ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
தமிழில் : உஷா தரன்இரண்டாவது உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படைகள் நிகழ்த்திய அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் நேருக்குநேர் பார்த்த ஒரு யூதச் சிறுமி எழுதி வைத்துவீட்டுப் போன நாட்குறிப்புகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகம் இப்போது முதன்முறையாக தமிழில் வருகிறது.
பதிமூன்று வயதான யூதச்சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனி பிராங்க் டச்சு மொழியில் இந்த டயரியை எழுதியிருக்கிறாள்.
ஜூன் 14 1942ல் டயரி துவங்குகிறது, முதல் 22 நாட்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை விவரிக்கும் இந்த நாட்குறிப்பு அதன் பிறகு 1944 வரையான அவர்களின் ஒளிந்துவாழும் காலத்தைப் பதிவு செய்துள்ளது.
காகிதம் மனிதர்களை விடவும் பொறுமையானது, அந்தப் பொறுமையை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு இடத்தில் ஆனி குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
•
விலை ரூ. 300/-

No comments:
Post a Comment