Saturday, September 21, 2019

பெனி எனும் சிறுவன்


கிகோ புளுஷி


தமிழில் : யூமா வாசுகி























மலையின் உச்சிக்குச் சென்றால் ஆகாயத்தைக் கையால் தொடலாம் என்று எப்போதும் நான் நினைத்திருந்தேன். சன்னல் வழியாகப் பார்க்கும்போது, மலையின் மேல்பாகம் ஆகாயத்தை முட்டி நிற்பதாக உங்களுக்குத் தோன்றும் தானே. இப்போது நாங்கள் மலையின் உச்சியில் இருக்கிறோம். எங்களுக்குக் கீழ் கோர்க்கா நகரம் மிகவும் சிறியதாகத் தென்படுகிறது. என் கணக்குப் புத்தகத்தின் ஒரு ஏடு அளவே தெரிகிறது அது.  ஐந்து மாடிகள் உள்ள, மிக உயரமானது என நான் நினைத்திருந்த என் வீட்டைக்கூட காண முடியவில்லை. என்னால் ஆகாயத்தை தொடவும் முடியவில்லை. ஒருக்கால், பறவைகளுக்கு அந்த நீல நிற விதானத்தைத் தங்கள் அலகால் கொத்த முடியும் போலிருக்கிறது....

(நாவலிலிருந்து....)


நகரச்சூழலில் அம்மாவின் அதீத அன்பால் (நெருக்கடியால்) தன் விருப்பங்களை ஒவ்வொன்றாக இழந்து தனிமைப்படும் சிறுவன் பெனி. அவனது மலை கிராமத்து மாமா குழந்தைகள் வியப்போடு பார்க்கும் ஒரு குதிரையில் அவனைப் பார்க்க வருகிறார். பெனியின் பள்ளி விடுமுறை நாட்களில் மலை கிராமத்திற்கு அவனை குதிரையில் அழைத்துச் செல்கிறார்.  கோழை என மாமாவால் எப்போதும் கிண்டலுக்கு உள்ளாகும் பெனிக்கு அந்த மலை கிராமம் உணர்வால் புதுப்புது அனுபவங்களை பரிசளித்துக்கொண்டே இருக்கிறது. கிராமத்து சிறுவர்களின் இயல்பும், காட்டோடு அவர்கள் பழகும் தன்மையும் தன் மாமாவின் அருகாமையும் பெனிக்கு ஒரு புதிய பெனியை உருவாக்கித் தருகிறது. குழந்தைகள் இயல்பாக தங்களைத் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் கதையைச் சொல்லும் அல்பேனிய நாவல் பெனி எனும் சிறுவன்.


•

விலை : ரூ. 150/-













No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...