டோட்டோ சான்
ஜன்னலில் ஒரு சிறுமி
டெட்சுகோ குரோயாநாகிநான் டோமாயியைப் பற்றி எழுத இன்னும் ஏராளமாகச் செய்திகள் உள்ளன. ஆனால் டோட்டோ-சானைப் போன்ற ஒரு சிறுமி பெரியவர்களின் மிகச் சரியான வழிகாட்டுதலுடன் மற்றவர்களுடன் கூடிப்பழகும் வகையில் நல்ல பெண்ணாக எப்படி வளர்ந்தாள் என்பதை மற்றவர்களை உணரச் செய்தால் அதுவே போதுமானது என நினைக்கிறேன்.
குழந்தைகளைப் பலவந்தப்படுத்துதல் குறைவாகவும், பள்ளி இடைவிலகல் அதிகமில்லாமலும் டோமோயியைப் போல் உள்ள பள்ளிகள் இப்பொழுதுகூட இருக்கலாம். ஆனால் டோமோயியில் பள்ளி நேரம் முடிந்தபின் கூட குழந்தைகள் வீட்டிற்குப் போக விரும்பியதில்லை. அதே போல் காலையிலும் மாணவர்கள் பள்ளிக்கு வர அதிக நேரம் காத்திருப்பதில்லை. டோமோயி பள்ளி அப்படிப்பட்டதாகும்.
வியக்கத்தக்க இது போன்ற பள்ளியை அமைத்த நெடுநோக்கமும் உற்சாக ஊற்றும் கொண்ட திரு, கோபயாஷி 1893ல் டோக்கியோவிற்கு வடமேற்கில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.
குழந்தைகளின் சுயமதியாதையையும் தனித்தன்மையையும் வளர்க்கப்போதிய அளவிற்கு சுதநதிரமான பாடத்திட்டமும் குறைந்த அளவு மாணவர்களைக் கொண்ட வகுப்பும் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். கற்பது காலைவேளையில் நடைபெற்றது. மாலையில் உலாவச் செல்லுதல், தாவரங்களை சேகரித்தல், படம் வரைதல், பாடுதல், தலைமையாசிரியரின் உரையைக் கேட்டல் ஆகியவற்றில் செலவிடப்பட்டது. திரு. கோபயாஷி அவரது சிறப்பு முறையின் மீது அளவிட முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். பின்னாளில் அது போன்ற பாடத்திட்டத்தை உடைய டோமோயி பள்ளியை உருவாக்கினார்.
டோமோயி தற்போது இல்லை. ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்தபின் உங்கள் நினைவில் டோமோயி நிற்குமானால் அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சியாகும்.
இந்தப் புத்தகம் ஜப்பானில் வெளியாகியபின் ஆங்கிலத்தில் வெளியவதற்கு முன் குறிப்பிடத்தக்க பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. முதலில் இந்தப் புத்தகம் எதிர்பாராத அளவிற்கு விற்பனை ஆன புத்தகமாக ஆகியிருந்தது. ஜப்பானின் புத்தக வெளியீட்டில் ஒரே ஆண்டில் 45,00,000 பிரதிகள் விற்பனையாகி சிறிய டோட்டோசான் வரலாறு படைத்தது.
•
விலை : ரூ. 105/-

No comments:
Post a Comment