வீட்டுக்கு ஒரு மருத்துவர்
அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
நமது நாட்டு செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு செல்ல வந்த வெள்ளையர்கள் வெளியேறிவிட்டார்கள். அவர்களது கொள்ளை இன்னமும் தொடர்கிறது. அந்நியர்களது வணிக மருத்துவம் நம் நாட்டு அரசாங்கங்களின் செல்லப்பிள்ளையாகிப் போனது. பளபள விளம்பரங்கள், அலோபதி மருத்துவம் என்ற எரியும் நெருப்பில் விட்டில் பூச்சியாய் மக்கள் கவரப்பட்டு பொசுங்கிப் போகிறார்கள்.
புற்றுநோயும் மதுமோகமும் அதிகரித்த வண்ணம் உள்ளது என்று புள்ளிவிவரம் சொல்லுகிறது. புற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே வந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். ஆனால், நோய் முற்றிய பின்பே வருகிறார்கள் என்று மூத்த மருத்துவர்கள் தங்கள் ஏலாமையை மூடிமறைக்கிறார்கள். மற்றுமொரு தகவல் புற்றுநோயால் இறப்பவர்களைவிடவும், புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையால் இறப்பவர்களே அதிகம் என்று சொல்கிறது.
பல ஆண்டுகளாக சுயமரியாதையை இழந்து தமிழ்ச் சமுதாயம் தனது உடல் கூறும் மொழியைக்கூட மறந்துபோனது. அது பற்றித் தெளிவுபடுத்துகிறது "உடலின் மொழி", உண்ணும் உணவை வகைப்படுத்துகிறது "உணவோடு உரையாடு" நோயுற்றவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி பேசுகிறது "உடல் நலம் உங்களை கையில்",
"வீட்டுக்கு ஒரு மருத்துவர்" முதல் பதிப்பு வெளியானபோதே நான் இப்படி குறிப்பிட்டேன். "வீட்டுக்கு ஒரு மருத்துவர்" என்று இருப்பதைவிட "ஒவ்வொருவரும் மருத்துவரே" என்று இருப்பதே மிகப்பொருத்தம் என்று. தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும், பிறர் படிக்க கேட்கத் தெரிந்த எவரும் மருத்துவராக மாறுவதற்கு உரிய வழிகாட்டிகளாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
கோ. நம்மாழ்வார்
•
விலை : ரூ. 250/-

No comments:
Post a Comment