நோய்க்கு அஞ்சேல்
(இயற்கை மருத்துவக் கோட்பாடு)
தமிழில் : போப்பு
மனித உடலானது இயந்திரக் கட்டுமானம் அல்ல. அதில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. ஒன்றிலிருந்து ஒன்று தாக்கம் பெறுபவை. உடல் அங்கங்களை தனித்தனியாக பிரித்து அறிய முயல்வதும், தனித்த சிகிச்சை அளிக்க முற்படுவதும் அறிவீனம் என்று நிறுவுகிறார் லிண்ட்லர்.
இன்று நம்மால் பரவலாக நம்பப்படுகிற மருத்துவக் கோட்பாட்டை தீவிரமான கேள்விக்கு உட்படுத்துகிறார். பல லட்சங்களையும் சொத்துகளையும் இழந்து உடலை பெரும் உபாதைகளுக்கு உட்படுத்தி இறுதியாக எளிய மருத்துவத்தின் மூலம் எளிய சிகிச்சைகள் மூலம் நம்பமுடியாத விரைவில் நிவாரணம் பெறுகிறவர்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில் இந்தப் புத்தகம் அதி முக்கியத்துவம் பெறும் ஒன்றாக இருக்கிறது.
புத்த தத்துவத்தின் பால் ஈடுபாடு கொண்டிருந்த அமெரிக்க மருத்துவர் லிண்ட்லர் எம்டி பட்டம் பெற்று தன்னுடைய தத்துவத்திற்கு உகந்த இயற்கை சிகிச்சை முறையே உடலுக்கு ஏற்றது என்பதை தொடர் ஆய்வின் மூலமாகவும் தனது இயற்கை சிகிச்சை பயில் முறையில் பெற்ற அனுபவத்தின் வாயிலாகவும் இயற்கை சிகிச்சை கோட்பாடே சிறந்தது என்ற முடிவிற்கு வருகிறார்.
1920ல் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் வெறும் தத்துவ தரிசனமாகவும், கோட்பாட்டு வாதமாகவும் இல்லாமல் ஒரு அனுபவப் பகிர்வாக இருப்பதால் எளிதில் தன்வயப்படுத்திக்கொள்ளும் தன்மையில் அமைந்திருப்பது நம் அதிர்ஷ்டமே.
முதல் வாசிப்பிலேயே உடல் பற்றிய நம் புரிதலை புரட்டிப்போடுவதோடு கூடுதலாக ஒவ்வொரு வாசிப்பிலும் பல உண்மைகளை ஆழமாக உணர்த்தக்கூடியது.
நோய் என்பது விபத்தோ, தண்டனையோ அல்ல. மனத்தடுமாற்றத்தால் நிகழ்ந்த தவறும் அல்ல. அது இயற்கை விதிமீறலின் தவிர்க்க முடியாத விளைவாகும். நாம் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டும் என்பதை அறிவுறுத்தி நெறிப்படுத்தும் லிண்ட்லர், மூச்சுப் பயிற்சி, பட்டினி கிடத்தல், சூரியக் குளியல், பழச்சாறுகள் ஆகியவற்றின் மூலம் நோயைக் குணப்படுத்துவதில் சிறந்த நிபுணராக விளங்கினார்.
•
விலை : ரூ. 210/-

No comments:
Post a Comment