குழந்தைகளும் குட்டிகளும்
ஓல்கா பெரோவ்ஸ்கயா / தமிழில் : ருக்மணிதியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிரான்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்புப் பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு புகட்டுகின்றனர். அவற்றை தங்களோடு விளையாடப் பழக்குகின்றனர். அவை நோயுறும்போது கவலை கொள்கின்றனர். மாற்றாக அந்த விலங்குகளும் சிறுமிகளோடும் அவர்கள்தம் தாய தந்தையரோடும் தங்களது விசுவாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தி குதூகலித்துக் கொள்கின்றன.
இவற்றை வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் எல்லா விலங்குகளோடும் இதுவரையிருந்திராத அன்பும் தோழமை உணர்வும் பொங்கிப் பிரவாகிப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
•
விலை : ரூ. 180/-

No comments:
Post a Comment