மேற்குத் தொடர்ச்சி மலைபல்லுயிரிய வளமும் பாதுகாப்பும்
மாதவ் காட்கில்
(தமிழில் : ஜீவா)
சுற்றுச்சூழலா? வளர்ச்சியா? என்ற கருத்துப்போர் இன்று சூடுபிடித்துள்ளது. இன்றைய சூழலில் இந்தியா சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற சுமையை சுமக்க முடியுமா? என்ற கேள்வி எழுவது தவிர்க்கவியலாது. அதற்காக அதிகார வர்க்கத்திடமும் சட்டத்தை மதிக்காதவர்களிடமும் அறிவியலைத் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்துகின்றவர்களிடம் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாமா என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று. மாறாக சட்டத்தை மதிப்பவர்களும் உண்மையான ஜனநாயகத் தன்மை கொண்டவர்களும் அறிவியலை மக்கள் நலனுக்கு பயன்படுத்துபவர்களும் விழிப்புணர்வு பெற்ற மக்களும் உரிமையுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
இதை ஜெர்மனி, ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள முடியும். சூழல் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை உண்மையுடனும் கண்டிப்புடனும் நடைமுறைப்படுத்த வேண்டும். கேடு பயக்கும் திட்டங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க மக்கள் ஒன்றுபட வேண்டும். நமது நலவாழ்வுக்கு ஆதாரமான இயற்கையையும் சுற்றுச்சூழலையும் கேடுபயக்காமல் வடிவமைப்பதும் காலத்தின் கட்டாயம்.
•
விலை : ரூ. 100/-

No comments:
Post a Comment