Monday, March 23, 2020

பசுமைப் புரட்சியின் கதை


சங்கீதா ஸ்ரீராம்























பசுமைப் புரட்சி நடந்திருக்காவிட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோரதாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுக்களின் பெறுமானம் என்ன என்பதை இந்தப் புத்தகம் ஆய்வு செய்கிறது. இந்தியாவின் மரபு சார்ந்த வேளாண்மை, அதன் அலாதியான சிறப்பம்சங்கள், அது திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்ட விதம் ஆகியவை பற்றியும் விரிவாகவும் உரிய ஆதாரங்களுடனும் இந்தப் புத்தகம் பேசுகிறது. வறுமை, பஞ்சம், வரப்பிரசாதம் எனப் பல்வேறு கிளைக்கதைகளைக் கொண்ட பசுமைப் புரட்சியின் நிஜக் கதையை அம்பலப்படுத்துகிறது. இந்திய வேளாண்மையைக் காப்பாற்ற இனி என்ன செய்ய முடியும் என்பது குறித்த நடைமுறை சார்ந்த யோசனைகளையும் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.

(அரவிந்தன்)

•

விலை : 275/-











கினோ


ஹருகி முரகாமி


தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ்
























உலகமயமாக்கலின் காரணமாக நவீன மனம் உணரும் அந்நியத்தன்மை, வாழ்க்கையில் தோற்றுப்போனதான உணர்வு, வெகு சாதாரணமான நிகழ்வு சட்டென்று அசாதாரணமானதாக மாறும் சூழல், நிகழ்காலமும் கடந்தகாலமும் ஒன்றோடொன்று முயங்கி மனிதர்களின் முன் கனவாக விரிந்திடும் மாயத்தோற்றங்கள் போன்ற சங்கதிகளை ஹருகி முரகாமியின் சிறுகதைகளில் பொதுவாகக் காணக்கிடைக்கும் கூறுகள் எனச் சொல்லலாம்.  கண்ணுக்குப் புலப்படாத வாழ்வின் புதிர்வழிப்பாதைகளையும் அவற்றில் சிக்கிக்கொள்ள நேர்ந்திடும் எளிய மனிதர்களின் அனுபவங்களையும் இருண்மையான நகைச்சுவையோடு வாசகனுக்கு எளிதாகக் கடத்திட முரகாமியின் நேரடி கதைசொல்லல் யுக்தி பெரிதும் உதவுகிறது.

•

விலை : 320/-











சீருடைஆசிரியர் குறித்த திரைப்படங்கள்


கலகல வகுப்பறை சிவா


















ஆசிரியர்கள் தங்களுடைய கற்பித்தல் திறனை பல்வேறு கருவிகளின் துணைகொண்டு வளர்த்துக்கொள்ளவும், புதுப்பித்துக்கொள்ளவும் முடியும். இப்புத்தகத்தில் திரைப்படங்கள் எப்படி ஓர் ஆசிரியருக்கு உதவக்கூடும் என்று தன் அனுபவங்கள் வழியே விளக்கியுள்ளார் கலகல வகுப்பறை சிவா.

•

விலை : 50/-











கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)


கலகல வகுப்பறை சிவா






















தீமையை எளிதில் திரைப்படத்தால் விதைக்க முடியும் என்றால் நன்மையையும் விதைக்க முடியுமல்லவா?

பார்க்கக்கூடாது என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பதைவிட திரைப்படம் குறித்த புரிதலை ஏற்படுத்துவதே இன்றைய தேவை என்று தோன்றுகிறது.

ஆசிரியர்களுக்கான ஏராளமான திரைப்படங்கள் உலகெங்கும் எடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உலகெங்கும் ஆசிரியர்கள் குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் அவற்றிலிருந்து அவர்கள் எவ்வாறு புதிய தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள் இப்படங்கள் வாயிலாக அறிய முடியும். அத்தகைய படங்களைப் பார்ப்பது அது குறித்து கலந்துரையாடுவதும் நல்ல பலனைத்தரும்.

•


விலை : 70/-









உயிர்க்கொல்லி நோய்கள் : 

மீண்டும் வருகிறதா ஆபத்து?


அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
























உளவியல் என்பது மனிதர்களுக்குத்தானே இருக்கும். நோய்களுக்கும் இருக்குமா?

அமெரிக்காவில் நாஷ்வில் என்ற ஊரில் இருந்த சாம் லாண்டி என்ற நபருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதாக அவரது மருத்துவரால் கண்டறியப்பட்டது. புற்றுநோய் கடைசிக் கட்டத்தை எட்டி விட்டதாலும் சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்குப் போய்விட்டதாலும் சாம் லாண்டி இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் இறந்துவிடுவார் என்றும் மருத்துவர் கூறினார். அதேபோல் அவர் மரணமடைந்தார்.

புற்றுநோய் முற்றிப்போய் ஒருவர் மரணமடைவதில் என்ன புதுமை இருக்கிறது ? இப்படி நோயாளிகள் இறப்பது வழக்கமான விசயம் தானே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இங்குதான் விசயமே இருக்கிறது. அப்படி மரணமடைந்த சாம் லாண்டியின் உடல் மறுபடியும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவரது உணவுக்குழாயில் புற்றுநோய் இருந்த தடங்களோ, அதற்கான கூறுகளோ சிறிதளவும் இல்லை என்பது பரிசோதனையின் முடிவு. அப்படியானால் லாண்டி எப்படி மரணமடைந்தார்?

அமெரிக்காவின் மரபணு ஆய்வாளர் டாக்டர். புரூஸ் லிப்டன் கூறுவதைக் கேளுங்கள். "புற்றுநோயே இல்லாத ஒரு நோயாளியை அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், சில தினங்களில் இறந்துபோவார் என்று நம்பவைத்தால் அந்த நோயாளி மரணமடைவது சாத்தியமே. ஏனென்றால் பயம் என்னும் உணர்ச்சி  நல்ல ஆரோக்கியமான மனிதரை மரணத்தை நோக்கித் தள்ளும் ஆயுதம்".

வெறுமனே ஒன்றிரண்டு மரணங்களையும் அதன் பரிசோதனை முடிவுகளையும் வைத்து இந்த முடிவு எட்டப்படவில்லை. பல்வேறு வகையான பயன்பாட்டு சோதனைகளின் அடிப்படையில்தான் மரபணு அறிவியல் பயம் பற்றிய தன் கருத்தை முன்வைக்கிறது.

•


உமர் பாரூக்கின் சமீபத்திய இந்த புத்தகம் நோய்களின் உளவியல், தடுப்பூசி : அறிஞர்களும் சமூக விரோதிகளும், அதிகரிக்கும் வீட்டுப் பிரசவங்கள், டெங்கு : சீசன் பீதிகளும் நிலையான ஆரோக்கியமும், நோய்கள் முளைக்கும் சமையலறை முதலான 16 கட்டுரைகளை உள்ளடக்கியது.

•

விலை : 120/-




















ஞெகிழி


பூவுலகின் நண்பர்கள்























நம் பயன்பாட்டிற்குப் பிறகு நாம் தூக்கி எறியும் ஞெகிழிப் பொருள்கள் என்னவாகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

நம் நகரத்தில் சேரும் கழிவுப்பொருள்களில் ஞெகிழிப்பொருள்கள் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகம் என்ற செய்தி, நாம் எந்த அளவிற்கு ஞெகிழிப்பொருள்களை பயன்படுத்துகிறோம் என்பதை உறுதி செய்கிறது.

அன்மையில் சபரிமலையில் சில யானைகள் இறந்ததாக செய்திகள் வந்தன. யானைகளின் வயிற்றை ஆய்வு செய்து பார்த்தபோது ஞெகிழிக் குப்பைகளால்தான் அவை இறந்துள்ளன என்பது தெரியவந்தது. ஞெகிழிப் பொருள்கள் நிலத்தில் மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு செய்கின்றன.

•

விலை : 40/-













இது யாருடைய வகுப்பறை?


இரா. நடராசன்
























மாணவர்களை திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது, எதுவுமே சொல்லக்கூடாது என்றால் எப்படித்தான் படிக்க வைப்பது என்று ஆதங்கப்படும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்படித்தான் என்று வழிகாட்டும் பொக்கிசம்.

(ச. மாடசாமி)

•

உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னவெல்லாம் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று இப்புத்தகத்தின் வழியே நாம் அறியும்போது நமக்கு ஏற்படும் கவலை, நம்மை செயலுக்குத் தூண்டுகிறது. கல்வி குறித்த பிரமாண்டமான விவாதத்தைக் கிளப்பும் வல்லமை கொண்ட ஒரு புயல் இப்புத்தகத்தில் மையம் கொண்டுள்ளது.

(ச. தமிழ்ச்செல்வன்)

•


விலை : 195/-
பக்கங்கள் : 248













ஒற்றை வைக்கோல் புரட்சி


மசானபு புகோகா


தமிழில் : பூவுலகின் நண்பர்கள்
























ஒரு கிராமத்துச் சிறுமி கேட்ட விடுகதை, இயற்கையை நோக்கி என்னை இழுத்து வந்தது. ஆனால், வாழ்கிற மண்ணில் நஞ்சைத் தெளிப்பது தாயே தனது பிள்ளைக்கு நஞ்சு அளிப்பதைப்போல என நினைத்து, ஒரு விவசாயி அடைந்த பதட்டத்தைப் போக்கும் வழிமுறை என்னிடம் இல்லாமல் இருந்தது. காந்தி ஆசிரமத்திலிருந்து வந்திருந்த நண்பர் என் கைகளுக்குள் அழுத்தித்தந்த ஒரு புத்தகம் "ஒற்றை வைக்கோல் புரட்சி". அதன் வழியே எனக்குக் கிடைத்த ஆசான்தான் "மசானபு புகோகா".

விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் துவங்கி இம்லையுச்சி மரத்தடியில் என்னோடு அமர்ந்திருக்கும் உங்கள் வரைக்கும் நான் பகிர்ந்துகொள்கிற அனைத்தும் அந்த மனிதனின் அனுபவ உண்மைகளே.

குற்றங்களிலிருந்து தன்னை சரிசெய்துகொள்ள காந்தியின் சத்திய சோதனை புத்தகம் எவ்வளவு இன்றியமையாததோ, அதுபோல இயற்கையிடம் சரணடைதலுக்கான பெரும்பாதை புகோகாவின் புத்தகங்கள்.

எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் திரும்பத்திரும்ப வாசியுங்கள்.

•

விலை :  180/-

















கிரெட்டா துன்பர்க்(பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி)


ஆதி வள்ளியப்பன்



















சிறு அக்கினிக் குஞ்சாக கிரெட்டா முன்னெடுத்த போராட்டம், உலகெங்கும் உள்ள சிறார் மத்தியில் பரவி பெரும் சுடராக இன்றைக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டமற்ற, அதே நேரம் உறுதியான கிரெட்டாவின் குரலுடன், லட்சக்கணக்கான குரல்கள் இன்றைக்கு இணைந்துள்ளன. ஒரு சிறுமியின் எதிர்ப்புக்குரல் இன்றைக்குப் பேரோசையாக மாறியிருக்கிறது. காலநிலை மாற்ற நெருக்கடி என்ற பிரச்சினையை உலகம் இன்றைக்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் பேரச்சம் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நான் நாள்தோறும் உணரும் அச்சத்தை, நீங்களும் உணர வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நம் வீடு தீப்பற்றி எரியும்போது என்ன செய்வோம்? அதையே இப்போதும் செய்ய வேண்டும். ஏனென்றால், நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

•

விலை : 35/-











  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...