சுண்டெலி முதலைக் கதைகள்
ச. மாடசாமி
இந்தக் கதைகளில் சுண்டெலியும் முதலையும் பேசுகின்றன. குறும்பு செய்கின்றன. சாகசங்களில் குதிக்கின்றன. சுண்டெலி எளிய மனிதர்களின் அடையாளம். வெற்றி பெறுவதற்காக சில நேரங்களில் எலிகள் ஏமாற்றுவது போலத் தெரியும். அச்சுறுத்தல், கண்காணித்தல், கட்டாயப்படுத்துதல், திணித்தல், அதிகாரம் செலுத்தல், பலத்தைக் காட்டுதல் போன்றவை இருக்கும் வரை ஏமாற்றுதலும் இருக்கும். இருக்க வேண்டும். நம்முடைய அறிவுலகத்தில் முதலை ஒரு வஞ்சகமான முரட்டுத்தனமான ஆபத்தை விளவிக்கக்கூடிய விலங்கு. ஆனால், ஆதிவாசி மக்களின் கற்பனைக்கதைக் களத்தில், முதலை அப்பாவியாய் அசடாய் பொறுப்புள்ள குடும்பத்தலைவனாய் உலா வருவதைக் காண்கிறோம்.
மனிதர்களையும் பிற உயிர்களையும் நல்லது கெட்டது என்று பாகுபடுத்தியே குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோம். நல்லது கெட்டது என்று பிரித்துப் பிரித்து வைத்து விட்டால் எதைப் புரிந்துகொள்வது? யாரைப் புரிந்துகொள்வது?
•
ரூ. 70/-

No comments:
Post a Comment