தமிழக கிராமிய விளையாட்டுகள்
குமரி ஆதவன்
சுமார் 5 ஆண்டுகளைச் செலவளித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அவற்றின் குக்கிராமங்களுக்கும் சென்று வயதில் முதிர்ந்தோரையும் அனுபவத்தில் உயர்ந்தோரையும் சந்தித்து, அவர்களது இளமைக்காலத்தை திரும்பிப் பார்க்க வைத்து, அவர்கள் விளையாடிய விளையாட்டுகளை எல்லாம் சொல்ல வைத்து, அதை மிகச் சரியாக, விளையாடும் முறைகளோடு பதிவு செய்ததோடு, அதற்குள்ளே மிகப்பெரிய ஆய்வையும் மேற்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 336 நபர்களை பேட்டி கண்டு, அவர்கள் கருத்துகளை முதன்மை ஆதாரமாகக் கொண்டு, அழிந்தும் அழியும் நிலையிலும் உள்ள 171 விளையாட்டுகளைத் தேடி கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என்பது நமக்குத் தெரியும். அவற்றை விளையாட்டுகளின் தன்மைகளுக்கு ஏற்ப, வாழ்வை பிரதிபலிக்கும் விளையாட்டுகள், அறநெறி கூறும் விளையாட்டுகள், அறிவுத் திறமை வளர்க்கும் விளையாட்டுகள், உடற்பயிற்சி விளையாட்டுகள், பொழுதுபோக்கு விளையாட்டுகள், கலைவடிவம் பெற்ற விளையாட்டுகள் எனப் பிரித்துள்ளார்.
கிராமிய விளையாட்டுகள் மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவை, வாழ்வு மதிப்பீடுகளை அன்றாடம் பயிற்றுவிப்பவை, மனிதரின் மனதை ஆட்சி செய்யும் நுட்பங்களைக் கற்றுத்தரும் உளவியல் மருத்துவத்தைச் செய்பவை.
(பொன்னீலன்)
•
விலை : 230/-

No comments:
Post a Comment