வனவாசி
விபூதி பூஷண் வந்த்யோபாத்யாய
வனவாசியுடன் திரிகையில் ......
தனிமனிதனின் அனுபவப் பகிர்வாகப் புனையப்பட்ட இந்நாவலில் இயற்கை வளம் கொழிக்கும் ஒரு வனத்தின் பல்வேறு பண்புகளும் அவ்வனத்தைச் சார்ந்து வாழ்கின்ற மக்களின் வறுமை மிகுந்த எளிய வாழ்வும் இயல்பாக எடுத்து வைக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கையை நகர்த்தும் பொருட்டு நகர் ஒன்றிலிருந்து, வெறிச்சென்றிருக்கும் வனம் ஒன்றிற்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி வரும் கதைசொல்லியின் மனஉணர்வுகள், வனத்தின் தனிமை தாளாமல் ஓரிரு மாதங்களில் நகரத்திற்கே திரும்பிவிட வேண்டும் என்ற மனநிலையோடு வனத்தில் வேலையைத் தொடங்குவதும், பின்னர் தன்னையறியாமல் வனத்தின் இயற்கை வனப்பிற்குள் படிப்படியாகக் கரைந்துவிடுவதும், வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் வறுமையைப் போக்க முயல்வதும், விரைவில் அழியவிருக்கும் தன் விருப்பத்துக்குரிய வனத்திற்காக இரங்குவதும், இறுதியில் அந்த வனத்தின் அழிவிற்குத் தானே காரணமாகிவிட்டதை எண்ணிக் குற்றவுணர்வுடன் வருந்தி விடைபெறுவதும் எனப் படிநிலையாக விரிகின்றன.
நாவலில் இடம்பெறும் சிறப்புப் பெயர்களே இதனை ஒரு மொழிபெயர்ப்பு நாவலாக நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன. வனங்களில் கிடைக்கும் கனிம வளத்திற்காக அவ்வனங்களில் பல தலைமுறைகளாக வசித்துவரும் பழங்குடி இன மக்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுவரும் இன்றைய அரசியல் சூழலில் காடுகளை நேசிக்கக் கற்றுத்தரும் இந்த மொழிபெயர்ப்பு நாவலின் மீள்பதிப்பு தேவையான ஒன்றாகவே உள்ளது.
•
விலை : ரூ. 300/-
•

No comments:
Post a Comment