தட்டான்கள் - ஊசித்தட்டான்கள்அறிமுகக் கையேடு
ப. ஜெகநாதன்
ஆர். பானுமதி
தட்டான் என்பது பொதுச்சொல். இது தட்டான், ஊசித்தட்டான் இரண்டையும் குறிக்கும். சங்க இலக்கியங்களில் இவை தும்பிகள் என அறியப்படுகின்றன.
கூடுமானவரை, ஒரு தட்டானை எந்த நிலையில் கோணத்தில் பார்த்தால் எளிதில் அடையாளம் காண முடியுமோ அந்த நிலையில் கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களே இந்தக் கையேட்டில் தரப்பட்டுள்ளன. இந்தியாவில் சுமார் 503 வகை தட்டான்கள் தென்படுகின்றன.
தட்டான்கள் பற்றிய விரிவான அறிமுகமும், தட்டான்களுக்கு மனிதர்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும், அவற்றை பாதுகாப்பதன் அவசியம் பற்றியும், உயிர்ச்சூழலில் தட்டான்களின் பங்கு பற்றியும், தட்டான் பார்த்தலுக்கு உதவும் குறிப்புகளும், தட்டான்களை படமெடுக்கும்போது கவனிக்க வேண்டியவற்றையும், தட்டான்கள் சம்பந்தமான புத்தகங்களின் விபரங்களும் இணையதளங்களும் இந்தக் கையேட்டில் தரப்பட்டிருக்கின்றன.
பலவித தட்டான்கள் படங்களோடு 224 பக்கங்கள் கொண்ட விரிவான வண்ணப் புத்தகம் இது.
•
விலை : ரூ. 295/-

No comments:
Post a Comment