நான் நடிகன் ஆன கதை
சார்லி சாப்ளின் / தமிழில் : சுராஎனக்கு சொந்தமாக ஒரு தந்தை இருக்கிறார் என்று எந்தச் சமயத்திலும் நான் நினைத்ததில்லை. அவர் எங்களுடன் தங்கியிருந்தது எனக்கு ஞாபகத்தில் இல்லை. அவரும் ஒரு நாடக நடிகர்தான். என் தந்தை பார்ப்பதற்கு நெப்போலியனைப் போல இருப்பார் என்று என் தாய் கூறுவார். கம்பீரமான குரலையும் நடிப்புத் திறமையையும் கொண்ட ஒரு நல்ல நடிகராக அவர் இருந்திருக்கிறார். அதனால் அந்தக் காலத்தில் அவருக்கு ஒரு வாரத்திற்கு நாற்பது டாலர் வருமானமாக கிடைத்திருக்கிறது. ஆனால், என் தந்தையின் அளவுக்கு மீறிய குடிப்பழக்கம் அவரை பலவிதப்பட்ட பிரச்னைகளிலும் சிக்க வைத்துவிட்டது. என் தாயும் தந்தையும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்ததற்கு முக்கிய காரணமே அதுவாகத்தான் இருந்திருக்கிறது. நகைச்சுவையும் வருத்தமும் கலந்துதான் என் தந்தையைப் பற்றிய கதைகளை என் தாய் கூறுவார்.
•
விலை : ரூ. 150/-

No comments:
Post a Comment