Sunday, September 8, 2019

பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்

(விளிம்புநிலைக் குழந்தைகள் சினிமா)

யமுனா ராஜேந்திரன்





















ஒரு திரைப்படம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது? என்ன அறிவுக்கு இட்டுச் செல்கிறது? குழந்தைகளின் முதிர்ச்சி நிலைக்கேற்ற உணர்வுகளை, அறிவைத் தூண்டுகிறதா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளே குழந்தைகளுக்கான படம் எது என்பதைத் தீர்மானிக்கும்.

தமிழ் இலக்கியத்தில் அழ. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள், பாரதியின் பாப்பாப் பாட்டு, சண்முக சுப்பையாவின் குழந்தைக் கவிதைகள் சாகா வரம் பெற்ற சிருஷ்டிகள். குழந்தைகள் இலக்கியம் செய்வது சாதாரண காரியம் இல்லை. அவர்களின் உலகம் பட்டாம்பூச்சியின் இறக்கையைப் போல் மெலிதானது. பெரியவர்களின் கவனக் குறைவில் அது உதிர்ந்துவிடும். பிரபஞ்சத்தின் ஆழமும் விடுகதையின் பூடகமும் தொல்பொருள் ஆய்வுக்கு எட்டாத மனக்குகை ஓவியங்களும் நிறைந்தது அவர்களின் மனம்.

குழந்தைகள் சினிமா இரு வகைகளில் செயல்படுகிறது. முதலாவது, பெரியவர்கள் தமது இழந்துவிட்ட பழிபாவமற்ற மனநிலையைப் பின்னாட்களில் திரும்பிப் பார்த்து சுயவிசாரணையில் ஈடுபட இவை தூண்டுகின்றன. இரண்டாவது வகை, குற்றமற்ற குழந்தைகளின் பால்யத்தை, பேதை மனநிலையை கொன்றுவிடாதிருக்கக் கூடிய பொறுப்புணர்ச்சியைப் பெரியவர்களிடம் இவை கோருகின்றன. குழந்தைகளைப் பற்றிய பொறுப்புணர்ச்சி என்பது நம்மைப் பொறுப்புள்ள மனிதர்களாக ஆக்கிக் கொள்வதிலும் தங்கியிருக்கிறது.


•

ரூ. 150/-
























No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...