Wednesday, June 12, 2019

எண்ணெய் மற மண்ணை நினை

பருவப் பிறழ்வு, பெட்ரோல் தாகம், உணவுப்பற்றாக்குறை

வந்தனா சிவா
















இந்தியா, சீனா போன்ற நாட்டு மக்களின் நிலம், நீர், பன்ம உயிரிவளங்களை மக்களின் உழைப்பை உலகச் சந்தை உற்பத்திக்கு அளிப்பார்களானால் அது உண்மையில் தனது சமூகத்தையும், தனது சூழலையும் உலகச்சந்தைக்கு, உலக நுகர்வு வெறிக்குத் தாரை வார்ப்பதாகத்தான் அர்த்தமாகும். அளிக்கும் செல்வாதாரம் விவசாயிகளுக்கு உரிய நிலம், பழங்குடி மக்களுக்கு உரிமையான காடு, மக்களுக்கு உரிமையான ஜனநாயகத்தையும், மக்களின் இறையாண்மையையும் திருடி உலக நுகர்விற்குத் தாரை வார்ப்பதாக அர்த்தம். இப்படிச் செய்வதற்குக் காரணம் வடக்குக் கார்ப்பரேட்டுகளின் அதிகார, மூலதனப் பிடியில் இந்திய அரசாங்கம் சிக்கிக் கொண்டது. வளர்ச்சி என்ற பெயரில் உரிமை கொண்டாடி கார்ப்பரேட்டுகள் மாசுபடுத்தும் உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள்.

•

விலை : ரூ. 180/-






















அவன் காட்டை வென்றான்

கேசவ ரெட்டி
தமிழில் : ஏ.ஜி. எத்திராஜுலு






















இந்த நாவலில் மனித பாத்திரம் ஒன்றே ஒன்றுதான். அந்தப் பாத்திரத்திற்கும் பெயரில்லை. கிழவன் என்ற பெயர் மட்டுமே. அவன் இருப்பிடம் எந்த ஊரோ தெரியாது. கதை முழுவதும் கிழவனைச் சுற்றியே நடக்கிறது. இதில் முக்கிய மனிதப் பாத்திரம் கிழவன் என்றால், மனிதரல்லாத முக்கியப் பாத்திரம் தாய்ப்பன்றி. இப்படைப்பு முழுவதும் கிழவனும் தாய்ப்பன்றியும் சம்பந்தப்பட்டதே. இதிலுள்ள மற்ற பாத்திரங்கள் விலங்குகள், மலைகள், மடுக்கள், நீரோடைகள், பள்ளத்தாக்குகள், கல் மண். காடே இக்கிழவனின் விளையாட்டு மைதானம். மிருகங்களும் செடிகொடிகளுமே கிழவனின் நண்பர்கள். அபாயங்கள் அவனுக்கு வெல்லம்போல. இந்த உலகமே தன் கால்களுக்கடியில் இருப்பது போலவும், தான் நினைத்தால் தன் கல்தூண்களைப் போன்ற கால்களால் இந்த உலகையே தூளாக்கிட முடியும் என்ற உறுதியும் அவனுடையது. தான் உண்டாக்கிய தூளில் தானும் தூளாகிவிட்டாலும் பெரிதாக என்ன குடி முழுகிடும் என்னும் அலட்சியம் அவனுக்கு.....

•

விலை : ரூ. 105/-





















பறவைக்குக் கூடுண்டுஅனைவருக்கும் வீடு


லாரி பேக்கரின் கனவு
எலிசபெத் பேக்கர்
தமிழில் : ஈரோடு வெ. ஜீவானந்தம்



















லாரி பேக்கரின் வீடுகள் தூக்கணாங்குருவிக் கூடுகள். ஒளியும், காற்றும் ஊடுருவும் மிதக்கும் வயல்வெளிகளாய் மாறி மனிதனை இயற்கையினுள் தாலாட்ட வைக்கிறது. தொன்மையும் புதுமையும் இணைந்த இவரது கவித்துவ ஓவியங்கள் முப்பரிமாணம் பெறும்போது அது ஓர் எளிய மக்களுக்கான படைப்பாக மாறுகிறது. எளிய மக்களின் படைப்பை வியந்து எளிய மனிதனாக மாற விரும்புகிறார் லாரி பேக்கர்.

•

விலை : 120/-













எறும்புகள்ஆறுகால் மனிதர்கள்

நக்கீரன்





















எறும்புகள் ஆறுகால் மனிதர்கள். மனித இனத்துக்கு மிக நெருக்கமான இனம் சிம்பன்சி அல்ல, எறும்புகள்தாம். உலகின் முதல் விவசாயி, முதல் நெசவாளி, முதற் பொறியாளர் மனிதர்களல்ல அவையும் எறும்புகள்தாம். நமக்கு உணவு, உடை, இருப்பிட அவசியத்தைக் கற்றுத் தந்ததும் எறும்புகள்தாம். ஒரு மனிதருக்கு ஈடாக ஒன்றரைக் கோடி எறும்புகள் இவ்வுலகில் உள்ளன. தம் உடல் எடையைவிட 50 மடங்கு எடையைச் சுமக்கக் கூடியவை எறும்புகள். மனிதரால் இருமடங்குதாம் சுமக்க முடியும். இத்தகைய பெருமைமிக்க எறும்புகளையே நாம் கொன்றழிக்கிறோம்.

•


விலை : ரூ 30/-














  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...