இனி விதைகளே பேராயுதம்
கோ. நம்மாழ்வார்
புத்தகத்திலிருந்து ...........
வாழ்வாதாரத்தை சிதைத்த "பச்சைப் புரட்சி"க்கு அக்காலத்தில் "தீவிர சாகுபடித்திட்டம்" என்பது பெயர். இந்தியாவில் ஏழு மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்தினார்கள். போர்டு நிறுவனத்தின் உதவியோடு ஆறு பாயும் நிலங்களில் இதை செயல்படுத்தினார்கள். ஜப்பானின் குட்டை நெல் ரகங்களை, புதிய உரவகைகளை அறிமுகம் செய்தார்கள். இதில் பெரிய வெற்றி கிடைத்ததாக அறிவித்து திட்டத்தை இந்தியா முழுவதிலும் செயல்படுத்த விரும்பினார்கள். பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்ட 69ல் அறிமுகமான ஐ.ஆர். 8 நெல்லை மக்கள் வெறுத்து ஒதுக்கினார்கள். காரணம் ருசியில்லை, பூச்சித்தாக்குதலும் அதிகம். அப்போது மணிலாவில் உள்ள IRRI நிறுவனத்திலிருந்து வந்த ஐ.ஆர். 20, ஐ.ஆர். 50 ரகங்களும் இன்று புழக்கத்தில் இல்லை. 74 ரகங்களை உற்பத்தி செய்தாலும் ஒரு ரகம் கூட வெற்றி பெறவில்லை.
இன்றைய காலகட்டத்தில் இயற்கை உழவாண்மை ஒரு கட்டாயத் தேவை.
•
விலை : 80/-

No comments:
Post a Comment