Thursday, November 5, 2020

 

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு

எலினார் கோர்

தமிழில் : ஆதி வள்ளியப்பன்




இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் அவருக்குப் பிடித்தமானவையாக இருந்தன. பின்னர், அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்த அவர் சிறார் புத்தகங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார்.

 

இதழியல் பணியின் ஒரு பகுதியாக “ஒட்டாவா ஜர்னல்” இதழ் சார்பில் போரால் ஜப்பான் அடைந்த நிலை குறித்து எழுதியிருக்கிறார். அவருடைய புகழ் பெற்ற புத்தகம் சடாகோவும் ஆயிரம் காகிதக் கொக்குகளும் (Sadako and the Thousand Paper Cranes) 1977ல் வெளியானது. 15 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் இது.

 

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டால் சடாகோ சசாகி என்ற சிறுமி இரத்தப் புற்றுநோய்க்கு ஆளானாள். ஜப்பானியர்களின் நம்பிக்கையின்படி நீண்ட நாள் வாழ்வதற்காக ஆயிரம் காகிதக் கொக்குகளைச் செய்ய சடாகோ சசாகி முயல்கிறாள். அவளால் ஆயிரம் காகிதக் கொக்குகளை செய்ய முடிந்ததா? சடாகோ என்ன ஆனாள் என்பதே இந்த நிஜக்கதை.

 

•

 

விலை : 50/-




Saturday, August 22, 2020

 ஆலிஸின் அற்புத உலகம்

(உலகின் தலைசிறந்த 10 புத்தகங்களில் ஒன்று)

லுயி கரோல்

தமிழில் : சென்னி வளவன்
























ஆலிஸின் அற்புத உலகம் 1865இல் லுயில் கரோலினால் எழுதப்பட்ட ஒரு புதினம். முயல் குழிக்குள் விழுந்து அங்கொரு அற்புத உலகத்தைக் காணும் ஆலிஸ் என்ற சிறுமியின் கதையை இப்புதினம் சொல்கிறது. அற்புத உலகில் ஆலிஸின் சாகசங்கள் என்ற முழுப்பெயர் கொண்ட இது வெளியாகி சுமார் 150 ஆண்டுகள் ஆன பின்னரும் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவராலும் கவரப்பட்டு மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இலக்கியப் பிதற்றல் பாணியின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. விந்தையான மாந்தவுருவக விலங்குகள் நிறைந்த ஆலிஸின் அற்புத உலகம் புதினத்தின் கதை வடிவம், கதை கூறும் தன்மை ஆகியவை கனவுருப்புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தான் பணிபுரிந்த கல்லுரி முதல்வரின் இளைய மகளுக்கு 1862 ஜூலை 4ல் இவர் சொல்லத்துவங்கிய கதையே ஆலிஸின் விந்தை உலகமாக விரிவு கொண்டது. இதில் ஊடும் மெல்லிய நகைச்சுவையும் வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாட்டை அறியத்துடிக்கும் கேள்விகளை பூடகமாக வெளிப்படுத்துவதாலும் இது ஒரு செவ்விலக்கியமாகக் கருதப்பட்டு, அனைத்து வயதினராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது.


•


விலை : 200/-


இரவு

(ஓவியம் வழி கதை சொல்லல்)

ஜூனுகா தேஸ்பாண்டே

தமிழில் : சாலை செல்வம்















நடு இரவில் இரு குழந்தைகள் காட்டில் அலைந்து திரிய நேரிட்டால் எப்படி இருக்கும்? ஓங்கி வளர்ந்த பெரும் மரங்களின் உலகம் அது. திடீர் ஓசைகளும் உருவமறியா நிழல்களும்...


•


கவனத்தை ஈர்க்கும் கருப்பு வெள்ளைப் படங்கள், எழுத்தாளரின் ஆர்வத்தையும் உலகின் இயற்கையின் மீதான  அதிசயத்தையும் பெரிதும் வார்த்தைகள் அற்ற ஒரு கவின்மிகு நாடகமாக நம்முன் நிகழ்த்துகிறது. குறைந்த அளவு வார்த்தைகள், வாசகரை குழந்தைகளின் காட்டுவழி பயணத்தின்மீது ஆழ்ந்த கவனம் செலுத்த உதவுகிறது.


•


ஜூனுகா தேஸ்பாண்டே : காடுகளை நேசிப்பவர். பேசுதல், வரைதல், பயணித்தல், காட்சிப்படங்கள் உருவாக்குதல் எனப் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுபவர். அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பயின்றவர். பூனாவில் வசிக்கும் இவர் அங்கிருந்தே தனது வேலைகளிலும் ஈடுபடுகிறார்.


•


துளிகா பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள இப்புத்தகம் தமிழில் துளிகாவும் குட்டி ஆகாயமும் இணைந்து வெளியிட்டுள்ளது.


•


விலை : 60/-



கதை சொல்லப் போறோம்

உருவாக்கம் : குட்டி ஆகாயம்

(கதை எழுதி விளையாடுவதற்கான புத்தகம்)






உலகின் சிறந்த ஓவியங்களும் அதன் அருகில் குழந்தைகள் படம் பார்த்து கதை எழுத இடமும் கொடுக்கப்பட்டிருக்கும். குழந்தைகள் ஓவியங்களை பார்த்து தங்கள் மனதில் தோன்றுவதை கதையாக எழுதிக்கொண்டே இருக்கலாம். மீண்டும் மீண்டும் அழித்து புதிய கதைகளையும் எழுதும் படி தரமான தாளில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகளின் பேச்சாற்றல் வளரவும் மொழியை நன்கு புரிந்துகொள்ளவும் கற்பனை திறனிற்கும் இந்த விளையாட்டு புத்தகம் உதவி செய்யும். 

குழந்தைகள் எழுதும் சொல்லும் இந்த கதைகளை குட்டி ஆகாயம் சிறார் இதழுக்கு அனுப்பலாம். 



•


விலை : 40/-













 உயிர் தரும் மரம்

சிறார் சித்திரக்கதை  (23)

(தமிழ் ஆங்கிலம் என கதை இரு மொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும்)
























நன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமா?இல்லவே இல்லை.இயற்கையை கொடூரமாக அழித்து கொண்டிருக்கிறோம்.

இந்த கதையில் வரும் ஒரு பெரிய ஆப்பில் மரம் இளம்வயதுச் சிறுவனுக்காக பழங்கள்,கிளைகள்,தாய்மரத் தண்டு என தன்னையே தருகிறது.பலவருடங்கள் களைத்து அவன் கிழவனாகிறான்.மரத்தைப் பார்க்க வருகிறான்.அப்போதும்கூட நண்பனுக்குப் பரிசளிக்க தன்னிடம் எதுவுமில்லையென கண்ணீர் வடித்து அழுகிறது மரம்.மரங்களை காக்க நம் மனதை பக்குவபடுத்தும் கதை.


•


விலை 30/-

25 புத்தகத் தொகுப்பு : 750/-




 

குவா..குவா..குவா..குஞ்சுவாத்து பிங்

சிறார் சித்திரக்கதை (22)
(தமிழ் ஆங்கிலம் என கதை இரு மொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும்)






சீன நாட்டின் யங்கட்ஸ் நதியில் உள்ள படகுகளில் ஒன்றுதான் நம்முடைய குஞ்சுவாத்து பிங் குடியிருக்கும் வீடு.அம்மா,அப்பா,அண்ணன்கள்,அக்காக்கள்,அத்தைகள்,மாமாக்கள்,அவர்களது பிள்ளைகள் என்ன பல வாதுகள் குஞ்சுவாத்துக்குத் துன்னை.படு வீட்டில் ஒரே குதூகலமும் கொண்டடமும்தான் எஜமானின் தண்டனைக்கு பயந்து தனிமையாகிறது குஞ்சுவாது பிங் வாழ்க்கையை சாமர்த்தியமாக எதிர்கொள்ளும் கதைதான் இது.குஞ்சுவாத்து பின்குடன் பழக சீன நாட்டு யங்கட்ஸ் நதிக்கரைக்குப் போலாமா?பிள்ளைகளே!


•


விலை 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/-



காக்கைச் சிறுவன்

சிறார் சித்திரக்கதைகள் (21)

(தமிழ் ஆங்கிலம் என கதை இரு மொழிகளிலும் கொடுக்கப்பட்டிருக்கும்)























டரோ யஷிமா என்று புனைப் பெயர் கொண்ட இவாமஸ்டு அசுசி 1908 ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். கலைக் கல்லூரியில் பயின்றவர். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். இவர் எழுதிய சிறுவர் சித்திரக் கதைப் புத்தகங்கள் ‘காக்கைச் சிறுவன்’, ‘குடை’, ‘கடற்கரை கதை’ போன்றவை அமெரிக்காவின் பிரபலமான ‘கல்டிகோர்ட் விருது’ பெற்றவை. சிபி என்ற மலை கிராமத்துச் சிறுவன் நகரத்துப் பள்ளியில் சேர்ந்தான். வகுப்பறை மாணவர்களும் ஆசிரியரும் வியக்கும் வகையில் பறவை மொழி பற்றி தெரிந்திருந்தான். இயற்கையை நேசித்தான். புழு பூச்சிகளிடம் பேசினான். காடு, மரங்கள், பூக்கள் என ஓவியங்களை வரைந்து திறமையை வெளிக்காட்டினான். அனைவரது பாராட்டுதல்களைப் பெற்றான். வாருங்கள் குழந்தைகளே, சிபியைச் சந்திப்போம்.



•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு : 750/-



குட்டன் ஆடு

சிறார் சித்திரக்கதை (20)

(தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளில் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)




குட்டன்,அந்த ஆடுமந்தையில் வித்தியாசமான ஆடு.சிந்திக்கத் தெரிந்த ஆடு.தலைமை ஆட்டின் மீதே அபிபராய பேதம் கொள்ளுமளவுக்கு துணிச்சல் கொண்ட ஆடு.அந்த ஆட்டின் பயணத்தையும் அது தெரிந்துகொள்ளும் சம்பவங்களையும் இந்த கதையில் படித்து பாருங்கள்.


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு 750/-















 எலி எப்படி புலியாச்சு?

சிறார் சித்திரக்கதை (19)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)
























திருமதி.மெர்சியா ஜோன் ப்ரெளன் எழுதிய’எலி எப்படிப் புலியாச்சு?’அமெரிக்காவின் பிரபலமான’கேல்ட்கொட் பதக்கம்’பெற்ற புத்தகம்.    துறவி தனக்குச் செய்த எல்லா நல்ல செயல்களையும் மறந்த அந்தப் புலி”நான் ஒரு காலத்தில் எலியாக இருந்தேன் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது.அப்படிச் சொல்பவர்களை நான் கடித்துக் கொன்று விடுவேன்.”என்றது.அப்போது அந்தத் துறவி ஒரு மந்திரம் செய்தார்.அவருடைய மந்திரம் பலித்ததா.... திமிர்பிடித்து அலைந்த புலியின் தலைக்கனம் அடங்கியதா?வாசித்துப் பாருங்கள்.


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

 பெர்டினன்

சிறார் சித்திரக்கதை  (18)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)





  



















அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன்.நெட்டி மர நிழலில் அமர்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகின்ற வித்தியாச பிறவி.அனால் சந்தற்பம்மும் சூழ்நிலையும் பெர்டிணனை ஸ்பெயின் தலைநகர மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையுல் கொண்டுபோய் நிறுதிகிறது.என்ன செய்திருக்கும் பெர்டினன்?கதையைப் படியுங்கள்

 

•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

 மந்திர விதைகள்

சிறார் சித்திரக்கதை (17)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)





  




















ஜாக் என்கிற சிறுவன் ஒரு மந்தரவதித் தாத்தவிடமிருந்து இரண்டு தங்கவிதைகளைப் பரிசாகப் பெற்றான்.அவர் சொல்லித்தந்த மந்திரத்தை பின்பற்றி நடந்துகொண்டான்.ஒருநாள் அவன் வழக்கத்திலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கிறான்.அது அவனது வாழ்வையே மாற்றி அமைகிறது.மந்திரம் பலிகிறது.ஒரு சிறுமுடிவு வியக்கத்தக்க பயணத் தருகிறது.எளிய கணிதத்தையும் உள்ளடக்கிய இந்த சித்திரக்கதை குழந்தைகள் மனதில் நம்பிக்கையை விதைக்கிறது.

 

•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

 தப்பியோடிய குட்டி முயல்

சிறார் சித்திரக்கதை (16)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)

























ஒப்பற்ற தாய்ப் பாசத்தை உலகுக்கு சொல்லும் கதை.வீட்டை விட்டுத் தப்பியோட நினைக்கும் குட்டி முயலுக்கும் அதைத் தடுக்க நினைக்கின்ற தாய் முயலுக்கு இடையுலான போராட்டத்தை கற்பனைச் செரியுடன் சித்தரிக்கிறது இக்கதை

 

•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 



 ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் 

சிறார் சித்திரக்கதை  (15)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)






  

 
















கதாசிரியர் திருமதி.வண்ட கக்,ஓவியக்கல்லூரியில் சேர்ந்து முறையாக ஓவியப் பயிற்சி பெற்றவர்.குழந்தைகளுக்கான கதைகள் பல எழுதியவர்.ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் ‘நியூபெரி கெளரவ விருதும்’ ‘லூயிஸ் கரோல் விருதும்’ பெற்ற புத்தகம்.


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

 அரோல்டும் ஊதாக்கலர் கிரேயானும்

சிறார் சித்திரக்கதை (14)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)
























இக்கதையை எழுதியவர் திரு.க்ரோகட் ஜான்சன். ‘வெஸ்டன் வுட் ஸ்டுடியோ’நிறுவனம் இக்கதையை குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டது.அரோல்டின் சாகச வரிசைத் திரைப்படங்கள்’எம்மி விருது’பெற்றுள்ளன. ‘தேசிய கல்விக் கூட்டமைப்பு’வெளியிட்ட உலகின்100புகழ்பெற்ற சிறுவர் கதைகளில் ஒன்றாக இப்புத்தகம் தேர்வாகியுள்ளது.

அரோல்ட் என்கிற சிறுவனது கையிலொரு ஊதாக்கலர் கிரேயான் கிடைத்தது.அதைக்கொண்டு மனம்போன போக்கில் ஆசையாசையாய் வரைந்து பார்த்தான்.அவன் வரைந்த சாலை,நிலா,காடு,கடல்,படகு என அனைத்தும் தனக்கு எதிரில் உயிர்பெறுவதைக்கண்டு வியந்தான்.தனது கைகளால் வரைந்த மலையில் ஏறியவன் தடுமாறிக் கீழேவிழ,ஒரு ராட்சச பலூனை வரைந்தான்.அப் பலூன் கயிற்றைப் பிடித்தேறித் தப்பித்தான்.குழந்தைகளுக்குப் பிடித்த சுவையான திருப்பங்களை உள்ளடக்கிய கதை.இக்கதையை எழுதியவர் திரு.க்ரோகட் ஜான்சன். ‘வெஸ்டன் வுட் ஸ்டுடியோ’நிறுவனம் இக்கதையை குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டது.அரோல்டின் சாகச வரிசைத் திரைப்படங்கள்’எம்மி விருது’பெற்றுள்ளன. ‘தேசிய கல்விக் கூட்டமைப்பு’வெளியிட்ட உலகின்100புகழ்பெற்ற சிறுவர் கதைகளில் ஒன்றாக இப்புத்தகம் தேர்வாகியுள்ளது.


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 



 நீங்க என்னோட அம்மாவா? 

சிறார் சித்திரக் கதை (13)

(தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)
























பி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். ‘நீங்க என்னோட அம்மாவா?’ என்ற இந்த ஆரம்பநிலைக் குழந்தைகளுக்கான புத்தகம், சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தேசிய கல்விக் கழகத்தால் 2007, 2012 ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டது. 


ஒரு குஞ்சுப்பறவை கூட்டிலிருந்து கீழே விழுந்தது. அம்மாவைப் பிரிந்தது. அம்மாவை தேடியபோது அம்மா கிடைக்கவில்லை. அம்மா யாரென்று தெரியாத குஞ்சுப்பறவை அவரைக் கண்டுபிடிக்க எண்ணியது. பயணத்தைத் தொடர்ந்தது. பூனை, கோழி, நாய், பசு, கார், விமானம் போன்றவற்றில் அம்மா யாரென்பதுதான் அதற்கு ஏற்பட்ட குழப்பம். குஞ்சுப்பறவையின் குழப்பம் தீர்ந்ததா குழந்தைகளே? கதைக்குள் பயணிப்பீர்!


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

 அழகிய பூனை 

சிறார் சித்திரக்கதை (12)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)
























பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாத தத்தா-பாட்டி.அலுப்பான வாழ்வின் ஒருநாளில்,தன் கணவரிடம் அந்தப் பாட்டி,’நம்மிடம் ஒரு பூனையாவது இருந்திருக்கலாம்’என்கிறார்.இந்த வார்த்தையை சிரமேற்கொண்டு பூனையை பிடிக்கப் போன தாத்தா,கடைசியில் பூனை பிடித்தாரா இல்லையா,பிடித்தார் எனில் எத்தனை பூனை…இன்னும் இன்னும் விரியும் வினாக்களுக்கு இந்த அழகிய பூனையைப் படியுங்கள்.



•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 



 குட்டியூண்டு முயல் 

சிறார் சித்திரக்கதை (11)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)

























ராபர்ட் க்ராஸ் 1925 ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் பிறந்தவர். குழந்தை இலக்கிய எழுத்தாளர், ஓவியர், பதிப்பாளர் என பல முகங்களைக்கொண்டவர். 12 வயது முதல் ‘தி நியூயார்க்கர்’ என்ற பத்திரிக்கையில் கார்ட்டூன் வரைந்து தரும் வாய்ப்பைப் பெற்றார், 200 க்கும் அதிகமான குழந்தை புத்தகங்களை எழுதி படங்களும் வரைந்தவர். ‘விண்ட் மில் புக்ஸ்’ எனும் பதிப்பகத்தை ஆரம்பித்து நல்ல பல சிறுவர் புத்தகங்களை பதிப்பித்தவர்.


கேரட் அளவு உயரமில்லாத ஒரு முயலைப் பார்த்திருக்கிறீர்களா? பூவை விடவும் சிறிதான அந்த முயல் எதிர்கொண்ட பிரச்சனைகள் ஏராளம். வீட்டுக்கு எதிரில் வசித்த மற்ற முயல்கள் ஏளனம் செய்து பேசின. சண்டையிட்டன. கடைசியில் ஒரு நாள், அந்தக் குட்டியூண்டு முயலுக்குத் தைரியம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.  அப்பா முயலை வியப்பில் ஆழ்த்திய குட்டி முயலின் கதையை வாசியுங்கள் அன்புக் குழந்தைகளே!


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

 சக்கர நாற்காலிக் கால்கள் 

சிறார் சித்திரக்கதை (10)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)

























பிரன்ஸ் ஜோசப் குயை, 1966ம் ஆண்டு ஆஸ்ட்ரியா நாட்டில் பிறந்தார். எழுத்தாளர், முழுநேர அரசியல்வாதி. அரசின் உயர் பதவிகளை வகித்தவர். பிறவி ஊனம் காரணமாக வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியின் துணையோடு வாழ்ந்து வருபவர். சிறுவர் கதைப் புத்தகங்கள் பல எழுதியுள்ளார். கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்காகவும் மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்காகவும் பல்வேறு உதவித் திட்டங்களை நிறைவேற்றி வருபவர். மனதுக்குப் பிடித்தவற்றை யாருடைய தயவு இல்லாமல் செய்யத் துடிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமி மார்கிட். உடல் ஊனத்தை பலவீனமாகக் கருதும் குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கையே வெற்றிக்கான வழி என்ற பாடம் கற்பித்தவளின் கதை.


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

சாலுவின் ப்ளுபெர்ரி 

சிறார் சித்திரக்கதை (9)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)
























ராபர்ட் மெக்லோஸ்கே, 1914ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் பிறந்தார். சிறுவர் இலக்கிய எழுத்தாளர், ஓவியர். இவர் எழுதிய ஒன்பது புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் புகழ்பெற்ற ‘கால்டிகோட்’ விருதைத் தட்டிச் சென்றன. ‘வாத்துக்களுக்கு வழி தாருங்கள்’, ‘சாலுவின் ப்ளூ பெர்ரி’, ‘அற்புத நேரம்’. ‘மெய்ன் தீவில் ஒரு அதிகாலை’ போன்ற புத்தகங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ராபர்ட் மெக்லோஸ்கே, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். சாலுவின் ப்ளூ பெர்ரி, சிறந்த 100 சிறுவர் புத்தகங்களில் ஒன்றாக பள்ளி நூலகக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டது. சிறுமி சால், அம்மாவோடு இணைந்து ப்ளூ பெர்ரி வளரும் மலைகளுக்குச் செல்கிறாள். ஆசையாசையாக பழங்களைப் பறித்து சாப்பிடும் ஆர்வத்தில் அம்மாவை மறந்து போகிறாள். அதே நேரத்தில் மலையின் மறுபக்கத்திலிருந்து ஒரு கரடியும், குட்டியும் வந்து சேருகின்றன. குட்டிக்கரடியும் அம்மாவிடமிருந்து தொலைந்து போகிறது. தொலைந்த இருவரும் திரும்பக் கிடைத்தார்களா? காப்பாற்றியவர் யார்? என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலோடு இருக்கிறீர்களா? நீங்களும் இந்தக் கதையின் வழியே மலைப் பாதையில் நுழைந்து செல்லுங்கள்.


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

அன்புக்குரிய யானைகள்

சிறார் சித்திரக்கதை (8)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)























யுகியோ துசியா, 1904ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர். 150 க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியவர். 1951 ம் ஆண்டு இவர் எழுதிய ‘அன்புக்குரிய யானைகள்’, போருக்கு எதிரான உண்மைகளையும், விலங்கு வதைக்கு எதிரான செய்திகளையும் குழந்தைகளுக்குச் சொல்லும் மிகச் சிறந்த படைப்பு ஆகும். கதை குறிப்பு ஜப்பான் உயிரியல் பூங்கா ஒன்றின் மூன்று யானைகளின் உண்மை வரலாறு. டோக்கியோ நகரில் அணுகுண்டு வீசப்பட்டபோது, உயிரியல் பூங்காவுக்குச் சொந்தமான ஜான், டோக்கி, வான்லி ஆகிய யானைகள் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டன. கடைசி மூச்சை நிறுத்தப்போகிற நேரத்திலும் தாங்கள் கற்றுக்கொண்ட ‘பன்ஷாய்’ வித்தையை செய்து காண்பித்தபடி உயிர்விட்டன என்ற கதையைக் கேட்பவர்கள் கண்களில் கண்ணீர் கசியாமல் இருக்க முடியாது. தெரிந்தோ தெரியாமலோ பல நூற்றாண்டுகளாய் நம்மை சுற்றி இருக்கும் விலங்கினங்களை தினந்தோறும் தண்டித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கதையை வாசிக்கும் சிறுவர்கள் விலங்குகள் வதைக்கு எதிராக குரல் எழுப்புவார்கள் என்ற நம்பிக்கை எமக்கும் எழுகிறது.


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

 ஆர்தரின் சூரியன்

சிறார் சித்திரக்கதை (7)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)

























ஆர்தருக்கு பாட்டி என்றால் உயிர். அவன், பாட்டியின் தீராத கால்வலியைப் போக்க எண்ணினான். சூரிய ஒளி பட்டால் மூட்டுவலி காணமல்போகும் என்று பாட்டி சொன்னதைக் கேட்ட ஆர்தர் வெளியே எட்டிப் பார்க்கிறான். மழை நாட்களில், சூரியன் பகல் நேரம் முழுவதும் முகம் காட்டுவதில்லை. சூரியனை முகம் காட்டவிடாமல் மறைத்துவைத்திருக்கும் கருமேகங்களை என்ன செய்யலாம்? அதை விடுவிக்கச் சொல்லி அன்பான வார்த்தைகள் பேசியும் நகர்ந்து செல்லாத மேகங்களை, பொம்மைத் துப்பாக்கியால் சுடுவதைத் தவிர வேறென்ன செய்வது? ஆனாலும் சூரியனுக்கு மேகங்களிடமிருந்து விடுதலை கிடைக்கவில்லை. பிறகு என்ன செய்வது? பாட்டியின் கால்வலியைக் குணமாக்க வேறு என்ன வழி? ஒரு காகிதத்தைத் தேடி எடுத்து, சூரியனை வரைந்து வண்ணம் தீட்டுகிறான் ஆர்தர். பாட்டியின் காலுக்கு அருகில் அந்த ஓவித்தை வைத்துவிட்டுக் காத்திருக்கிறான். பாசம் நிறைந்த ஓர் அப்பாவிச் சிறுவன் பாட்டியின் கால் வலியைச் சரிசெய்த உற்சாகத்தில் மகிழ்ச்சி அடைகிறான். வாசிக்கும் நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறான்.


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

 வில்லி எலி 

சிறார் சித்திரக்கதை (6)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)





  



















1920 ம் ஆண்டு ‘அல்டா தபோர்’ எழுதிய ‘வில்லி எலி’ சித்திரக் கதை வெறும் கற்பனைக் கதை இல்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நிலாவை சென்றடைந்த விஞ்ஞான ஆய்வுகளுக்கு வித்திட்ட கதை. நிலா, பாலாடையால் செய்யப்பட்டது என அம்மா, அப்பா இருவரும் பேசியதைக் கேட்ட வில்லி எலிக்கு ஒரே ஆச்சரியம். அது, உண்மை என்னவென்று அறிய நினைத்தது. ஒரு அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு நிலாவைச் சுற்றிவரப் புறப்பட்டது. வழியில், காட்டு எலி, குகைப் பறவை, மலை அணில், பெருச்சாளி, ஆகியோரைச் சந்தித்து யோசனை கேட்டது. யாருடைய பதிலும் உண்மையென்று நம்புவதாக இல்லை. கடைசியில், ஒரு ஆந்தையிடம் மாட்டிக்கொள்கிறது வில்லி எலி. ஆந்தை, எலியை விழுங்கிவிடத் திட்டமிடுகிறது. எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குட்டிச் சாத்தான் எலியைக் காப்பாற்றுகிறது. பிறகென்ன? வில்லி எலி வானத்தில் ஏறி நிலாவைத் தொட்டுப் பார்த்ததா? புத்தகத்தைத் திறந்து எட்டிப் பாருங்கள் குழந்தைகளே! பதில் கிடைக்கலாம்.


•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

 வீ கில்லிஸ்

சிறார் சித்திரக்கதை  (5)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)





  




















வீ கில்லிஸ் ஸ்காட்லாண்டில் வசிக்கும் ஓர் அநாதைச் சிறுவன்.அவன் வருடத்தின் முதல் ஆறுமாதங்களில் தாய்வழிச் சொந்தக்காரர்களுடன் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிப்பான்.அடுத்த ஆறுமாதங்களில் தந்தைவழிச் சொந்தக்காரர்களுடன் மலைப்பிரதேசத்தில் வசிப்பான்.இருதரப்பு சொந்தங்களும் அவனைத் தம்மிடத்தில் வைத்துக்கொள்ள முடிவுசெய்கிறார்கள்.ஆனால் அவர்களின் நிர்ப்பந்தத்தை ஏற்க மறுக்கும் கில்லிஸ் தனக்கான ஒரு இடத்தைத் தேர்வு செய்கிறான்.இசைக் கலைஞனாக உருவாகும் வீ கில்லிஸ் உங்களுக்கும் இசை பயிற்றுவிப்பானா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்.

 

•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

 சிங்கத்தின் குகையில் சின்னக்குருவி

சிறார் சித்திரக்கதை  (4)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)
























எழுத்தாளர் திருமதி.எலிசா க்லெவென், 30குழந்தைப் புத்தகங்களை எழுதியுள்ளார்.ஓவியர் மற்றும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியுள்ளார்.அமெரிக்க நூலகக் கழகம்,நியூயார்க் டைம்ஸ்,பால்லி நூலக ஆணையம்,அமெரிக்க ஓவியக் கழகம் ஆகிய அமைப்புகளால் கெளரவிக்கப் பட்டவர்.இக்கதையை பல பள்ளிக்குழந்தைகள் நாடகமாக அரங்கேற்றியுள்ளார்கள்.                                          


காட்டுராஜா சிங்கத்தின் வால் நாள்தோறும் நிறம் மாறிக்கொண்டிருந்தது.ஓர் அழகான சிகப்புக் குருவி அதைத் தொடர்ந்து கவனித்து வந்தது.முதலில் பச்சை நிறத்திலிருந்த சிங்கத்தின் வால்நுனிக் குஞ்சம் ஆரஞ்சு நிறம்,நீலநிறம்,சிகப்புநிறம் என ஒவ்வொருநாளும் மாறியிருந்தது.கடைசியில் ஒருநாள் வால் நிறம் மாறிவரும் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்தது சிங்கம்.அதைப்பார்த்த சின்னக்குருவி எல்லையில்லா மகிழ்ச்சியில் பாட்டுப்பாடிக் கொண்டாடியது.ஆமாம்!நாமும் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்.

  

 

விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு   750/- 



கடைசிப் பூ

சிறார் சித்திரக்கதை (3)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)





கதாசிரியர் திரு.ஜேம்ஸ் குரோவர் தர்பர் குழந்தை எழுத்தாளர்,ஓவியர்,பத்திரிக்கையாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்.குழந்தைகளுக்காக அதிக காமிக்ஸ் புத்தகங்கள் எழுதி வெளியிட்டவர். ‘கடைசிப் பூ’ – 1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியபிறகு எழுதப்பட்ட கதை.உலக யுத்தத்திற்கு எதிராக எழுதப்பட்ட கதை.           


உலகப்போரின் போது அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்து போனார்கள்.மனித நாகரிகங்கள் அழிந்தன.கலாச்சாரங்கள் காணாமல் போயின.நகரங்கள் தகர்க்கப்பட்டன.மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரு பூ மட்டும் உயிர் பிழைத்தது.அந்தக் கடைசிப் பூவை காப்பாற்றியது யார்?

  

 

விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 



 ஆப்பிள் ஜானி

சிறார் சித்திரக்கதை (2)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)
























இதன் நூலாசிரியர் திருமதி.அலிகி லியாகுராஸ் ப்ரண்ட்பெர்கன்,குழந்தை இலக்கிய எழுத்தாளர் மற்றும் ஓவியர்.குழந்தைகளுக்காக60புத்தகங்கள் எழுதியவர்.சிறந்த குழந்தை இலக்கிய புத்தகங்களுக்கான’நியூயார்க் அறிவியல் கழக விருது’பெற்றவர்.  சுமார்240ஆண்டுகளுக்கு முன்னர்’ஜான் சாப்மென்’என்ற ஒருவர் அமெரிக்காவில் வாழ்ந்தார்.அவர் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆப்பிள் விதைகளை விதைத்தார்.பழங்குடியின மக்கள் பலர் அவரிடம் அன்போடு பழகினார்கள்.அவரை’ஆப்பிள் ஜானி’எனச் செல்லப்பெயர் வைத்து அழைத்தார்கள்.ஆப்பிள் ஜானி உலகில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்களைக் கவர்ந்த மனிதர்.  

  


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு 750/-



ராஜாவின் காலடி

சிறார் சித்திரக்கதை  (1)

(தமிழ்,  ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)

























ரு.ரால்ப் மில்லர்,ஜெர்மன் நாட்டவர்.குழந்தைகளின் கணிதத் திறனை வளர்க்க உதவும் சித்திரக்கதைகள் பல எழுதியவர். ‘ராஜாவின் காலடி’நிலையான அளவீடுகள் பற்றி சிறுவர்கள் அறிய உதவும் புத்தகம்.   அந்த நாட்டு மகாராஜா மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு,அவர்களுக்கு ஒரு விசேசமான பரிசுதர ஆசைப்பட்டார்.மகாராணி படுத்துறங்கத் தேவையான கட்டில் அரண்மனையில் இல்லை.எனவே அவர் ஓர் அழகான கட்டில் செய்ய தலைமை அமைச்சரிடம் உத்தரவு பிறப்பித்தார்.கட்டில் அளவு எவ்வளவு என்பது யாருக்கும் தெரியவில்லை.ஏனென்றால் உலகில் அதுவரை கட்டிலைப் பார்த்தவர் ஒருவர்கூட இல்லை.மகாராணிக்கு பிறந்தநாள் பரிசு கிடைத்ததா?அரண்மனைக்குள் நடந்தவை என்னவென்று தெரிந்துகொள்ள-கதையைப் படியுங்கள்.

  

•


விலை : 30/-

25 புத்தகத் தொகுப்பு  : 750/- 

Monday, June 1, 2020

அமைதி என்பது நாமே
திக் நியட் ஹான்
தமிழில் : ஆசை
























வியத்நாமில் 1926ல் பிறந்த திக் நியட் , மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் தீயப் மரபிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது இருதரப்புக்கும் நடுநிலையாகச் செயல்பட்டவர். எந்த ஒரு சித்தாந்தத்தையும் அது பௌத்தமாக இருந்தாலும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கக்கூடாது என்ற கருத்தை போதித்து வருபவர். "அமைதி என்பது நாமே" என்ற இப்புத்தகம் நவீன ஆன்மீகக் கிளாசிக்காகப் புகழ்பெற்றது.


•

புத்தகத்திலிருந்து..............

வாழ்க்கை துன்பங்களால் நிறைந்திருக்கிறது, அதே சமயத்தில் பல அற்புதங்களாலும் நிறைந்திருக்கிறது. நீல வானம்போல, சூரிய ஒளிபோல, ஒரு குழந்தையின் கண்களைப் போல. துன்பப்படுதல் மட்டும் போதாது. வாழ்வின் அற்புதங்களுடனும் நாம் உறவுகொள்ள வேண்டும். அவை நமக்குள்ளேயே, நம் அனைவரைச் சுற்றிலும், எங்கேயும் எப்போதும் இருக்கின்றன.

நாம் மகிழ்ச்சியாக இருக்கவில்லையென்றால், நாம் மன அமைதியுன் இருக்கவில்லையென்றால், நம்மால் அமைதியையும் மகிழ்ச்சியையும் மற்றவர்களுடன் – நமது பிரியத்துக்குரியவர்களுடன் கூட , ஒரே வீட்டில் நம்முடன் வாழ்பவர்களுடன்கூட – பகிர்ந்து கொள்ள முடியாது. நாம் மனத்தில் அமைதியுடன் இருந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், நம்மால் மலரென மலர முடியும்.

•

விலை : 180/-
தொல்குடித் தழும்புகள்
(உலக சிறுகதைகள்)

செம்பேன் உஸ்மான்
தமிழில் : லிங்கராஜா வெங்கடேஷ்











ஆப்பிரிக்க வாழ்வானது  நமது மரபில் இருந்து முற்றாக அந்நியப்பட்டு தெரிவதில்லை  என்பதை ஆப்பிரிக்க இலக்கியங்களை வாசிப்பவர் உணரக்கூடும்.சினுவா ஆச்சிபி போன்ற ஆளுமைகளின் படைப்புகள் தமிழில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் நன்கு அறிவோம். அந்த வரிசையில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மேலும் ஒரு எழுத்தாளர் தமிழுக்கு அறிமுகமாகிறார். அவர்தான் "செம்பேன் உஸ்மான்". செனகல்  நாட்டை சேர்ந்த இவர் இலக்கியவாதி மட்டுமல்லாது திரைப்பட இயக்குனரரும் கூட ! ஆப்பிரிக்க இலக்கியத்தின் மைய்ய களமான காலனி ஆதிக்க வரலாறு, பின்காலனியம், அடிமை வணிகம் ஆகியவற்றுடன் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் பற்றிய வாழ்வியலும் இந்த புத்தகத்தில் பதிவாகிறது.

கலப்பை பதிப்பகத்தின் வாயிலாக "தொல்குடித் தழும்புகள் " என்ற பெயரில்  செம்பேன் உஸ்மானின் சிறுகதைத் தொகுப்பு வெளியாகிள்ளது. தமிழில் லிங்கராஜா வெங்கடேஷ் அவர்கள் மூல படைப்பின் தன்மையை குலைக்காமல் தமிழாக்கம் செய்திருக்கிறார்.


•



விலை : 180/-









பூண்டுப்பெண்

(சோவியத் மக்களது நாட்டுக் கதைகள்)

உலகச் சிறந்த சிறார் கதைகள்

தமிழில் : ரா. கிருஷ்ணையா






குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள் நவரத்தின மலை என்னும் பெருநுலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநுலின் கதைகளை, நான்கு சிறு நுல்களாகக் கொண்டு வரும் முயற்சியில் முதல் கதைத் தொகுப்பு இது.

குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேசமும் மிகுந்து செழித்திருக்கும் இக்கதைகள், அதியற்புத நிலையில் நமக்கான அறவுணர்வும், மதிக்கத்தக்க விழுமியங்களும் நிறைந்துகிடப்பதைச் சொல்கின்றன.


•


விலை : 140/-


சிங்கமும் முயலும்

(சோவியத் மக்களது நாட்டுக் கதைகள்)

உலகச் சிறந்த சிறார் கதைகள்

தமிழில் : ரா. கிருஷ்ணையா





குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள் நவரத்தின மலை என்னும் பெருநுலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநுலின் கதைகளை, நான்கு சிறு நுல்களாகக் கொண்டு வரும் முயற்சியில் முதல் கதைத் தொகுப்பு இது.

குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேசமும் மிகுந்து செழித்திருக்கும் இக்கதைகள், அதியற்புத நிலையில் நமக்கான அறவுணர்வும், மதிக்கத்தக்க விழுமியங்களும் நிறைந்துகிடப்பதைச் சொல்கின்றன.

•

விலை : 160/-


மூன்று சகோதரர்களும் தந்தையின் புதையலும்

(சோவியத் மக்களது நாட்டுக் கதைகள்)

உலகச் சிறந்த சிறார் கதைகள்

தமிழில் : ரா. கிருஷ்ணையா








குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள் நவரத்தின மலை என்னும் பெருநுலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநுலின் கதைகளை, நான்கு சிறு நுல்களாகக் கொண்டு வரும் முயற்சியில் முதல் கதைத் தொகுப்பு இது.

குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேசமும் மிகுந்து செழித்திருக்கும் இக்கதைகள், அதியற்புத நிலையில் நமக்கான அறவுணர்வும், மதிக்கத்தக்க விழுமியங்களும் நிறைந்துகிடப்பதைச் சொல்கின்றன.

•

விலை : 120/-

ஓநாயும் நாயும் பூனையும்

(சோவியத் மக்களது நாட்டுக் கதைகள்)

உலகச் சிறந்த சிறார் கதைகள்























குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள் நவரத்தின மலை என்னும் பெருநுலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநுலின் கதைகளை, நான்கு சிறு நுல்களாகக் கொண்டு வரும் முயற்சியில் முதல் கதைத் தொகுப்பு இது.

குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேசமும் மிகுந்து செழித்திருக்கும் இக்கதைகள், அதியற்புத நிலையில் நமக்கான அறவுணர்வும், மதிக்கத்தக்க விழுமியங்களும் நிறைந்துகிடப்பதைச் சொல்கின்றன.

•

விலை : 130/-















இந்தியப் பாம்புகள்


ரோமுலஸ் விடேகர்

தமிழாக்கம் :  ஹென்றி பிரான்சிஸ்























இந்தியாவில் பொதுவாகத் தென்படும் பாம்புகளைப் பற்றி அறிய இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பாம்புகளைப் பற்றிய ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். நஞ்சுள்ள மற்றும் நஞ்சற்ற இந்தியப் பாம்புகளில் 30 வகைகளைப் பற்றி விரிவாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. பாம்புகளின் உறைவிடங்கள், பழக்கங்கள், உணவு ஆகியவற்றையும் விளக்குகிறது. பாம்புக் கடிகள் பற்றிய புள்ளி விபரங்கள், மருத்துவ சிகிச்சை, பல்வேறு பாம்புகளின் பெயர்கள், அறிவியல் பெயர்கள் ஆகியவையும் விவரிக்கப்பட்டுள்ளது.

•

உலகில் பாம்புகளில் 2000 வகைப்பிரிவுகள் உள்ளன. இந்தியாவில் 100 மிமீ நீளமுடைய புழுப்பாம்புகள் முதல் 6 மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பு வரையிலான 200 வகைப்பிரிவுகள் உள்ளன. இவை யாவும் பல்வேறு உறைவிடங்களில் வாழ்கின்றன. கடல்கள், பாலைவனங்கள், சதுப்புநிலங்கள், ஏரிகள், விளைநிலங்கள், மலைகள், காடுகள் ஆகிய இடங்களில் மட்டுமல்லாது இமயமலையின் 5000 மீட்டர் உயரமுள்ள பனிச்சருக்குகளிலும் கூட வாழ்கின்றன. இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பாம்புகளை இனங்கான உதவும் என்று நம்புகிறேன்.

•


விலை : 75/-
















Tuesday, May 26, 2020

நீர் எழுத்து


(தமிழகத்தின் தண்ணீர் ஆவணம்)

நக்கீரன்


















நீரினால் எழுதிய எழுத்து அழியும் என்பர். இது அழியாத நீர் எழுத்து. சங்க காலம் தொடங்கி சமகாலம் வரைக்குமான தமிழ்நாட்டின் ஈராயிரம் ஆண்டு கால நீர் வரலாற்றை பதிவு செய்யும் முயற்சி. அனைத்து கோணத்திலும் தமிழகத்தின் நீரியல் குறித்து ஆய்வு செய்த முதல் தமிழ் புத்தகமும் இதுவே என்று நம்புகிறேன். சங்க இலக்கியத்திலிருந்து சர்வதேச ஆவணங்கள் வரை நுற்றுக்கும் அதிகமான புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆவணங்கள் என ஏராளமான தரவுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குமரி தொடங்கி ராஜஸ்தான் ஈறாகக் குறுக்கும் நெடுக்குமாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணங்கள் இந்தப் புத்தகத்தின் களஆய்வுகளுக்காக மேற்கொள்ளப்பட்டன.

முதல் இயலான "நீர் அதிகாரம்" சர்வதேச அரசியலோடு தொடங்கினாலும் வருங்காலத்தில் அது எப்படி தமிழ்நாட்டின் தண்ணீர்க் குழாய்களை கைப்பற்றப் போகிறது என்கிற அபாயத்தை முன்னறிவிக்கிறது.

கிணறுகளின் வகைகளை விவரிப்பதோடு "குளம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்கிறது "நீர் நிலைகள்" என்கிற ஐந்தாம் இயல்.

சிக்கல்களை மட்டுமே பேசாது அதற்கான தீர்வுகளையும் பேசுவதே இறுதி இயல். பொலிவியாவோ பள்ளிக்கரணையோ அடிப்படை நீர் அரசியல் ஒன்றே. உலக நாடுகள் தொடங்கி உள்ளுர் மக்கள் வரை நீர்ச் சிக்கல் தீர கையாண்ட வழிமுறைகளைக் குறித்து ஏராளமான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றாவது நமக்கான தீர்வை அடையாளம் காட்டிடலாம்.

•

விலை : 250/-


















காடோடி 

(நாவல்)

நக்கீரன்
























நினைவில் காடுள்ள விலங்கு எளிதில் அடங்குவதில்லை. நினைவிலேயே கால் நுற்றாண்டு காலம் வாழ்ந்த காடொன்று இப்பிரதிக்கு இடம் மாறியுள்ளது. எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்து தொண்ணுறு தொடக்கம் வரையிலான சுமார் நான்காண்டுகளுக்கு மேலான காலகட்டம் அது. ஒரு மழைக்காட்டின் அழிவுக்கு சாட்சியாக வாழ்ந்த காலம். ஆம், அப்போது ஒரு வெட்டுமர நிறுவனத்தின் சார்பாக ஒரு மழைக்காட்டினைக் கொன்றோம்.

காடு என்பது கனவு நிலமோ அல்லது கவர்ச்சி மிகுந்த சுற்றுலாத் தலமோ அன்று. இப்போது காடுகள் குறித்துப் பேசுவதும் கானுலா செல்வதும் மேட்டுக்குடிக்கும் மேல்நடுத்தரக்குடிக்கும் உயர்வகைப் பொழுதுபோக்கு. தொலைக்காட்சியைப் பார்க்கையில் இவர்கள் அமர்ந்துள்ள இருக்கைகள், அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இருக்கைகள், ஒரு மழைக்காட்டின் மரத்தினால் செய்யப்பட்டவை என்ற அறிவைக் கொண்டிருப்பதே காடு குறித்த அறிதல்.

மழைக்காடு என்பது வெறுமனே மரங்களின் தொகுப்பு அல்ல. மண் முதல் மரம்வரை, பூச்சி முதல் பறவை வரை, ஓடை முதல் அருவி வரை, தேவாங்கு முதல் தொல்குடி வரை ஒன்றோடொன்று பிணைந்து வாழும் பல்லுயில் உலகம். அப்படிப்பட்ட காட்டின் நிலவியலை துல்லியமாக விவரித்துச் சொல்லும் அதேவேளை காட்டுக்கு உரிமை கொண்டாடாமல் அக்காட்டின் உயிரினங்களுள் ஒன்றாகவே தம்மைக் கருதி வாழும் தொல்குடிகளின் வாழ்வியலையும் அறிதலுக்கு உட்படுத்துகிறது இப்பிரதி.

•

விலை : 300/-


























திணையியல் கோட்பாடு


பாமயன்
























ஆங்கிலேயர்கள் நம்மிடையே புகுத்திய மெக்காலே கல்விமுறை அல்லது "கிளார்க் வேலை கல்விமுறை" நமது சிந்தனை முறைமையில் தேவையற்ற விசயங்களை ஏற்றிவைத்திருக்கிறது. அதன் காரணமாக ஆங்கிலேய கல்வி,  ஐரோப்பிய நவீன அறிவியல் போன்றவை உயர்ந்தவை என்ற கருத்து நமது மூளையில் ஏற்றப்பட்டுவிட்டது. அதனால், நமது மரபு சார்ந்த அறிவை இரண்டாம் தரமானதாகவே கருதுகிறோம்.

நமது மரபு, அறிவியல், வளம் பற்றி நீண்ட காலமாகப் பேசி வரும் பாமயன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ஒரு பக்கம் எழுத்து மூலம் சூழலியல் உணர்வை வளர்த்து வரும் இவர், மற்றொருபுறம் நமது பாரம்பரிய வேளாண் முறைகளைக் கொண்டு அடிசில் என்ற இயற்கை வேளாண் பண்ணையையும் நடத்தி வருகிறார்.

அவரது தேர்ந்த மொழிநடையும், அறிவியலை எப்படி சிறப்பாக பேச முடியும் என்பதையும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.


(ஆதி வள்ளியப்பன்)

•


விலை : 60/-















உழவின் திசை


(இந்திய விவசாயத்தின் பாதைக்கு நாம் கொடுக்கப்போவது எதை?)

அ. முத்துக்கிருஷ்ணன்























பசுமைப்புரட்சி தந்த பரிசுகள் ஒரு போர் வந்து உண்டாக்கும் சத்தமான அழிவினைப் போலல்லாமல் சத்தமேயின்றி வந்து விவசாயத்தில் பேரழிவுகளை உண்டாக்கிவிட்டது. எங்களுக்கு பதிலென்ன என்று விவசாயிகள் கேட்டால் ஓடஓட விரட்டியடிக்கிறது அரசாங்கத்தின் லத்திக் கம்புகள்.

எலிக்கறி தின்று, பட்டினி கிடந்து, மொட்டையடித்து, அரை உடை உடுத்தி நீதி கேட்டுப் போனார்கள் தமிழக விவசாயிகள். எவ்வளவு தூரம் வெறுத்துப்போயிருந்தால், நாங்களும் அரை உடை உடுத்தி நிற்போம் என்று முடிவு செய்திருப்பார்கள் பெண்களும்.

நமது விதை மணிகள் எங்கே? பசிய வயல்கள் எங்கே? உழவு மாடும் ஏரும் கலப்பையும் எங்கே? என்று கேட்க வேண்டிய மைக்குகளும் கேமராக்களும் பளபளக்கும் வேறுபக்கம் நோக்கித் திருப்பிக்கொண்டு நிற்கும் இந்தக் காலத்தில் ஆறாத காயங்களுடன் கதறும் இந்திய விவசாயத்தின் குரலைப் பேசுகின்றன "உழவின் திசை" கட்டுரைகள்.

•

விலை : 100/-













Saturday, May 23, 2020

என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா


ச. மாடசாமி























தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச. மாடசாமி. பல்லாண்டு காலம் கல்லுரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும், பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா. மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யேகமான மெல்லிய நகைச்சுவையோடும் ஆழத்தை எளிதில் வெளிக்காட்டாத எளிய சொல்லாடலோடும் இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்.

•

பள்ளியும் பண்பாட்டு புரட்சியும், தப்பித்த குரங்குகள் முக்கியமானவை, ஒவ்வொரு அவமதிப்பும் ஒரு மரணம், ஜென் வகுப்பறைகள் முதலான 10 கட்டுரைகளின் தொகுப்பு.

•

விலை : 80/-












இந்தியக் கல்வியின் இருண்ட காலம்?


தேசிய கல்விக்கொள்கை குறித்த கட்டுரைகள்

















பொதுவாக ஒரு நாட்டை ஆளும் வர்க்கம் அதன் அரசியல் பொருளாதார தன்மைகளுக்கு ஏற்றவாறு அந்நாட்டின் கல்வி முறையை வைத்துக் கொள்ளும்.

இந்த நெருக்கடிகளின் ஊடாக இந்திய அரசியலில் மீண்டும் இந்திய மண்ணில் ஒரு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வகுப்புவாத பலம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

இப்போது இந்த வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஆபத்துகளை தடுக்க வேண்டிய பணிகளை உடனடியாக செயல்படுத்துவது, அதற்கான திட்டங்களை வகுப்பது, செய்ய முன் வைப்பது, செயல்பாட்டாளர்களுக்கு ஆரோக்கியமான போராட்ட திட்டங்களை அறிந்துகொள்ள உதவுவது என பலவற்றை முன்வைத்து இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கையின் மீதான முதல் விமர்சன புத்தகமாக இரு வெளிவருகிறது.

•

விலை : 80/-












மந்திர மரம்தாம்போய் குழந்தைக் கதைகள்


தொகுப்பு : ச. முருகபூபதி
























உலகில் நாள்தோறும் புதுப்புது ஜீவராசிகள் பிறப்பதுபோல் குழந்தைகளிடமும் புதுப்புதுக் கதைகள் பிறந்து கொண்டே இருக்கிறது. இன்றைய குழந்தைகள் கதைகளையே கேட்பதில்லை டிவி பெட்டிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என பெரியவர்களாகிய நாம் கூச்சல் போடுவதெல்லாம் சுத்தப்பொய். இது குழந்தைகளிடமிருந்து விலகியவர்கள் சொல்லும் பேச்சுகளாகும். அவர்களுக்கு நாம் முக்கியமாகச் செய்ய வேண்டிய பணி சுதந்திரத்தின் பன்முகப் பாதைகளை, புரிய வைக்க வேண்டும். சில நாட்களாவது அவர்களது நண்பனாக, சமவயதுக்காரர்களாக இருக்க முயற்சிப்பதே நாம் செய்ய வேண்டிய செயல்களும் கடமையுமாகும்.

குழந்தைகள் கதைசொல்லுதலின் போக்கில் கதையின் அமைப்பிற்குள் இயங்கும் தொடர்ச்சியின்மைக்குள் இருக்கும் புதுகதை வகையினை நாம் கவனிக்க வேண்டும். அம்மாதிரியான இடைவெளிகளின் கலை எளிமையினைக் குழந்தைகள் மட்டுமே உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். முடிவற்ற தொடர்ச்சியின்மையினை உருவாக்கி அதைப் புதுவகை பாணியாக்கித் திரும்பவும் தொடர்ச்சி தொட்டுத் தொடர்ச்சியின்மை. திறக்கும் விந்தை அவர்களுக்கே உரிய இலக்கண விதியாக இருக்கலாம். இங்கே தொகுக்கப்பட்டுள்ள கதைகளுக்குள் நாம் கூர்ந்து கவனித்தால் நாடகத்திற்கான நிகழ்வெளி வெகு இயல்பாக இயங்கிக் கொண்டிருப்பதையும் நாம் கவனிக்கலாம்.

•

கதைசொல்லிகள் ஜெயஸ்ரீ  (5ம் வகுப்பு), முத்தீஸ்வரி   (5ம் வகுப்பு),  பிரவீண்  (4ம் வகுப்பு) மற்றும் சிவா அரவிந்த் உருவாக்கியுள்ள இந்த கதைகளுக்கு அபராஜிதன், மணிவண்ணன், நரேந்தர், கிருஷ்ணப்பிரியா, பேய்க்காமன் போன்ற தமிழின் மிக முக்கிய ஓவியர்கள் சித்திரங்கள் வரைந்துள்ளனர்.

•

விலை : 120/-

















மூன்று ஆண்டுகள்

அந்தோன் சேகவ் 

தமிழில் அ.கிருஷ்ணமூர்த்தி



















மூன்று ஆண்டுகள்’ கதை பூரணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860-1904) 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புக்களில் ஒன்றாகும். டாக்டரின் மகளான யூலியாவுக்கும் அலெக்ஸேய் லாப்தேவ் என்ற கோடீசுவர வணிகருக்கும் திருமணம் நடைபெறுகிறது. அது காதல் திருமணம் அல்ல. பாழான பணத்துக்காக நடந்த திருமணமும் அல்ல.

லாப்தேவ் தன் இளம் மனைவியுடன் மாஸ்கோவுக்குப் போய் மூன்று வருடங்கள்தான் முடிந்திருக்கின்றன. ஆனால் இந்தக் குறுகிய காலத்துக்குள் லாப்தேவின் மனதில், தன் மனைவி யோடும் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களோடும் அவருடைய உறவுகளில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆசிரியர் இந்தக் கதைக்குக் ‘குடும்ப வாழ்க்கைக் காட்சிகள்’ என்று துணைத் தலைப்புக் கொடுக்க விரும்பினார். ஆனால் ‘மூன்று ஆண்டுகள்’ என்ற இந்தக் கதை இன்னும் விரிவான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

வலிமையான, இனிமையான மக்களைப் பற்றி, ஆனந்தமான, சுதந்திரமான காதலைப் பற்றி அந்தோன் சேகவின் அழியாக் கற்பனை இக்கதையில் பிரதிபலிக்கிறது.


•


விலை   :  150/-

தங்கமான எங்கள் ஊர்


முஸ்தாய் கரீம்

தமிழில் : பூ. சோமசுந்தரம்
























"தங்கமான எங்கள் ஊர்" நல்ல பையன்களைப் பற்றிய கதை. அவர்கள் சில வேளைகளில் தப்பு செய்கிறார்கள், அசட்டுத்தனம் பண்ணுகிறார்கள், எத்தனையோ விதமான குற்றங்கள் புரிகிறார்கள். ஆனாலும் அவர்கள் இனிய அன்புள்ள குழந்தைகள். உங்கள் வயதுதான் அவர்களுக்கும். ஆனால் அவர்கள் வேறு நாட்டில் நீங்கள் வசிக்கும் நிலைமைகளுக்கு மாறான நிலைமைகளில் வசிப்பவர்கள்.

குழந்தைகளுக்காக எழுதும் முஸ்தாய் கரீமை பற்றி சில வார்த்தைகள் :

குழந்தைகளுக்கான நல்ல புத்தகங்களை எழுதுவதற்கு ஒருவர் நல்ல கற்பனை உள்ளவராகவும் அறிவாளியாகவும் நல்லவராகவும் மட்டும் இருந்தால் போதாது. வாழ்க்கையை அனுபவித்திருக்க வேண்டும். துன்பமும் இன்பமும் உள்ள வாழ்க்கையை நன்கு அனுபவித்திருக்க வேண்டும்.

யுத்தத்துக்குப் பிறகு வந்த கடினமான ஆண்டுகளில் வளர்ந்த சோவியத் சிறுவர்களும் சிறுமிகளும் இந்த நெடுங்கதையை விரும்புகிறார்கள். காரணம், இது நேர்மையானது உண்மையானது. சிறு வாசகர்களுடன் ஆசிரியர் இதில் ஆழ்ந்த தோரணையில் பெரியவர்களிடம் பேசுவதுபோல பேசுகிறார். குழந்தைகளுக்கான சில புத்தகங்களில் இருக்குமே, "ஐயோ என் சின்னக்கண்ணே, ஐயோ என் அழகுக் கண்ணே, எங்கே, நான் உன்னை முத்தம் கொஞ்சுகிறேன்" என்று, அதெல்லாம் இதில் கிடையாது.

செர்கேய் பரூஸ்தின்

•

விலை : 150/-















  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...