மந்திர மரம்தாம்போய் குழந்தைக் கதைகள்
தொகுப்பு : ச. முருகபூபதி
உலகில் நாள்தோறும் புதுப்புது ஜீவராசிகள் பிறப்பதுபோல் குழந்தைகளிடமும் புதுப்புதுக் கதைகள் பிறந்து கொண்டே இருக்கிறது. இன்றைய குழந்தைகள் கதைகளையே கேட்பதில்லை டிவி பெட்டிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என பெரியவர்களாகிய நாம் கூச்சல் போடுவதெல்லாம் சுத்தப்பொய். இது குழந்தைகளிடமிருந்து விலகியவர்கள் சொல்லும் பேச்சுகளாகும். அவர்களுக்கு நாம் முக்கியமாகச் செய்ய வேண்டிய பணி சுதந்திரத்தின் பன்முகப் பாதைகளை, புரிய வைக்க வேண்டும். சில நாட்களாவது அவர்களது நண்பனாக, சமவயதுக்காரர்களாக இருக்க முயற்சிப்பதே நாம் செய்ய வேண்டிய செயல்களும் கடமையுமாகும்.
குழந்தைகள் கதைசொல்லுதலின் போக்கில் கதையின் அமைப்பிற்குள் இயங்கும் தொடர்ச்சியின்மைக்குள் இருக்கும் புதுகதை வகையினை நாம் கவனிக்க வேண்டும். அம்மாதிரியான இடைவெளிகளின் கலை எளிமையினைக் குழந்தைகள் மட்டுமே உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். முடிவற்ற தொடர்ச்சியின்மையினை உருவாக்கி அதைப் புதுவகை பாணியாக்கித் திரும்பவும் தொடர்ச்சி தொட்டுத் தொடர்ச்சியின்மை. திறக்கும் விந்தை அவர்களுக்கே உரிய இலக்கண விதியாக இருக்கலாம். இங்கே தொகுக்கப்பட்டுள்ள கதைகளுக்குள் நாம் கூர்ந்து கவனித்தால் நாடகத்திற்கான நிகழ்வெளி வெகு இயல்பாக இயங்கிக் கொண்டிருப்பதையும் நாம் கவனிக்கலாம்.
•
கதைசொல்லிகள் ஜெயஸ்ரீ (5ம் வகுப்பு), முத்தீஸ்வரி (5ம் வகுப்பு), பிரவீண் (4ம் வகுப்பு) மற்றும் சிவா அரவிந்த் உருவாக்கியுள்ள இந்த கதைகளுக்கு அபராஜிதன், மணிவண்ணன், நரேந்தர், கிருஷ்ணப்பிரியா, பேய்க்காமன் போன்ற தமிழின் மிக முக்கிய ஓவியர்கள் சித்திரங்கள் வரைந்துள்ளனர்.
•
விலை : 120/-

No comments:
Post a Comment