உயிர்க்கொல்லி நோய்கள் :
மீண்டும் வருகிறதா ஆபத்து?
அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
உளவியல் என்பது மனிதர்களுக்குத்தானே இருக்கும். நோய்களுக்கும் இருக்குமா?
அமெரிக்காவில் நாஷ்வில் என்ற ஊரில் இருந்த சாம் லாண்டி என்ற நபருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதாக அவரது மருத்துவரால் கண்டறியப்பட்டது. புற்றுநோய் கடைசிக் கட்டத்தை எட்டி விட்டதாலும் சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்குப் போய்விட்டதாலும் சாம் லாண்டி இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் இறந்துவிடுவார் என்றும் மருத்துவர் கூறினார். அதேபோல் அவர் மரணமடைந்தார்.
புற்றுநோய் முற்றிப்போய் ஒருவர் மரணமடைவதில் என்ன புதுமை இருக்கிறது ? இப்படி நோயாளிகள் இறப்பது வழக்கமான விசயம் தானே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இங்குதான் விசயமே இருக்கிறது. அப்படி மரணமடைந்த சாம் லாண்டியின் உடல் மறுபடியும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவரது உணவுக்குழாயில் புற்றுநோய் இருந்த தடங்களோ, அதற்கான கூறுகளோ சிறிதளவும் இல்லை என்பது பரிசோதனையின் முடிவு. அப்படியானால் லாண்டி எப்படி மரணமடைந்தார்?
அமெரிக்காவின் மரபணு ஆய்வாளர் டாக்டர். புரூஸ் லிப்டன் கூறுவதைக் கேளுங்கள். "புற்றுநோயே இல்லாத ஒரு நோயாளியை அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், சில தினங்களில் இறந்துபோவார் என்று நம்பவைத்தால் அந்த நோயாளி மரணமடைவது சாத்தியமே. ஏனென்றால் பயம் என்னும் உணர்ச்சி நல்ல ஆரோக்கியமான மனிதரை மரணத்தை நோக்கித் தள்ளும் ஆயுதம்".
வெறுமனே ஒன்றிரண்டு மரணங்களையும் அதன் பரிசோதனை முடிவுகளையும் வைத்து இந்த முடிவு எட்டப்படவில்லை. பல்வேறு வகையான பயன்பாட்டு சோதனைகளின் அடிப்படையில்தான் மரபணு அறிவியல் பயம் பற்றிய தன் கருத்தை முன்வைக்கிறது.
•
உமர் பாரூக்கின் சமீபத்திய இந்த புத்தகம் நோய்களின் உளவியல், தடுப்பூசி : அறிஞர்களும் சமூக விரோதிகளும், அதிகரிக்கும் வீட்டுப் பிரசவங்கள், டெங்கு : சீசன் பீதிகளும் நிலையான ஆரோக்கியமும், நோய்கள் முளைக்கும் சமையலறை முதலான 16 கட்டுரைகளை உள்ளடக்கியது.
•
விலை : 120/-

No comments:
Post a Comment