிகளின் அன்றாட வாழ்க்கையின் ஒரு சிறு பக்கத்தைச் சொல்லிச் செல்கிறது.

•

விலை : ரூ. 100/-













வீடியோ மாரியம்மன்


(சிறுகதைகள்)
இமையம்




















"ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலே இருக்கு. நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும். தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளுர்ப் பற மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலே கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன், வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக்கூடாது. கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்கா. நம்ப ஊட்டுலெ எஞ்சாவுதான் கடேசி சாவு. அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம் கூத்து வைக்காம வுட்டுப்புடாத"


•

விலை : ரூ. 195/-














கொலைச்சேவல் 

(சிறுகதைகள்)
இமையம்





















கொலைச்சேவல் இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும். புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்தக் கதைகளில் நாம் காணலாம்.

•

விலை : ரூ. 180/-














முதல் மனிதன்

(நாவல்)
ஆல்பெர் காம்யூ
தமிழில் : வெ. ஸ்ரீராம்

















நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிருஷ்டத்திற்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்.  (ஆல்பர் காம்யூ)

1957ல் நோபல் பரிசு பெற்ற ஆர்பெர் காம்யு, 1960ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்த போது அவர் கைப் பையில் வைத்திருந்த முடிக்கப்பெறாத நாவல்தான் "முதல் மனிதன்". ஆனால் நிறைவு பெற்றதாகக் கருதப்படக்கூடிய முதல் மனிதன் 1994ல் வெளியான முதல் வாரத்திலேயே 50,000 பிரதிகளுக்குமேல் விற்பனையாயிற்று. இந்த நாவல் முப்பது உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

•

விலை : 270/-











Friday, May 3, 2019

அந்நியன்

(நாவல்)
ஆல்பெர் காம்யூ
தமிழில் : வெ. ஸ்ரீராம்

















இருபதாம் நுற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான அந்நியன் 1942 ல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழி பதிப்பு மட்டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

•


விலை : ரூ. 210/-








மண்ட்டோ படைப்புகள்

கதைகள் - சொற்சித்திரங்கள் - நினைவோடைகள் - ஹிப்டுல்லா

தொகுப்பு - தமிழாக்கம் : இராமானுஜம்




















இறந்தவர்களை கொச்சைப்படுத்தி அவர்களின் அந்தரங்கங்களைத் திருடியவன் என்றும் அரசாங்கத்தால் கம்யூனிஸ்ட் என்றும், இடதுசாரி இயக்கங்களால் பிற்போக்குவாதி என்றும், சில இலக்கியவாதிகளால் அகங்காரம் கொண்டவன் என்றும் ஆபாச இலக்கியம் படைத்தவன் என்றும் பலவிதமான பார்வைகளிலும் அதன் எல்லையில் இருந்து விமர்சிக்கப்பட்டார் மண்ட்டோ.

இந்த எல்லா விமர்சனங்களையும் மீறி மண்ட்டோ இந்தியத் துணைக்கண்டத்தில் மிகச் சிறந்த எழுத்தாளர் என்று அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மண்ட்டோ அவரது படைப்பு குறித்து சொல்வது :
       என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும் இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள். இதுதான் சிறந்த வழி.


•


விலை : ரூ. 495/-




மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள்

(நாவல்)
விக்தோர் ஹ்யூகோ
தமிழில் : குமரன் வளவன்























விக்தோர் ஹ்யூகோ தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடை யசமுதாயப் போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கலாம். இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய போராட்டத்தின் ஒரு அங்கம்தான். வறுமை எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்பு, சமத்துவம், பெண் உரிமை, கலைஞனின் படைப்புரிமை என்று பல முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட விக்தோர் ஹ்யூகோஅவற்றை எழுத்து வடிவமாகவும் பிறகு அரசியல் போரட்டங்களாகவும் முன் நிறுத்தினார்.

•


விலை : ரூ. 110/-











  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...