Tuesday, May 26, 2020

நீர் எழுத்து


(தமிழகத்தின் தண்ணீர் ஆவணம்)

நக்கீரன்


















நீரினால் எழுதிய எழுத்து அழியும் என்பர். இது அழியாத நீர் எழுத்து. சங்க காலம் தொடங்கி சமகாலம் வரைக்குமான தமிழ்நாட்டின் ஈராயிரம் ஆண்டு கால நீர் வரலாற்றை பதிவு செய்யும் முயற்சி. அனைத்து கோணத்திலும் தமிழகத்தின் நீரியல் குறித்து ஆய்வு செய்த முதல் தமிழ் புத்தகமும் இதுவே என்று நம்புகிறேன். சங்க இலக்கியத்திலிருந்து சர்வதேச ஆவணங்கள் வரை நுற்றுக்கும் அதிகமான புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆவணங்கள் என ஏராளமான தரவுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குமரி தொடங்கி ராஜஸ்தான் ஈறாகக் குறுக்கும் நெடுக்குமாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணங்கள் இந்தப் புத்தகத்தின் களஆய்வுகளுக்காக மேற்கொள்ளப்பட்டன.

முதல் இயலான "நீர் அதிகாரம்" சர்வதேச அரசியலோடு தொடங்கினாலும் வருங்காலத்தில் அது எப்படி தமிழ்நாட்டின் தண்ணீர்க் குழாய்களை கைப்பற்றப் போகிறது என்கிற அபாயத்தை முன்னறிவிக்கிறது.

கிணறுகளின் வகைகளை விவரிப்பதோடு "குளம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்கிறது "நீர் நிலைகள்" என்கிற ஐந்தாம் இயல்.

சிக்கல்களை மட்டுமே பேசாது அதற்கான தீர்வுகளையும் பேசுவதே இறுதி இயல். பொலிவியாவோ பள்ளிக்கரணையோ அடிப்படை நீர் அரசியல் ஒன்றே. உலக நாடுகள் தொடங்கி உள்ளுர் மக்கள் வரை நீர்ச் சிக்கல் தீர கையாண்ட வழிமுறைகளைக் குறித்து ஏராளமான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றாவது நமக்கான தீர்வை அடையாளம் காட்டிடலாம்.

•

விலை : 250/-


















காடோடி 

(நாவல்)

நக்கீரன்
























நினைவில் காடுள்ள விலங்கு எளிதில் அடங்குவதில்லை. நினைவிலேயே கால் நுற்றாண்டு காலம் வாழ்ந்த காடொன்று இப்பிரதிக்கு இடம் மாறியுள்ளது. எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்து தொண்ணுறு தொடக்கம் வரையிலான சுமார் நான்காண்டுகளுக்கு மேலான காலகட்டம் அது. ஒரு மழைக்காட்டின் அழிவுக்கு சாட்சியாக வாழ்ந்த காலம். ஆம், அப்போது ஒரு வெட்டுமர நிறுவனத்தின் சார்பாக ஒரு மழைக்காட்டினைக் கொன்றோம்.

காடு என்பது கனவு நிலமோ அல்லது கவர்ச்சி மிகுந்த சுற்றுலாத் தலமோ அன்று. இப்போது காடுகள் குறித்துப் பேசுவதும் கானுலா செல்வதும் மேட்டுக்குடிக்கும் மேல்நடுத்தரக்குடிக்கும் உயர்வகைப் பொழுதுபோக்கு. தொலைக்காட்சியைப் பார்க்கையில் இவர்கள் அமர்ந்துள்ள இருக்கைகள், அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இருக்கைகள், ஒரு மழைக்காட்டின் மரத்தினால் செய்யப்பட்டவை என்ற அறிவைக் கொண்டிருப்பதே காடு குறித்த அறிதல்.

மழைக்காடு என்பது வெறுமனே மரங்களின் தொகுப்பு அல்ல. மண் முதல் மரம்வரை, பூச்சி முதல் பறவை வரை, ஓடை முதல் அருவி வரை, தேவாங்கு முதல் தொல்குடி வரை ஒன்றோடொன்று பிணைந்து வாழும் பல்லுயில் உலகம். அப்படிப்பட்ட காட்டின் நிலவியலை துல்லியமாக விவரித்துச் சொல்லும் அதேவேளை காட்டுக்கு உரிமை கொண்டாடாமல் அக்காட்டின் உயிரினங்களுள் ஒன்றாகவே தம்மைக் கருதி வாழும் தொல்குடிகளின் வாழ்வியலையும் அறிதலுக்கு உட்படுத்துகிறது இப்பிரதி.

•

விலை : 300/-


























திணையியல் கோட்பாடு


பாமயன்
























ஆங்கிலேயர்கள் நம்மிடையே புகுத்திய மெக்காலே கல்விமுறை அல்லது "கிளார்க் வேலை கல்விமுறை" நமது சிந்தனை முறைமையில் தேவையற்ற விசயங்களை ஏற்றிவைத்திருக்கிறது. அதன் காரணமாக ஆங்கிலேய கல்வி,  ஐரோப்பிய நவீன அறிவியல் போன்றவை உயர்ந்தவை என்ற கருத்து நமது மூளையில் ஏற்றப்பட்டுவிட்டது. அதனால், நமது மரபு சார்ந்த அறிவை இரண்டாம் தரமானதாகவே கருதுகிறோம்.

நமது மரபு, அறிவியல், வளம் பற்றி நீண்ட காலமாகப் பேசி வரும் பாமயன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ஒரு பக்கம் எழுத்து மூலம் சூழலியல் உணர்வை வளர்த்து வரும் இவர், மற்றொருபுறம் நமது பாரம்பரிய வேளாண் முறைகளைக் கொண்டு அடிசில் என்ற இயற்கை வேளாண் பண்ணையையும் நடத்தி வருகிறார்.

அவரது தேர்ந்த மொழிநடையும், அறிவியலை எப்படி சிறப்பாக பேச முடியும் என்பதையும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.


(ஆதி வள்ளியப்பன்)

•


விலை : 60/-















உழவின் திசை


(இந்திய விவசாயத்தின் பாதைக்கு நாம் கொடுக்கப்போவது எதை?)

அ. முத்துக்கிருஷ்ணன்























பசுமைப்புரட்சி தந்த பரிசுகள் ஒரு போர் வந்து உண்டாக்கும் சத்தமான அழிவினைப் போலல்லாமல் சத்தமேயின்றி வந்து விவசாயத்தில் பேரழிவுகளை உண்டாக்கிவிட்டது. எங்களுக்கு பதிலென்ன என்று விவசாயிகள் கேட்டால் ஓடஓட விரட்டியடிக்கிறது அரசாங்கத்தின் லத்திக் கம்புகள்.

எலிக்கறி தின்று, பட்டினி கிடந்து, மொட்டையடித்து, அரை உடை உடுத்தி நீதி கேட்டுப் போனார்கள் தமிழக விவசாயிகள். எவ்வளவு தூரம் வெறுத்துப்போயிருந்தால், நாங்களும் அரை உடை உடுத்தி நிற்போம் என்று முடிவு செய்திருப்பார்கள் பெண்களும்.

நமது விதை மணிகள் எங்கே? பசிய வயல்கள் எங்கே? உழவு மாடும் ஏரும் கலப்பையும் எங்கே? என்று கேட்க வேண்டிய மைக்குகளும் கேமராக்களும் பளபளக்கும் வேறுபக்கம் நோக்கித் திருப்பிக்கொண்டு நிற்கும் இந்தக் காலத்தில் ஆறாத காயங்களுடன் கதறும் இந்திய விவசாயத்தின் குரலைப் பேசுகின்றன "உழவின் திசை" கட்டுரைகள்.

•

விலை : 100/-













Saturday, May 23, 2020

என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா


ச. மாடசாமி























தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச. மாடசாமி. பல்லாண்டு காலம் கல்லுரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும், பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா. மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யேகமான மெல்லிய நகைச்சுவையோடும் ஆழத்தை எளிதில் வெளிக்காட்டாத எளிய சொல்லாடலோடும் இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்.

•

பள்ளியும் பண்பாட்டு புரட்சியும், தப்பித்த குரங்குகள் முக்கியமானவை, ஒவ்வொரு அவமதிப்பும் ஒரு மரணம், ஜென் வகுப்பறைகள் முதலான 10 கட்டுரைகளின் தொகுப்பு.

•

விலை : 80/-












இந்தியக் கல்வியின் இருண்ட காலம்?


தேசிய கல்விக்கொள்கை குறித்த கட்டுரைகள்

















பொதுவாக ஒரு நாட்டை ஆளும் வர்க்கம் அதன் அரசியல் பொருளாதார தன்மைகளுக்கு ஏற்றவாறு அந்நாட்டின் கல்வி முறையை வைத்துக் கொள்ளும்.

இந்த நெருக்கடிகளின் ஊடாக இந்திய அரசியலில் மீண்டும் இந்திய மண்ணில் ஒரு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வகுப்புவாத பலம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

இப்போது இந்த வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஆபத்துகளை தடுக்க வேண்டிய பணிகளை உடனடியாக செயல்படுத்துவது, அதற்கான திட்டங்களை வகுப்பது, செய்ய முன் வைப்பது, செயல்பாட்டாளர்களுக்கு ஆரோக்கியமான போராட்ட திட்டங்களை அறிந்துகொள்ள உதவுவது என பலவற்றை முன்வைத்து இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கையின் மீதான முதல் விமர்சன புத்தகமாக இரு வெளிவருகிறது.

•

விலை : 80/-












மந்திர மரம்தாம்போய் குழந்தைக் கதைகள்


தொகுப்பு : ச. முருகபூபதி
























உலகில் நாள்தோறும் புதுப்புது ஜீவராசிகள் பிறப்பதுபோல் குழந்தைகளிடமும் புதுப்புதுக் கதைகள் பிறந்து கொண்டே இருக்கிறது. இன்றைய குழந்தைகள் கதைகளையே கேட்பதில்லை டிவி பெட்டிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என பெரியவர்களாகிய நாம் கூச்சல் போடுவதெல்லாம் சுத்தப்பொய். இது குழந்தைகளிடமிருந்து விலகியவர்கள் சொல்லும் பேச்சுகளாகும். அவர்களுக்கு நாம் முக்கியமாகச் செய்ய வேண்டிய பணி சுதந்திரத்தின் பன்முகப் பாதைகளை, புரிய வைக்க வேண்டும். சில நாட்களாவது அவர்களது நண்பனாக, சமவயதுக்காரர்களாக இருக்க முயற்சிப்பதே நாம் செய்ய வேண்டிய செயல்களும் கடமையுமாகும்.

குழந்தைகள் கதைசொல்லுதலின் போக்கில் கதையின் அமைப்பிற்குள் இயங்கும் தொடர்ச்சியின்மைக்குள் இருக்கும் புதுகதை வகையினை நாம் கவனிக்க வேண்டும். அம்மாதிரியான இடைவெளிகளின் கலை எளிமையினைக் குழந்தைகள் மட்டுமே உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். முடிவற்ற தொடர்ச்சியின்மையினை உருவாக்கி அதைப் புதுவகை பாணியாக்கித் திரும்பவும் தொடர்ச்சி தொட்டுத் தொடர்ச்சியின்மை. திறக்கும் விந்தை அவர்களுக்கே உரிய இலக்கண விதியாக இருக்கலாம். இங்கே தொகுக்கப்பட்டுள்ள கதைகளுக்குள் நாம் கூர்ந்து கவனித்தால் நாடகத்திற்கான நிகழ்வெளி வெகு இயல்பாக இயங்கிக் கொண்டிருப்பதையும் நாம் கவனிக்கலாம்.

•

கதைசொல்லிகள் ஜெயஸ்ரீ  (5ம் வகுப்பு), முத்தீஸ்வரி   (5ம் வகுப்பு),  பிரவீண்  (4ம் வகுப்பு) மற்றும் சிவா அரவிந்த் உருவாக்கியுள்ள இந்த கதைகளுக்கு அபராஜிதன், மணிவண்ணன், நரேந்தர், கிருஷ்ணப்பிரியா, பேய்க்காமன் போன்ற தமிழின் மிக முக்கிய ஓவியர்கள் சித்திரங்கள் வரைந்துள்ளனர்.

•

விலை : 120/-

















மூன்று ஆண்டுகள்

அந்தோன் சேகவ் 

தமிழில் அ.கிருஷ்ணமூர்த்தி



















மூன்று ஆண்டுகள்’ கதை பூரணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860-1904) 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புக்களில் ஒன்றாகும். டாக்டரின் மகளான யூலியாவுக்கும் அலெக்ஸேய் லாப்தேவ் என்ற கோடீசுவர வணிகருக்கும் திருமணம் நடைபெறுகிறது. அது காதல் திருமணம் அல்ல. பாழான பணத்துக்காக நடந்த திருமணமும் அல்ல.

லாப்தேவ் தன் இளம் மனைவியுடன் மாஸ்கோவுக்குப் போய் மூன்று வருடங்கள்தான் முடிந்திருக்கின்றன. ஆனால் இந்தக் குறுகிய காலத்துக்குள் லாப்தேவின் மனதில், தன் மனைவி யோடும் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களோடும் அவருடைய உறவுகளில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆசிரியர் இந்தக் கதைக்குக் ‘குடும்ப வாழ்க்கைக் காட்சிகள்’ என்று துணைத் தலைப்புக் கொடுக்க விரும்பினார். ஆனால் ‘மூன்று ஆண்டுகள்’ என்ற இந்தக் கதை இன்னும் விரிவான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

வலிமையான, இனிமையான மக்களைப் பற்றி, ஆனந்தமான, சுதந்திரமான காதலைப் பற்றி அந்தோன் சேகவின் அழியாக் கற்பனை இக்கதையில் பிரதிபலிக்கிறது.


•


விலை   :  150/-

தங்கமான எங்கள் ஊர்


முஸ்தாய் கரீம்

தமிழில் : பூ. சோமசுந்தரம்
























"தங்கமான எங்கள் ஊர்" நல்ல பையன்களைப் பற்றிய கதை. அவர்கள் சில வேளைகளில் தப்பு செய்கிறார்கள், அசட்டுத்தனம் பண்ணுகிறார்கள், எத்தனையோ விதமான குற்றங்கள் புரிகிறார்கள். ஆனாலும் அவர்கள் இனிய அன்புள்ள குழந்தைகள். உங்கள் வயதுதான் அவர்களுக்கும். ஆனால் அவர்கள் வேறு நாட்டில் நீங்கள் வசிக்கும் நிலைமைகளுக்கு மாறான நிலைமைகளில் வசிப்பவர்கள்.

குழந்தைகளுக்காக எழுதும் முஸ்தாய் கரீமை பற்றி சில வார்த்தைகள் :

குழந்தைகளுக்கான நல்ல புத்தகங்களை எழுதுவதற்கு ஒருவர் நல்ல கற்பனை உள்ளவராகவும் அறிவாளியாகவும் நல்லவராகவும் மட்டும் இருந்தால் போதாது. வாழ்க்கையை அனுபவித்திருக்க வேண்டும். துன்பமும் இன்பமும் உள்ள வாழ்க்கையை நன்கு அனுபவித்திருக்க வேண்டும்.

யுத்தத்துக்குப் பிறகு வந்த கடினமான ஆண்டுகளில் வளர்ந்த சோவியத் சிறுவர்களும் சிறுமிகளும் இந்த நெடுங்கதையை விரும்புகிறார்கள். காரணம், இது நேர்மையானது உண்மையானது. சிறு வாசகர்களுடன் ஆசிரியர் இதில் ஆழ்ந்த தோரணையில் பெரியவர்களிடம் பேசுவதுபோல பேசுகிறார். குழந்தைகளுக்கான சில புத்தகங்களில் இருக்குமே, "ஐயோ என் சின்னக்கண்ணே, ஐயோ என் அழகுக் கண்ணே, எங்கே, நான் உன்னை முத்தம் கொஞ்சுகிறேன்" என்று, அதெல்லாம் இதில் கிடையாது.

செர்கேய் பரூஸ்தின்

•

விலை : 150/-















தஸ்தயெவ்ஸ்கி சிறுகதைகள்


தமிழில் :  எம்.ஏ. சுசீலா


























மனித மனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை அவற்றுள்ஒ பொதிந்திருக்கும் மகத்துவங்களை எழுத்தென்னும் சிற்றகலாக துலக்கி அவற்றின் மீது மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி, தஸ்தயெவ்ஸ்கி. அவரது ஒவ்வொரு படைப்பையும் படிக்கும் கணமும் அதைவிட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை.

தஸ்தயெவ்ஸ்கியின் மொயிபெயர்ப்பில் முனையும்போது அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்ல முடிவதும், அவர் பெற்ற அகக்காட்சிகளை, அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் ஓர் அரிய அனுபவம்.

•

கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும், நேர்மையான திருடன், ஒரு மெல்லிய ஜீவன் என்ற 3 கதைகளின் தொகுப்பு இது.

•

விலை : 180/-











Wednesday, May 20, 2020

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்


ஏ. சண்முகானந்தம்
முனைவர் சா. செயக்குமார்
























பறவைகள் காப்பிடங்கள் ஏன்? எதற்கு? எப்படி?

இயற்கை, உயிரினங்களோடு இணைந்த எளிய வாழ்வை மேற்கொண்டிருந்தவரை மனிதர்களுக்கு காப்பிடங்கள் குறித்த பார்வை இல்லாமல் இருந்தது. பறவைகள் காப்பிடங்களுக்கான வரலாற்றை, தொழிற்புரட்சி தொடங்கிய காலத்தோடு இணைத்துக் காண்பது பொருத்தமாக இருக்கும். இன்று அதன் அடுத்த கட்டமாக உலகின் பெரும்பாலான நாடுகள் பறவைகள் அதிக இடங்களில் கூடும் இடங்களை காப்பிடங்களாக அறிவித்து பாதுகாத்து வருகின்றன. பறவை நோக்கல், ஆய்வு, கணக்கெடுப்பு போன்றவைகளுக்கான முக்கிய இடமாக பறவைகள் காப்பிடங்கள் விளங்கி வருகின்றன.

ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்பே இந்திய நிலப்பரப்பிலும் காப்பிடங்கள் உருவாக ஆரம்பித்தன. அந்த வரிசையில், இந்திய அளவில் வேடந்தாங்கல் பழமையான காப்பிடங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக நானும், ஆய்வாளராக சா. செயக்குமாரும் தமிழகத்தின் பல பறவைகள் காப்பிடங்களுக்கு சென்று வந்துகொண்டிருந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக புத்தகத்திற்குத் தேவையான குறிப்புகளை பல்வேறு புத்தகங்கள், இதழ்கள், நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் திரட்டி முடிந்தவரை முழுமைப்படுத்தியுள்ளோம்.

ஏ. சண்முகானந்தம்

•


தமிழகத்தில் உள்ள 16 பறவைகள் காப்பிடங்களைப் பற்றிய விரிவான அறிமுகமும் அந்தந்த நிலக்காட்சிகளும் பறவைகளும் தரமான தாளில் வண்ணப்படங்களுடன் இடம் பெற்றுள்ளது.

•

விலை : 500/-









 







வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்


ஏ. சண்முகானந்தம்























மனிதர்கள் பிழைப்புக்காகவோ அல்லது வெள்ளம், புயல், பூகம்பம், போர்கள் போன்ற காரணங்களுக்காகவோ தாங்கள் ஏற்கனவே வசித்திருந்த பகுதிகளைவிட்டு இடம்பெயர்ந்து செல்வதை புலம் பெயர்தல் என்கிறோம். அதேபோல் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் வாழும் பறவை இனங்கள் தாம் வாழும் இடங்களைவிட்டு நெடுந்தூரம் பறந்து வருகின்றன. சில பறவைகள் சுமார் 5000 கிமீ வரையிலும் வேறு நாடுகளுக்குப் பறந்து வந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் மீண்டும் தம் பழைய வாழிடங்களுக்குத் திரும்புகின்றன. இந்த நிகழ்வுக் "வலசை போதல்" எனப் பறவையியலாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

அவை வாழுமிடங்களில் பனிப்பொழிவு, இருப்பிடச்சிக்கல், உணவுப்பற்றாக்குறை, இனப்பெருக்கம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நெடுந்தூரம் பறந்து வலசை வந்து திரும்பிச்செல்கின்றன. பண்டைய காலங்களில் சிக்கல்கள் ஏதுமின்றி வந்துபோய்க்கொண்டிருந்தன. கடந்த இரு நுற்றாண்டுகளில்தான் வலசை சென்று வருவதில் பறவைகள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

இவ்வகை இடையூறுகள் வளர்ச்சி என்ற பெயரில்தான் பெரும்பாலும் நேர்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து வலசைப் பறவைகள் உலகெங்கும், தமிழ்நாடு - இந்தியா உட்பட நமது அண்டை நாடுகளிலும் எவ்வாறெல்லாம் வலசை சென்றுவந்தன என்ற முழு விபரங்களும் அரிய புகைப்படங்களுடன் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

•


பறவைகள் மற்றும் அதன் வாழிடங்களின் வண்ணப்படங்கள் இணைக்கப்பட்ட பெரிய அளவிலான புத்தகம்.

•


விலை : 160/-













Saturday, May 16, 2020

பூச்சிகளின் தேசம்


கோவை சதாசிவம்


















ஐந்து அறிவுதானே என்று மட்டுப்படுத்தப்படும் பூச்சி இனங்களின் மகத்துவத்தைச் சொல்லும் புத்தகம் இது.

எறும்புகள், கரையான்கள், கரப்பான்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, சிலந்தி , தேனீ போன்ற சிற்றுயிர்கள் குறித்த அபூர்வமான தகவல்களை வாசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

காடு பார்த்தல் என்பது இன்று வளர்ந்துவரும் ஒரு நல்ல பொழுதுபோக்குக் கலை. அந்தப் பாணியில் இந்தக் கட்டுரைகள் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.


•

விலை : ரூ. 120/-











உயிர்ப்புதையல்


கோவை சதாசிவம்



















மலைத்தொடர்களைக் காணும் ஒரு கவிமனதில் துடிப்புகளாக 22 கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், நதிகள், கடற்கரைகள் என இயற்கையின் கூறுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அறிய வேண்டிய அரிய தகவல்களுடன் இயற்கையைத் தாயாகவும் காடுகளைக் குலசாமியாகவும் உளமார நம்புகிற ணர்வுப்பூர்வமான ஒரு மனதின் வெளிப்பாடாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. நாளெல்லாம் இயற்கையைச் சீண்டிக்கொண்டிருக்கும் மனிதனை வலுவான வார்த்தைகளால் வாதங்களால் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது இந்தப் புதையல்.

•

விலை : 110/-











நம்ம கழுதைநல்ல கழுதை


கோவை சதாசிவம்




















பூவுலகில் பொதி சுமப்பதற்காக ஓர் உயிரினம் பிறக்குமா?

கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா?

கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா?

முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்?

கேள்விகள் பிறக்கும் மனதில் பதில்களும் பிறக்கின்றன....

உயிரின வரலாற்றைப் பேசும் பசுமை இலக்கியப்படை வரிசையில்
"நம்ம கழுதை நல்ல கழுதை"

•


விலை : 25/-












உயிரைக் குடிக்கும் புட்டிநீர்


நக்கீரன்






















உலகைக் குப்பையாக்கும் புட்டிநீர் மனித உடலையும் நோய்களின் குப்பைக் கிடங்காக மாற்றுகிறது. புற்றுநோயை வரவழைக்கும் பென்சீன் குடும்பத்தைச் சேர்ந்த கச்சா எண்ணெயிலிருந்து உருவாக்கப்படும் பாரா சைலின், "பெட்" எனும் ஞெகிழிப்புட்டி உருவாக்கத்தில் முதன்மைப் பொருளாகப் பயன்படுகிறது. காலிப்புட்டிகளால் உருவாகும் குப்பைகளும் மாபெரும் சிக்கல். அவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பது பொய். முன்னேறிய நாடுகளான அய்க்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலேயே முறையே 88%, 86%  புட்டிகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை.

•


விலை : 50/-










கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்


நக்கீரன்
























ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் "நீரின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நீர் நிலைகள் அவ்வளவு தூய்மையாக மிளிர்கின்றன. காரணம் அந்நாட்டில் சாயப்பட்டறைகளோ தோல்பதனிடும் ஆலைகளோ கிடையாது. தமக்குத் தேவையான ஆடைகளையும் காலணிகளையும் அந்நாடு இறக்குமதி மட்டுமே செய்து கொள்கிறது. பின்ஏன் அது நீரின் நகரமாக இருக்காது?

வளர்ந்த நாடுகள் நீரை மாசாக்கும் தொழில்களை நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தலையில் கட்டிவிட்டு மறைநீர் இறக்குமதியை மேற்கொள்கின்றன. இதனால்தான் ஒரு காலத்தில் 34 சிற்றாறுகளும் 120 கால்வாய்களும் இணைந்து ஓடிய நம் நொய்யல் இன்று நைந்து கிடக்கிறது.

(புத்தகத்திலிருந்து.....)

•

விலை : 30/-













அன்னை வயல்(நாவல்)


சிங்கிஸ் ஐத்மாத்தவ்
தமிழில் : பூ. சோமசுந்தரம்
























பாசிச ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய மாபெரும் போரைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல். அப்போரில் ஒரு தாய் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்ட நிலையில் நன்மையின் மீதும் மனித குலத்தின் மீதும் தான் கொண்டிருந்த நம்பிக்கையை சிறிதும் இழக்கவில்லை. எளிமையின் உறைவிடமான அத்தாயின் சோகமயமான கதையை காவியமாக வடித்திருக்கிறார் ஐத்மாத்தவ். உலகத்தில் மிகச் சிறந்தது, மிகவும் அழகானது ஒரு அன்னையின் தூய நல்லிதயமே என்பதை உணர்த்திச் சொல்லும் இந்நாவல் ஈடிணையற்ற ஓர் அன்னையைப் பற்றிய அழியாச் சித்திரமாகும்.


•

விலை : 85/-












காவேரி சமவெளியைக் கொல்லும் 

கச்சா எண்ணெய்


சா. காந்தி
























புத்தகத்தின் ஆசிரியர் திரு. சா. காந்தி அவர்கள் தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியியலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். "தமிகழத்தில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும்", "மூடப்படம ரேசன் கடைகள்" போன்ற புத்தகங்களை எழுதியவர். தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

காவேரி டெல்டாவில் பொதிந்திருக்கும் எண்ணெய் வளத்தைக் குறித்தும், அதனை எடுத்து கோடி கோடியாய் லாபம் சம்பாதிக்க துடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் குறித்தும், இதன் காரணமாக நமது உணவுச் சமவெளியைப் பாலைவனமாக்கத் துடிக்கும் சதித்திட்டத்தினை அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார்.

எண்ணெயின் பொருளாதாரம் குறித்தும், மக்கள் எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் விரிவான ஆய்வினை மேற்கொண்டு இந்த புத்தகத்தினை எழுதியிருக்கிறார். நம் உணவுச் சமவெளியினை பாதுகாக்க நினைக்கிற அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய புத்தம்.

•

விலை : ரூ. 75/-















உடல் நலம் உங்கள் கையில்


அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
























சுமார் 8000 வருடங்களுக்கு முற்பட்ட சீனாவின் தாவோயிச தத்துவங்களில் அக்குபங்சர் மருத்துவ முறையின் கூறுகள் காணக்கிடைக்கின்றன. ஆதாரப்பூர்வமான சீன வரலாற்றின்படி கி.மு. 2697 - கி.மு. 2596 காலத்தில் வாழ்ந்த அரசர் ஒருவரால் (Hungdi) இந்த மருத்துவ விபரங்கள் முதன்முதலில் தொகுக்கப்பட்டன. இந்தப் புத்தகம்தான் அக்குபங்சரின் மூலநுலாகக் (Neijing) கருதப்படுகிறது.

அக்குபங்சர் மருத்துவத்தில் 4500 வருட வரலாற்றில் கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றி வந்த விவரங்களும், பல தலைமுறைகளக வம்சங்கள் பாதுகாத்த விவரங்களும், ஆயிரக்கணக்கான நுல்கள் மற்றும் வரைபடங்களில் வெளியான விவரங்களும் அடங்கியுள்ளன.

அக்குபங்சர் என்ற இந்த சீன மருத்துவமுறை 19ம் நுற்றாண்டில் உலகம் முழுக்க பரவத் தொடங்கியது. இன்று உலகில் நுற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சிகிச்சைக்கு பயன்பட்டு வரும் இம்முறை 1962ல் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பல நாடுகளில் அக்கு பங்சருக்கான பல்கலைக்கழகங்களும் கல்லுரிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் 1980களிலேயே அக்குபங்சர் முறை பரவிவிட்டது.

•


சுவை உணர்வும் மன உணர்ச்சியும், நோய் முதல் நாடி, ராஜாக்களின் குறைபாடு, நலமாதலின் வரலாறு, மருத்துவர்களாக மாறிய நோயாளிகள் முதலான 17 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.

•

விலை : 80/-










அடிப்படை உடலியல்

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்

























மனிதனுக்கு தன் உடலைப் பற்றிய சிந்தனை தோன்றிய ஆதிகாலத்தில் இருந்தே, உடல் உறுப்புகளைப் பற்றிய தேடலும் புரிதலும் ஏற்படத் தொடங்கியது. பண்டைய மக்கள் தங்கள் உள்ளுணர்வுகள் மூலமும் தேடலின் மூலமும் உடல் இயங்கியலை விளங்க முயன்றார்கள். தமிழகத்தின் சித்த மருத்துவம், வட இந்தியாவின் ஆயுர்வேதம், பாரசீகத்தின் யுனானி மருத்துவம், சீனாவின் அக்குபங்சர் .... என உலகம் முழுவதும் ஏறக்குறையே ஒரே காலத்தில் மரபுவழி மருத்துவங்கள் தோன்றின.


மரபு அறிவியலின் உடற்செயலியல் நவீன சிந்தனைகளின் வழியாக முழுமையை நோக்கி நகர்த்தப்பட்டது. ஆகப்பெரிய ஆராய்ச்சிகள் மனித உடலின் மீது நடந்துகொண்டே இருந்தாலும் இன்னும் பல ரகசியங்களை தனக்குள் தக்க வைத்துக்கொண்டே இருக்கிறது நம் உடல்.

மரபு வழி அறிவியலின் அடிப்படையில்  நவீன ஆய்வுகளின் தொடர்ச்சியாக மனித உடலியலைப் புரிந்துகொள்ள முயல்வதே இக்கட்டுரைகளின் நோக்கம்.

•


விலை : 140/-

















  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...